For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலியல் தொல்லைகளை தடுக்க கண்டுபிடித்த தற்காப்பு ஃபேஷன் உடைகள்!

இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்தாலும் அவர்களை அச்சுறுத்தலாக இருக்கும் ஒரேயொரு விஷயம் பாலியல் தொல்லைகள்.

|

இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்தாலும் அவர்களை அச்சுறுத்தலாக இருக்கும் ஒரேயொரு விஷயம் பாலியல் தொல்லைகள்.

இதனால் பல பெண்கள் தங்களது விருப்பங்களை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் சமூகத்தில் பின் தங்கியே இருக்கிறார்கள். வயது வித்யாசங்களின்றி பெண்கள் பாலியல் தொல்லைகளில் சிக்கும் போது அதனை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் குற்றங்கள் ஒன்றும் குறைந்த பாடில்லை,

பாதிக்கப்பட்ட பெண்களை முடக்கி வைப்பதுடன் அதே பெண்களை கேரக்டர் ரீதியாக தாக்குவதும் தொடர்கிறது. இவை எல்லாவற்றையும் விட பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே தவறிருப்பதாக அட்வைஸ் செய்யப்படுவதும் தொடர்கிறது.

அடுத்தவர்களை நாம் தடுக்க முடியாது என்றாலும் வரப்போகும் ஆபத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். பெண்கள் அணியும் உடைகள், அணியும் ஆபரணங்களின் மூலம் தங்களுக்கு நேரும் ஆபத்துக்களை தவிர்க்க சந்தையில் கிடைக்கும் சில பேஷன் ப்ராடெக்ட்டுகள் இதோ உங்களுக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.ஹேரி ஸ்டாக்கிங்க்ஸ் :

1.ஹேரி ஸ்டாக்கிங்க்ஸ் :

பெண்கள் அணியும் ஸ்டாக்கிங்ஸில் முழுவதும் முடி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்டாக்கிங்க்ஸ் அணிந்து கொண்டால் உங்களை நெருங்கவே அருவருப்பு கொண்டு விலகி விடுவார்கள்.

2.பெல்ட் :

2.பெல்ட் :

ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த மாணவிகள் சிலர் தங்களது ஸ்கூல் ப்ராஜெக்ட்டாக இந்த பெல்ட்டை கண்டுபிடித்திருக்கிறார்கள் அவ்வளவு எளிதாக இந்த பெல்ட்டை கழட்ட முடியாது.

3.உள்ளாடை :

3.உள்ளாடை :

சென்னையை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் இதனை வடிவமைத்திருக்கிறார்கள். SHE(society harnessing equipment) என்று பெயரிடப்பட்டுள்ள இதில் ஜிபிஸ் வசதியும் , ப்ரஷர் சென்சாரும் இருக்கிறது. இதை வெளியில் செல்லும் போது பெண்கள் தினமும் அணிந்து செல்லலாம். ஆபத்தின் போது ப்ரஷர் சென்சாரை ஆக்டிவேட் செய்ய வேண்டும், அப்படி செய்தால் அதிக ப்ரசரால் எதிர்நபர் விலகிச் சென்றிடுவர் அத்துடன் இதில் ஜிபிஎஸ் இருப்பதால் அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்பலாம்.

4. செயின் :

4. செயின் :

இந்த செயினில் இருக்கும் டாலர் தான் நமக்கு ஆபத்து நேரத்தில் உதவப்போகிறது, யாரேனும் நம்மை தவறான நோக்கத்துடன் அணுகுவதை உணர்ந்தால் டாலரில் இருக்கும் பட்டனை ப்ரஸ் செய்தால் போதும் அது உங்கள் போனுக்கு ஃபேக் கால் ரிங் ஒன்று கொடுக்கும் அத்துடன் குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பிடும்.

5. பேண்ட்டீஸ் :

5. பேண்ட்டீஸ் :

இதில் பெரிதாக எந்த தொழில்நுட்பமும் இல்லை மாறாக அவர்களை மனரீதியாக அணுக முடியும்.

6. ஜாக்கெட் :

6. ஜாக்கெட் :

நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இதனை வடிவமைத்திருக்கிறார்கள். யாரேனும் தாக்க வரும் போது இதிலிருந்து 110 வாட்ஸ் கரண்ட் பாயும். எதிர்பாராத அதிர்ச்சியில் பின் வாங்கும் நேரத்தில் நாம் சுதாரித்து தப்பித்துவிடலாம்.

7. நெயில் பாலிஷ் :

7. நெயில் பாலிஷ் :

குளிர்பானங்களில் போதை மருந்து கலந்து கொடுத்து பெண்களை மயக்கமுறச் செய்து பின்னர் அவர்களை கற்பழிக்கும் காமுகர்களுக்கு செக் வைக்கும் கண்டுபிடிப்பு இது. புது இடங்களில் குளிர்பானம் குடிக்க நேர்ந்தால் அதனை குடிப்பதற்கு முன்னால் அந்த குளிர்பானத்தை ஒரு சொட்டு இந்த நெயில் பாலிஷை சில சொட்டு விடுங்கள். அதில் ஏதேனும் போதை மருந்து கலந்திருந்தால் நெயில் பாலிஷின் நிறம் மாறிடும்.

8. ஜீன்ஸ் :

8. ஜீன்ஸ் :

வாரணாசியை சேர்ந்த இரண்டு பெண்கள் இதனை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆபத்தான நேரங்களில் அலாரம் அடித்து எச்சரிக்கை செய்வதுடன், ஜிபிஸ் உதவியுடன் அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்பும்.

9. ஷூ :

9. ஷூ :

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் ரிஜுல் பாண்டே மற்றும் சாலினி யாதவ் இதனை கண்டுபிடித்தார்கள். ஆபத்தான நேரங்களில் பிறருக்கு தகவல் அனுப்புவதுடன் எலக்ட்ரிக் ஷாக் அடித்து நாம் தப்பிக்கவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

10. ஆன்ட்டி ரேப் வியர் :

10. ஆன்ட்டி ரேப் வியர் :

அணிந்த கொள்ளும் நபருக்கு எளிதாக இருக்கும் ஆனால் எதிராளிக்கு சவால் விடும் விதமாக இந்த உடை அல்ட்ரா டைட்டாக மாறிடும். எளிதாக கழட்ட முடியாது. அத்துடன் தொட்டால் ஷாக் அடிக்கும் வகையிலும் குறிப்பிட்ட எண்களுக்கு தகவல் அனுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion trends
English summary

Anti Rape Fashion Products to protect Women

Some of the anti rape fashion products to fight with rapists
Desktop Bottom Promotion