தில்லு முல்லு முதல் கபாலி: ரஜினியின் மரண மாஸ் லுக்ஸ்...!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகார்ந்த அவர்களின் "கபாலி" திரைப்படம் இன்று வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஒரே இந்திய நடிகர் தான் ரஜினிகாந்த். தன் ஸ்டைல் மூலம் இன்று வரை ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் படையப்பா திரைப்படத்தில் சொன்னது போல், 65 வயதாகியும் இன்னும் ரஜினியின் ஸ்டைலும், அழகும் குறையவில்லை. அதிலும் இன்று வெளியான கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சற்று வித்தியாசமான மாஸ் லுக்குடனும், பட்டைய கிளப்பும் வசனங்களுடனும் நடித்திருப்பது, அவரது மேல் இன்னும் பலரை பைத்தியமாக்கிவிட்டது எனலாம்.

இங்கு தில்லு முல்லு முதல் கபாலி வரையினான ரஜினியின் சில மறக்க முடியாத சில வித்தியாசமான மற்றும் மரண மாஸ் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தில்லு முல்லு

தில்லு முல்லு

1981 ஆம் ஆண்டு வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் நடிகர் ரஜினி இரு வேடங்களில் நடித்தார். இது தான் ரஜினி மீசையின்றி நடித்த முதல் படம். மேலும் இது ரஜினி நடித்த கதாபாத்திரங்களிலேயே மறக்க முடியாத ஒன்று எனலாம்.

முத்து

முத்து

முத்து என்றதும் பலருக்கும் இளமை வேடத்தில் நடித்த ரஜினியைத் தான் ஞாபகம் வரும். ஆனால் அப்படத்தில் அவர் ஒரு ஆதரவற்ற துறவிப் போன்று நடித்த கதாபாத்திரம், நிச்சயம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாததாக இருக்கும்.

பாட்ஷா

பாட்ஷா

ரஜினியின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் பாட்ஷா. இப்படத்தில் கருப்பு நிற கோட் சூட் அணிந்து, கருப்பு நிற கண்ணாடி அணிந்து ரஜினி மரண மாஸ் லுக்கில் காணப்படுவார்.

படையப்பா

படையப்பா

இது ரஜினியின் மற்றொரு அட்டகாசமான மற்றும் ஸ்டைலான லுக். அதிலும் வெள்ளை நிற ஜிப்பா அணிந்து, மேலே ப்ரௌன் நிற சால்வையில் ரஜினியின் ஸ்டைலைப் பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது. அந்த அளவில் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் சேர்ந்து ரஜினிகாந்த் அற்புதமாக நடித்திருந்தார்.

சிவாஜி

சிவாஜி

சிவாஜி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேற்கொண்ட மொட்டை பாஸ் தோற்றம், இதுவரை அவர் மேற்கொண்டிராத ஸ்டைல்களுள் ஒன்று.

எந்திரன்

எந்திரன்

எந்திரன் ரஜினியின் பிரம்மாண்ட வெற்றியைத் தந்த ஓர் திரைப்படம். இத்திரைப்படத்தில் இரு வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இருப்பினும் அதில் தாடி, மீசையின்றி மேற்கொண்ட சிட்டி கதாப்பாத்திரம் வித்தியாசமாக இருந்தது.

கபாலி

கபாலி

ஆனால் இன்று வெளியான "கபாலி" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல் மற்றும் தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பார்த்ததுமே அனைவருக்கும் புல்லரிக்கும் படி, ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் மரண மாஸ் லுக்கில் காட்சியளித்துள்ளார்.

உங்களுக்கு இவற்றில் ரஜினியின் எந்த லுக் மிகவும் பிடித்தது என்று எங்களுடன் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Thillu Mullu To Kabali: 7 Films That Featured Rajinikanth in Unrecognisable looks

Today, we take a look at some of the most unrecognisable looks sported by ‘Thalaiva’ during his illustrious career.
Story first published: Friday, July 22, 2016, 14:25 [IST]
Subscribe Newsletter