நியூ யு விண்டர் பதிப்பின் அட்டைப்படத்தில் பிரியங்கா சோப்ரா!

By: Ashok CR
Subscribe to Boldsky

அமெரிக்கன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குவாண்டிகோவில், அலெக்ஸ் என்ற பாத்திரத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா, தன்னை ஒரு உலகளாவிய நட்சத்திரமாக நிலை நிறுத்தியுள்ளார். உலகளாவிய நிகழ்வுகளுக்கு சென்று, சர்வதேச ரசிகர் படையை கொண்டுள்ள, சர்வதேச பிரபலமாக தற்போது அவர் மாறியுள்ளார்.

இவருடைய சர்வதேச சாதனைகள் இவர் மீது அதிக கவனத்தை ஏற்படுத்தி வருகிறது. முதன்மையான இடத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கனடா நாட்டு பத்திரிக்கைகளின் அட்டையில் இவரது படம் தற்போது இடம் பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு கனடா நாட்டு ஷார்ப் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இவர் முதன் முறை தோன்றிய போது, நாம் அதனை பற்றி பேசியிருந்தோம்.

இப்போது மீண்டும் ஒரு முறை இதனை அவர் செய்திருக்கிறார். மற்றுமொரு சர்வதேச பத்திரிகையான நியூ யு, அழகிய பிரியங்கா சோப்ராவை தன் அட்டைப்படத்தில் அலங்கரித்துள்ளது. பத்திரிக்கையின் அட்டையில், கருப்பு நிற காக்டெயில் ஆடையில் பிரியங்கா எக்கச்சக்கத்துக்கு அழகாக இருக்கிறார். இந்த ஆடையில் இடை பக்கம் துணி வெட்டப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகும்.. நேர்த்தியும்..

அழகும்.. நேர்த்தியும்..

இதற்கு மேலும் பிரியங்கா அழகாக தோன்ற முடியுமா? கண்டிப்பாக இல்லையென்றே நாங்கள் நினைக்கிறோம். பிரியங்காவின் பலத்தை நியூ யு வெளிப்படுத்தியுள்ளது. வேண்டுமெனில் இந்த பதிப்பை உடனே வாங்கி பாருங்கள்!

மறுவரையறைக்கப்பட்ட எளிமை

மறுவரையறைக்கப்பட்ட எளிமை

அசத்தலான கம்பீரத்துடன் பிரியங்கா. அயச்சிவப்பு மற்றும் அழகிய மேட் வகையிலான லிப்ஸ்டிக் அடையாளத்தை கண்டிப்பாக நீங்கள் கவனிக்கலாம்.

கருப்பு நிற காக்டெயில் ஆடை

கருப்பு நிற காக்டெயில் ஆடை

இந்த கருப்பு நிற காக்டெயில் ஆடையில் பிரியங்கா கவர்ச்சிகரமாக இருக்கிறார். இடைப்பகுதியில் அழகாக வெட்டி எடுக்கப்பட்ட பகுதியில் நாங்கள் அசந்து விட்டோம்.

பிரியங்கா சோப்ராவின் பலம்

பிரியங்கா சோப்ராவின் பலம்

வெண்ணிற குளியல் ஆடையில் காணப்படும் பிரியங்கா நம்பிக்கையைப் பற்றி பேசியுள்ளார். கண்டிப்பாக உங்கள் தைரியத்தைக் கண்டு நாங்கள் வியக்கிறோம் பிரியங்கா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra On The Cover Of New You, Winter Edition

Check out the cover of New You Winter issue. Priyanka Chopra is scintillating the cover with her charms.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter