Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே?
ரகுல் ப்ரீத் சிங் இவர் தமிழில் தீரன் படத்தின் மூலம் அனைவரும் கவர்ந்தார். தெலுங்கில் பல முன்னணி நட்சத்திர கதாநாயன்களுடன் நடித்துத்துள்ளார். மற்றும் மெதுவாக பாலிவுட்டின் புதிய பேஷன்ஸ்டாவாக மாறி வருகிறார
ரகுல் ப்ரீத் சிங் இவர் தமிழில் தீரன் படத்தின் மூலம் அனைவரும் கவர்ந்தார். தெலுங்கில் பல முன்னணி நட்சத்திர கதாநாயன்களுடன் நடித்துத்துள்ளார். மற்றும் மெதுவாக பாலிவுட்டின் புதிய பேஷன் ஸ்டார்ராக மாறி வருகிறார். இவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த புகைப்படம் ஒன்றில் தனது பேஷனை மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.


ஆடை
ரகுல் ப்ரீத் சிங் அணிந்து இருந்த ஆடை முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. ப்ரீத் சிங் ஆடை எந்த வித கவர்ச்சியும் இல்லாமல் பார்ப்பதற்கு மிக அழகாக மற்றும் சற்று வித்தியாசமாக இருந்தது. மேலும் முழு ஸ்லீவ்ஸ் அணிந்து இருந்தார். அத்துடன் தற்போது இளம் பெண்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் கிராப் டாப் மற்றும் பென்சில் ஃபிட் பேண்ட் அணிந்து இருந்தார். மேலும் கைகளில் இருந்த அந்த பஞ்சு போன்ற டிசைன்கள் எப்போதும் போல் அல்லாமல் ஆடையின் அழகை சற்று வித்தியாசமாக காட்டியது. இந்த ஆடை பத்திரிகை நிகழ்வுகளுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.

தோற்றம்
நடுவில் பிரிக்கப்பட்ட நேர்த்தியான போனிடெயில், மற்றும் உதடுகளில் இருந்த இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் டார்க்-கோஹல்ட் கண்களையும் கொண்டிருந்தார். ஆடைக்கு இணையாக ஹை பாயிண்ட் ஷூ ஒன்றை அணிந்து அவரின் தோற்றத்தை மெருகேற்றினர்.

மேக்கப் சாதனங்கள்
போர் ஃபில்லிங் ப்ரைமர், டெவி பவுண்டேஷன், கன்சீலர், சாப்ட் பிங்க் ப்ளஷ், நியூடு ஐ ஷேடோ, சாக்லேட் பிரவுன் ஐ ஷேடோ, பிளாக் ஐலைனர், ஐ ப்ரோவ் பென்சில், பிங்க் லிப்ஸ்டிக் ஹைலைட்டர், பியூட்டி பிளெண்டர், ஐ ஷேடோ பிரஷ், ப்ளஷ் பிரஷ், செட்டிங் பவுடர், செட்டிங் ஸ்ப்ரே.

எப்படி மேக்கப் போடுவது
முதலில் ப்ரைமர் எடுத்து முகத்தில் டி-வடிவத்தில் போட்டுக் கொண்டு துளைகளை மறைத்து, சருமத்தை மென்மையாக்குங்கள். இப்போது உங்கள் முகத்தில் பவுண்டேஷன் அப்ளை செய்து பியூட்டி ப்ளெண்டர் பயன்படுத்துங்கள். பின்னர் கண்களின் கீழ் பகுதியில் கன்சீலர் பயன்படுத்தி கருவளையங்களை மறைத்திடுங்கள். நியூடு ஐ ஷேடோ மற்றும் சாக்லேட் பிரவுன் ஐ ஷேடோ இமைகளில் தடவி, நன்றாக அப்ளை செய்த பிறகு உங்கள் புருவங்களை அழகாக வரைந்துக் கொள்ளுங்கள். பின்பு கன்னங்களில் கொஞ்சம் ப்ளஷ் செய்து லிப்ஸ்டிக் போட்டு முடித்து விடுங்கள். நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்கச் செட்டிங் ஸ்ப்ரே கடைசியாக கொஞ்சம் முகத்தில் தெளித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications