இந்த 2017-நவராத்திரிக்கு நீங்க அசத்தனுமா!! இதோ உங்களுக்கான லேட்டஸ்ட் ட்ரெண்ட் கலெக்ஷன்

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெங்காலி பெண்களும் சரி ஆண்களும் சரி அவர்களுக்கு விருப்பமான பூஜையான துர்கா பூஜை கொண்டாட்டத்தில் மிகவும் ஸ்டைலாக அழகாக இருக்க ஆசைப்படுவர். இதற்காக இப்பவே எல்லா பெங்காலி வாசிகளும் தங்கள் அழகிய ஆடைகளை தேர்ந்தெடுக்க புறப்பட்டு இருப்பர்.

உங்கள் பூஜை ஷாப்பிங்காக நாங்க சில டிப்ஸ்களை உங்களுக்கு சொல்ல நினைக்கிறோம். பேஷன் என்பது பார்ப்பதற்கு அழகாக இருந்தா மட்டும் பத்தாது லேட்டஸ்ட் ட்ரெண்ட் லுக்கிலும் இருந்தால் தான் உங்களால் எல்லோரையும் கவர்ந்து இழுக்க முடியும். எனவே நீங்கள் ஷாப்பிங் செய்வதற்கு முன்னால் உங்களுக்கான இந்த வருட லேட்டஸ்ட் ட்ரெண்ட் கலெக்ஷனை இங்கே கூறப் போறோம்.

நிறைய ட்ரெண்ட் ஆன ஆடைகள் இருக்கின்றன. அதில் ரெம்ப ட்ரெண்ட்டான எல்லோராலும் விரும்பப்படும் ஆடைகளை பற்றி இப்பொழுது பேச உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோட்டிவ் ப்ரிண்ட்ஸ்

மோட்டிவ் ப்ரிண்ட்ஸ்

மோட்டிவ் என்பது ஆடை முழுவதும் அழகான டிசைனில் ப்ரிண்ட்ஸ் செய்யப்பட்ட ஒரு அமைப்பு. இந்த மோட்டிவ் ப்ரிண்ட்ஸ் பிளாக் ப்ரிண்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ட்ரெண்ட் ஆன ஆடை தான் துர்கா பூஜையில் களைக்கட்டும் பேஷனாக உள்ளது.

மோட்டிவ் ப்ரிண்ட்ஸ் எல்லா ஆன்லைன் ஷாப்பிங்கிலும் மற்றும் கடைகளிலும் கிடைக்கிறது. இதன் விலை புடவை மற்றும் பேண்ட் என்று வித்தியாசம் அடைகிறது. என்ன பெங்காலி பெண்களே மோட்டிவ் ப்ரிண்ட்ஸ் ட்ரெண்ட்டுக்கு தயாராகி விட்டிங்களா.

ஹம்ச்சா ப்ரிண்ட்ஸ்

ஹம்ச்சா ப்ரிண்ட்ஸ்

இந்த ப்ரிண்ட்ஸ் ஆடை பற்றி அதிகமாக கேள்வி பட்டிருக்க மாட்டீங்க. இது ஒரு தனித்துவமான கைத்தறியால் பெங்காலி மக்களின் வீட்டிலேயே தயாரிக்கும் ஆடை ஆகும். இது மிகவும் மென்மையாக எடுத்துச் செல்ல எளிதாகவும் இருக்கக் கூடியது.

இந்த ஹம்ச்சா ப்ரிண்ட்ஸ் டிசைனை இப்பொழுது புடவையிலும் பதித்து புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது. எனவே இந்த வருட துர்கா பூஜையை மறக்காம ஹம்ச்சா ப்ரிண்ட்ஸ் ஆடையுடன் கொண்டாடி அசத்துங்கள்.

எம்பிராய்டரி ட்ஸ்ஸோர்

எம்பிராய்டரி ட்ஸ்ஸோர்

ட்ஸ்ஸோர் என்பது பாரம்பரிய பட்டால் செய்யப்படும் ஆடை ஆகும். பெங்கால் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வயதிற்கு ஏற்ற மாதிரி இந்த ஆடையை வடிவமைக்கின்றனர்.

