Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
ஏன்மா இதெல்லாம் ஃபேஷனாம்மா??? # Fashion Fails - புகைப்படங்கள்
முன்பெல்லாம் அழகான உடைகளை வடிவமைப்பது தான் ஃபேஷனாக இருந்தது. இப்போது உடையே உடுத்தாமல் இருப்பது ஃபேஷனாகிவிட்டது.
முன்பெல்லாம் அழகான உடைகளை வடிவமைப்பது தான் ஃபேஷனாக இருந்தது. இப்போது உடையே உடுத்தாமல் இருப்பது ஃபேஷனாகிவிட்டது. பெரும்பாலான உலக மாடல் அழகிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை சென்று பார்த்தீர்கள் என்றால்.. இது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு தெரியும். ஃபேஷனில் கவர்ச்சி இருக்கலாம்... ஆனால், இப்போது கவர்ச்சி மட்டுமே ஃபேஷனாக மாறிவிட்டது.

புதுமை என்பது மறந்து... யூனிக், வித்தியாசம்.. கிரியேட்டிவ் என்ற பெயரில் கிழிந்த ஆடைகள் தான் இப்போது ஃபேஷனாக மாறிவருகிறது. அதிலும், சிலர் தங்கள் கிரியேட்டிவ் அறிவை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஃபேஷனை ஒருவழி செய்துவிடுகிறார்கள். இதோ! அந்த வகையில் ஃபேஷனை கதற, கதற கொலை செய்த சில டிசைன்கள்....

அத ஏன் வீணா உருட்டிக்கிட்டு...
பிதாமகன் படத்துல சூர்யாவ பார்த்து மனோபாலா சொல்லுவாப்புல... அத ஏன் வீணா உருட்டிக்கிட்டு... அப்படியே எடுத்து வெச்சுக்க வேண்டியது தானேன்னு... அப்படி தான் இருக்கு இந்த ஃபேஷனும்... அத ஏன் வீணா போட்டுக்கிட்டு... ஏன்மா போட்டிருக்க பேண்ட்ல எங்கயாச்சும் ஓட்ட, ஒடசல் இருந்தா பரவாயில்ல.. மொத்த பேண்டுமா ஓட்டையா இருக்கும். நீங்களே பாருங்க மகாஜனங்களே... பழைய பேப்பர் கடைக்காரன் கூட இத எடைக்கு எடுத்துக்க மாட்டான்.

எதுக்க்க்கு!
அடடே! ஆச்சரியம்... புலின்னு நம்ம ஊருல ஒரு படம் எடுத்தாங்க... அது ஃபேண்டசி படமா, வரலாற்று படமா, காமெடி படமான்னு எடுத்த டைரக்டருக்கும் தெரியாது, பார்த்த ரசிகர்களுக்கும் தெரியாது. அப்படியான ஒரு ரிசல்டு தான் இந்த படத்துல நீங்க பார்க்குறதும். அதென்ன கேசுவல் செருப்புக்கு ஏதோ கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ்ல வரவங்க போட்டிருக்க மாதிரி ஒரு டிசைனு.??!!

மீன் பிடிக்கவா...
இந்த ட்ரெஸ் யாருக்கு உதவுதோ இல்லையோ... மீனவ மக்களுக்கு நல்லாவே உதவும். அவங்க இத காலம், காலமா உள் பனியனா போட்டுக்கிட்டு வந்தது தான். வலை எதாவது கடல்ல டேமேஜ் ஆயிடுச்சுன்னா... கவலை படமா.. இந்த டீ-ஷர்ட கழற்றி மீன் பிடிச்சுட்டு வந்திடலாம். சிக்ஸ் பேக் பாடி வெச்சிருக்கவன் தவிர வேற யாரு போட்டாலும் இந்த டீ-ஷர்ட் கன்றாவியா தான் இருக்கும்.

ஒன்ஸ் மோர்!
இந்த கிழிஞ்ச பேண்ட் எல்லாம் கடையில பார்க்கும் போதும், ஆன்லைன் ஷாப்பிங்ல வர மாடலுங்க போட்டிருக்கும் போதும் ரொம்ப அழகா இருக்க மாதிரி தான் இருக்கும். ஆனா, நமக்கு அது எப்படி செட் ஆகும்னு தெரியாது. வருங்காலத்துல இப்படியான முழுசா கிழிஞ்ச பேண்ட் வாங்குற ஐடியா இருக்கவங்க.. இந்த போட்டோ பார்த்துட்டு போங்க.. ஜென்மத்துக்கு வாங்க மாட்டீங்க...

மிச்ச, மீதி...
நம்ம டைலர் கடைக்கு போனீங்கன்னு வெச்சுக்குங்க.. தன்னோட தையல் மெஷின் பக்கத்துல ஒரு கூடை வெச்சிருப்பாரு. அதுல முழுக்க கலர், கலரா கிழிஞ்ச துணிங்க இருக்கும். அத ஒண்ணா சேர்த்து சட்டை தேச்சா எப்படி இருக்கும். அப்படியான ஒரு டிசைன் தான் இது. ஆனா, நல்ல டிசைனர்ப்பா அந்த ஆளு... கம்பெனிக்கு நல்லாவே உழைப்பாரு போல... கிழிஞ்ச மிச்ச மீது துணையை வெச்சு ஒரு ட்ரெஸ் பண்ணிட்டாப்புல.

மெக்கானிக்கா...
ஒன்னு இத டிசைன் பண்ணா அந்த நபர் கார் மேல பைத்தியமா இருக்கணும்.. இல்ல படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம ஃபேஷன் இண்டஸ்ட்ரிக்குள்ள வந்திருக்கணும். வித்தியாசமா எத பண்ணாலும் அத கிரியேடிவ்ன்னு நெனச்சுக்கிட்டு இங்க ஒரு கும்பல் சுத்திக்கிட்டு இருக்கு. இது கிரியேட்டிவ் இல்ல.. கன்றாவி... கார் மேட் எடுத்துட்டு வந்து இடுப்புல சுத்திவிட்டா கிரியேட்டிவ் ஆயிடுமா கண்ணா...

