Latest Updates
-
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் இந்த ஜோடி நல்லா இருக்கே! பாத்திங்களா?
விஜய் தேவரகொண்டா மற்றும் கியாரா அத்வானி இருவரும் ஒரு பேஷன் ஐடியாவை நமக்கு அளித்துள்ளார்கள். விஜய் தேவரகொண்டா அணிந்து இருந்த குர்தா நம் இந்தியக் கல்யாண கலாச்சாரத்திற்கு ஏற்றது என்பதில் சந்தேகமில்லை. லெ
விஜய் தேவரகொண்டா மற்றும் கியாரா அத்வானி இவர்கள் இருவரும் மும்பையில் நடந்தால் படப்பிடிப்பு விழாவில் சந்தித்த போது அணிந்து இருந்த உடைகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். விஜய் தேவரகொண்டா என்றாலே பெண்கள் விழுந்து விடுவார்கள். அர்ஜுன் ரெட்டி என்ற படம் வந்ததிலிருந்து விஜய் தேவரகொண்டாவிற்கு பேன்ஸ் அதிகரித்து விட்டார்கள். இன்னும் அர்ஜுன் ரெட்டி தமிழில் வெளிவரவில்லை என்றாலும் மொழி புரியாமலே படத்தைப் பார்த்தவர்களும் அதிகம் தான்.

ஏனெனில் படத்தின் கதையும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் மக்களை அந்த அளவிற்கு ஈர்த்துள்ளது. எனவே தான் அந்தப் படத்தை தற்போது மற்ற மொழிகளிலும் சூட் செய்து வருகிறார்கள். இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்த அர்ஜுன் ரெட்டி அதாவது கபீர் சிங் திரைப்படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி அவர்களும் நம் அர்ஜுன் ரெட்டி கதாநாயகனும் அணிந்து இருந்த உடைகளைப் பற்றிப் பார்ப்போம்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா ஒரு முழுக்கைக் கொண்ட சீன காலர் ஸ்கை ப்ளூ குர்தாவை அணிந்து இருந்தார். இது புதுவிதமான ஆடை இல்லை என்றாலும் எப்போதும் ட்ரெண்ட் ஆக உள்ள ஒரு ஆடை தான் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தேவரகொண்டா அணிந்து இருந்த குர்தாவில் சிக்கலான தங்க மலர் எம்பிராய்டரி மற்றும் தங்க நிற பட்டன்களால் வேலைசெய்யப்பட்டு இருந்தது. அத்துடன் கிரீம் வண்ண தோதி பேன்ட்களுடன் குர்தாவை இணைத்து இருந்தார். விஜய் தேவரகொண்டாவின் ஸ்டைல் எப்போதும் புதுவிதமாகத் தான் இருக்கும். இந்த முறையும் இருட்டிலும் மின்னும் மின்மினிப் பூச்சியைப் போல் மின்னி தனது ஸ்டைல் மூலம் அனைவரும் கவர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

கியாரா அத்வானி
கியாரா அத்வானி அவர்கள் இதுவரையில் தமிழ்ப் படங்களில் நடிக்க வில்லை. ஆனால் டோனியின் வாழ்கை வரலாறு படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர் ஹிந்தியில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராவார். தற்போது கபீர் சிங் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். கியாரா அத்வானி தனது இளஞ்சிவப்பு லெஹங்கா-சோலியில் முற்றிலும் அழகாகத் தோன்றினார். அதில் தங்க-எம்பிராய்டரிகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து ஒற்றை பக்கத் துப்பட்டாவால் தனது அழகை வெளிப்படுத்தினர். அதில் இளஞ்சிவப்பு மற்றும் தங்க எல்லைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த லெஹெங்கா நவீன இந்தியத் திருமண நிகழ்ச்சிகளில் அணியும் லெஹெங்காவை ஒத்திருந்தது.

அணிகலன்கள்
கியாரா அத்வானியின் அணிகலன்களை பற்றி பார்க்கும் போது, தனது தோற்றத்தை ஒரு தங்க நிற சோக்கர் நெக்லஸ், சிறிய காதணிகள், வளையல்கள் மற்றும் மோதிரத்துடன் அணுகினார். மேலும் தன் அலை அலையான கூந்தலை இழுத்து கட்டிய போனிடெயிலுடன் காட்சியளித்தார். அத்துடன் கியாரா மென்மையான கோஹல்ட் கண் மேக்கப் மற்றும் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை அணிந்து தனது அழகை வெளிப்படுத்தினார்.

பேஷன்
விஜய் தேவரகொண்டா மற்றும் கியாரா அத்வானி இருவரும் ஒரு பேஷன் ஐடியாவை நமக்கு அளித்துள்ளார்கள். விஜய் தேவரகொண்டா அணிந்து இருந்த குர்தா நம் இந்திய கல்யாண கலாச்சாரத்திற்கு ஏற்றது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் இப்போது பேஷன் ஆகிவரும் லெஹங்கா சோலியும் பெண்கள் விசேஷ விழாக்களுக்கு அணிந்து கொள்ளலாம். நீங்களும் அடுத்த முறை விசேஷங்களுக்குச் செல்லும் போது குர்தா மற்றும் லெஹங்கா சோலி அணிந்து அனைவரையும் கவர்ந்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