இந்த வருடம் வழக்கமான ட்ஸ்ஸோர் பட்டு தான் வித்தியாசம் ஆன டிசைன்களில் வலம் வருகின்றன. எம்பிராய்டரி ட்ஸ்ஸோர் பட்டு எல்லா வயதிற்கும் உங்கள் பூஜை கொண்டாட்டத்திற்கும் கண்டிப்பாக ஏற்ற பேஷனாக இருக்கும். எனவே இந்த ட்ஸ்ஸோர் பட்டை உடுத்தி பூஜை கொண்டாட்டத்தில் மிளிருங்கள்.

பாட்டிக் ப்ரிண்ட்ஸ்

பாட்டிக் ப்ரிண்ட்ஸ்

மற்றொரு பெங்கால் கைத்தறி ஆடை தான் இந்த பாட்டிக் ப்ரிண்ட்ஸ். இந்த ஆடை பெண்களுக்கு மட்டுமே உரித்தான புடவை, குர்தா, ப்ளெவ்ஸ் போன்ற அமைப்பில் இருப்பதோடு ஆண்களுக்கு தேவையான குர்தா மற்றும் ஷார்ட்ஸ் போன்ற அமைப்பிலும் காணப்படுகின்றது.

இந்த பேஷன் அதிகமாக பூஜைக்காகவே பயன்படுத்தப்படும் ஒன்றாகும். எனவே இனி எதற்கு யோசனை உங்கள் பூஜை ஷாப்பிங்கில் பாட்டிக் ப்ரிண்ட்ஸ்க்கும் இடம் கொடுங்கள்.

கான்ட்ராஸ்ட் ப்ளெவ்ஸ்

கான்ட்ராஸ்ட் ப்ளெவ்ஸ்

புடவைக்கு சரியான கலரில் ப்ளெவ்ஸ் எடுப்பது தான் போன வருட பேஷனாக இருந்தது. ஆனால் இந்த வருடம் உங்கள் புடவைக்கு கான்ட்ராஸ்ட் கலரில் ப்ளெவ்ஸ் அணிவது தான் பேஷன் என்று வந்துவிட்டது.

எனவே உங்கள் பூஜை புடவைக்கு ஏற்ற மாதிரி கான்ட்ராஸ்ட் கலரில் நிறைய ப்ளெவ்ஸ்கள் வந்து குவிகின்றன. எனவே நல்ல அழகான டிசைனில் உங்கள் புடவைக்கு மேட்ச் ஆன கான்ட்ராஸ்ட் ப்ளெவ்ஸ்களை தேர்ந்தெடுத்து கச்சிதமாக அணிந்தாலே போதும் எல்லாம் அழகாக மாறிவிடும். மறக்காம அப்படியே இந்த ஆடையில் உங்கள் பூஜை கொண்டாட்டத்தில் வலம் வந்து விடுங்கள்.

 ஆப்கான் ஜூவல்லரி

ஆப்கான் ஜூவல்லரி

இதுவரை இந்த வருட ட்ரெண்ட் ஆன ஆடையமைப்பை பற்றி பார்த்தோம். அழகுக்கு அழகு சேர்க்க நம்ம ஜூவல்லரி தேர்ந்தெடுக்க வேண்டாமா. எனவே இந்த வருட அதிகமான ட்ரெண்ட்டான ஜூவல்லரி பற்றி பார்ப்போம்.

ஆமாங்க ஆப்கான் ஜூவல்லரி உங்கள் துர்கா பூஜைக்கு ஏற்ற லுக்கை கொடுக்கும். இந்த ஜூவல்லரி புடவை மற்றும் குர்தா மற்ற ஆடைகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும். சரி சரி எல்லாரும் வாங்குவதற்குள் நீங்க முந்திக்கோங்க.

என்னங்க இந்த ஐடியாக்களை மனதில் வைத்து துர்கா பூஜைக்கான ஷாப்பிங்கை உங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கோங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Durga Puja 2017 Will Be All About These Trends

Durga Puja 2017 Will Be All About These Trends
Story first published: Wednesday, September 13, 2017, 15:14 [IST]
Subscribe Newsletter