எழுதி தான் வைக்கணும்
மகாஜனங்களே இதுக்கு பெயர் ஸ்வெட்டர்... அதாவது குளிர் காலத்துல நாம உடுத்துவோமே... அதே தான். யப்பா டிசைனர் தம்பி.. தயவு செஞ்சு பக்கத்துல இது ஸ்வெட்டர்ன்னு எழுதி வெச்சிடுங்க. இல்லாட்டி மக்கள் இது என்னன்னே தெரியாம கன்ஃபியூஸ் ஆயிடுவாங்க.

பிஞ்சிடும்!
இப்படி எல்லாம் நம்ம ஊருல செருப்பு டிசைன் பண்ணா... நிஜமாவே செருப்பு பிஞ்சிடும். செருப்புல எதுக்கு கவர்ச்சி. அதுலயும் பாருங்களேன் பிகினி மாடல். கலாரசிகனா இருப்பான் பார்த்தா கலா'வுக்கு மட்டும் ரசிகனா இருப்பான் போல நம்மாளு!
© crimesagainstshoemanity/instagram

மெடிக்கல் ஸ்டூடன்ட்?
அம்மணி மெடிக்கல் ஸ்டூடண்ட்டுங்களா? நிச்சயமா ட்ரெஸ்க்கும் கற்பழிப்புக்கும் சம்மந்தமே கிடையாதுங்க... ஆனா.. இப்படி எல்லாம் ட்ரெஸ் போடணுமாங்கிறது தான் எங்க கேள்வி... அவங்க தான் டிசைன் பண்ண தெரியாம எதையோ ஒன்னு ஃபேஷன்ங்கிற பேருல பண்றாங்கன்னா... நாமளும் அத வாங்கி போட்டுக்கிட்டு சுத்தனுமா என்ன?

டகால்ட்டி!
எப்படியும் இந்த பேண்ட் மாட்ட அரைமணிநேரம் ஆகும், கழற்ற அரைமணிநேரம் ஆகும். ஒருவேள சாப்பிட்டது சேராம அவசரமா வந்தா என்ன பண்ணுவாரு சார்! ரொம்பவே கஷ்டம் தானுங்க! சேஃப்டி ஒரு பக்கம் இருக்கட்டும்.. இது என்ன மாதிரியான ஃபேஷன் அண்ணாச்சி!

கிளாரிட்டி!
நிப்பிள்ல இருந்து... பாடி டேன் ஆகிறது வரைக்கும் அப்படி ஒரு கிளாரிட்டியோட டிசைன் பண்ணியிருக்காரு நம்மாளு. ஆன, இது எதுக்குன்கிறேன்... இத மாட்டிக்கிட்டு போய் பீச்சுல படுத்துகிறதுக்கா... வடிவேலு ஸ்லாங்குல சொல்லணும்னா ரொம்ப படுத்துறாங்க நம்மள....

கொடுமை!
தயவு செஞ்சு மனைவிமார்கள் எவ்வளோ அடம் பிடிச்சாலும் இந்த மாதிரி ஒரு பேக் வாங்கி கொடுத்திடாதிங்க கணவன்மார்களே.. அவங்க மாட்டிக்கிட்டு வெளிய வந்தாலே அடுத்த நாள் மீம் டெம்பிளேட்டா நம்ம போட்டோ இன்டர்நெட்ல வந்திடும். இதுவே, அவசரத்துல... கொஞ்ச நேரம் இத புடிங்கன்னு நம்ம கையில கொடுத்திட்டா... அம்புட்டு தான்... ஆல்டைம் இன்டர்நெட்டுல நம்ம போட்டோ தான் வைரலா பரவிக்கிட்டு இருக்கும்.

யாருப்பா அது?
யார் யாருக்கு, யார எல்லாம் பிடிக்காதோ.. அவங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இது. யாராவது இந்த ட்ரெஸ் போட்டுட்டு வந்து, எப்படி இருக்குன்னு கேட்டா... பதில் எல்லாம் சொல்ல தேவையே இல்ல... அவங்க பேண்ட்ல இருக்கவரு மாதிரி ஒரு ரியாக்ஷன் மட்டும் கொடுத்தா போதுமானது.

ஸ்கேட்டிங் ஷூ?
இதென்னடா 23ம் புலிகேசி மீசை மாதிரி ஒரு ஷூ... ஒருவேளை பனிமலையில ஸ்கேட்டிங் பண்றவங்களுக்கு பிரத்தியேகமாக தயாரிச்சுருப்பாங்களோ...
என்னவா வேணாலும் இருக்கட்டும். இந்த ஷூ மாட்டிக்கிட்டு பஸ், மெட்ரோ, ட்ரைன்ல எங்களையும் போயிடாதிங்க... படாத எடத்துல யாருக்காச்சும் பட்டு உயிரு போயிடும் அம்புட்டு தான்.
© crimesagainstshoemanity/instagram

அடடே!
நம்ம ஊரு சந்தை பக்கம் போனீங்கன்னா... தக்காளி மூட்டை எல்லாம் இப்படி தான் கட்டி வெச்சிருப்பாங்க... ஒருவேள நிஜமாவே அந்த டிசைனர் நம்ம ஊரு மார்கெட் பக்கமா வந்து போயிருப்பாரு போல. அச்ச அசல்.. அப்படியே டிசைன் பண்ணியிருக்காரு...!



Click it and Unblock the Notifications