இந்த நவராத்திரி ஸ்பெஷலா எந்த மாதிரியான ஷூ ட்ரெண்ட்ல வந்திருக்குன்னு பார்க்கலாமா?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

துர்கா பூஜையின் போது வெறுமனே உங்களை அழகுபடுத்தினால் மட்டும் போதாது. அதே நேரத்தில் நீங்கள் அணியும் ஓவ்வொரு பொருட்களும் உங்களுக்கு செளகரியமாக இருக்க வேண்டும். இந்த துர்கா பூஜைக்கு விதவிதமான ஆடைகளின் கலெக்ஷனுடன் நிறைய விதவிதமான ஸ்டைலில் ஷூ கலெக்ஷனும் வந்துள்ளது. புதிய காலணிகள் என்றாலே உங்கள் கால்களை கடித்து காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

என்னங்க இதை நினைத்து கவலைப்படுறீங்களா? அவசியமே இல்லை. இதற்காகத்தான் உங்களுக்கு செளகரியமான ஷூ ட்ரெண்ட் பற்றி இங்கே கூறயுள்ளோம். எனவே காலணி காயங்கள் பற்றிய கவலை இல்லாமல் துர்கா பூஜையில் உற்சாகத்துடன் நீங்கள் வலம் வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒயிட் ஸ்னீக்கர்ஸ்

ஒயிட் ஸ்னீக்கர்ஸ்

இந்த ட்ரெண்ட் பற்றி நாம நிறையவே பேசி இருக்கோம். இப்போ இந்த ஒயிட் ஸ்னீக்கர்ஸ் ஷூ தான் இங்கே புகழ் பெற்று இருக்கிறது. இந்த வகை ஷூ உங்களுக்கு ஒரு கூல்லான லுக்கை கொடுக்கும். இந்த துர்கா பூஜையின் ஒரு நாளாவது இந்த ஒயிட் ஸ்னீக்கர்ஸ் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதிங்க. இது உங்களுக்கு கூல்லான லுக்குடன் ரெம்ப செளகரியமாகவும் இருக்கும். இந்த ஷூ பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் இருப்பதால் எல்லாருமே ஒரு கலக்கு கலக்கலாம்.

இதில் உங்களுக்கு பிடித்தமான டிசைனுள்ள ஒயிட் ஸ்னீக்கர்ஸ்ம் எடுத்து கொள்ளலாம். அது இன்னமும் உங்களை அழகாக காட்டும். சரி சரி வேகமா ஷாப்பிங் சென்று ஒயிட் ஸ்னீக்கர்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.

பிளிங் ஷூ

பிளிங் ஷூ

பிளிங் ஷூ ஒரு புதிய வரவு காலணி ஆகும். இது ஒரு ஜொலிக்கும் ஸ்டைலில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அணியும் விதத்தில் கிடைக்கின்றன. இந்த ட்ரெண்ட் ஆயிரம் ஆண்டுகளாக போற்றப்படுகின்றனர். எனவே இப்படிப்பட்ட அழகிய ட்ரெண்ட்டை துர்கா பூஜையின் போது மறந்து விடாதீர்கள்.

ஷாக் பூட்ஸ்

ஷாக் பூட்ஸ்

இந்த வகையான காலணிகள் வட நாடுகளில் தான் முதலில் ட்ரெண்ட்டாக இருந்தது. அமெரிக்கா சூப்பர் மாடலான கென்டல் ஜென்னர் தான் இந்த ட்ரெண்ட்டை பயன்படுத்தி அழகுபடுத்தினார். இதில் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த ஷாக் பூட்ஸ் இப்பொழுது இந்தியாவிற்கும் வந்து விட்டது.

வருகின்ற துர்கா பூஜையில் இந்த ஷாக் பூட்ஸ் அணிந்து ஒய்யாரமாக நடந்து செல்ல மறந்து விடாதீர்கள்.

ரெயின்போ டஸிஸில்டு ஷேன்டல்ஸ்

ரெயின்போ டஸிஸில்டு ஷேன்டல்ஸ்

இந்த ஸ்டைல் ட்ரெண்ட் பொதுவாக இந்தியாவில் தான் காணப்படுகிறது. இந்த ரெயின்போ காலணி வர்ணங்களின் கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கொண்டாட்டங்களை இந்த ட்ரெண்ட் இல்லாமல் வீணாக்கி விடாதீர்கள். இதில் உள்ள ஷேன்டல் கலர் (சந்தனக் கலர்) உங்களுக்கு பாரம்பரிய மற்றும் மாடர்ன் லுக் இரண்டையுமே கொடுக்கும். பாலிவுட் செலிபிரிட்டி எல்லாரும் இந்த ட்ரெண்டில் வலம் வருகிறார்கள். நீங்க எப்போ இந்த ட்ரெண்ட்டுக்கு மாறப் போறீங்க.

ஹிட்டன் ஹீல்ஸ்

ஹிட்டன் ஹீல்ஸ்

சின்ன உயரமான ஹீல்ஸ் டைப் தான் இந்த ஹிட்டன் ஹீல்ஸ். பெண்கள் பூஜை கொண்டாட்டத்திற்கு இந்த ஹீல்ஸ் வகைகளை மிகவும் விரும்புவர். ஏனெனில் பாதங்களில் அழுத்தம் குறைவாக இருப்பதால் ஹீல்ஸ் வகைக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பர். அதே நேரத்தில் எல்லா இடங்களிலும் இந்த ஹீல்ஸ் காலணிகளை போட்டு அலையாதீர்கள். இந்த ட்ரெண்ட் பெங்காலி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. என்னங்க உங்களுக்கும் பிடிச்சிருக்கா.

கிளாடியேட்டர்ஸ்

கிளாடியேட்டர்ஸ்

கிளாடியேட்டர்ஸ் ட்ரெண்ட் பேஷன் உலகில் திரும்பவும் வந்து ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறது. இந்த பூஜைக்கு இந்த ட்ரெண்ட் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த காலணி உங்களுக்கு செளகரியமாக இருப்பதோடு உங்களுக்கு செக்ஸியாகவும் இருக்கும்.

உயரமான பெண்கள் பொதுவாக இந்த காலணி யை விரும்புவார்கள். ஏனெனில் இது அவர்கள் கால்களின் உயரத்தை காட்டும். குட்டையான பெண்களுக்கு இது ஒன்று நன்மையாக இருக்காது

என்னங்க உங்கள் துர்கா பூஜைக்கான ஷூ ட்ரெண்ட்டை இப்பொழுது எளிதாக தேர்வு செய்து விட்டீர்களா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Durga Puja Special: Shoe Trends Of The Year

Durga Puja Special: Shoe Trends Of The Year
Story first published: Friday, September 15, 2017, 16:25 [IST]
Subscribe Newsletter