2017 ஆஸ்கருக்கு வெள்ளை நிற உடையில் கவர்ச்சிகரமாக வந்த பிரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்திருந்த 2017 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழா வந்துவிட்டது. இந்த 89 ஆவது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்த விருது விழா வெறும் திரைப்படங்களுக்கு மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நடிகர், நடிகைகள் தங்களது அழகை பல அழகிய உடைகளில் வெளிக்காட்டும் விழாவும் கூட.

Priyanka Chopra Dresses In White For Oscars 2017

அந்த வகையில் இந்த வருட ஆஸ்கர் விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த விழாவில் பிரியங்கா இரண்டாம் வருடமாக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தை விட, இந்த வருட ஆஸ்கருக்கு பிரியங்கா அணிந்து வந்த உடை சற்று அதிருப்திகரமாக இருந்தது.

இங்கு 2017 ஆஸ்கருக்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரல்ப் & ரஸ்ஸோ உடை

ரல்ப் & ரஸ்ஸோ உடை

பிரியங்கா சோப்ரா டிசைனர்களான ரல்ப் & ரஸ்ஸோ வடிவமைத்த வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

உடையின் ஹை-லைட்

உடையின் ஹை-லைட்

பிரியங்கா அணிந்து வந்த உடையில் ஹை-லைட்டே, உடையின் முன்பக்க மேல் பகுதி கவர்ச்சியைக் காட்டும் வகையில் கூர்மையாக இருக்கும். மேலும் உடையின் பின்புறத்தில் முழங்கால் வரை ஸ்லிட் கொண்டிருக்கும்.

மேக்கப்

மேக்கப்

இந்த வெள்ளை நிற உடைக்கு பிரியங்கா உதட்டிற்கு வெளிர் நிற லிப்ஸ்டிக்கும், கண்களுக்கு கண் மையும், போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

பிரியங்கா இந்த உடைக்கு கழுத்தில் எதுவும் அணியாமல், காதுகளுக்கு சற்று நீளமான கம்மலும், இரண்டு கைகளுக்கும் கற்கள் பதிக்கப்பட்ட ஸ்டைலான பிரேஸ்லெட்டும் அணிந்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

பிரியங்காவின் ஹேர் ஸ்டைல் என்று பார்க்கும் போது, இவர் சைடு உச்சி எடுத்து, ஸ்ட்ரைட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra Dresses In White For Oscars 2017

இங்கு 2017 ஆஸ்கருக்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.