Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
தேசிய விருதைப் பெற பட்டு வேஷ்டி சட்டை அணிந்து காதல் மனைவி ஜோதிகாவுடன் க்யூட்டாக வந்த சூர்யா!
கொரோனா லாக்டவுன் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் தமிழில் வெளிவந்த 'சூரரைப் போற்று' என்னும் திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது.
சமீபத்தில் டெல்லியில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். கொரோனா லாக்டவுன் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் தமிழில் வெளிவந்த 'சூரரைப் போற்று' என்னும் திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது.

அவற்றில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றார் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கரா பெற்றார். மேலும் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி பெற்றார். முக்கியமாக இப்படத்தை தயாரித்த 2D நிறுவனத்தின் தயாராரிப்பாளரான நடிகை ஜோதிகா பெற்றார். கீழே 2022 ஆம் ஆண்டில் தேசிய விருதைப் பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதை வென்ற நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தேசிய விருதை வாங்குவதற்கு பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டையில் அழகாக வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த தாடி ஸ்டைல் ஒரு கம்பீரமான தோற்றத்தை வெளிக்காட்டியது. இது சூர்யா விருதை வாங்கும் போது எடுத்த போட்டோ.

தேசிய விருதை வென்ற நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா மிகவும் அழகான க்ரீம் மற்றும் கிரே நிற சில்க் புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் வெள்ளி நகைகளை அணிந்து, தலைக்கு மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் வட்ட வடிவ பொட்டு வைத்து கொண்டு தனது தோற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

அழகிய ஜோடி
திரையுலகில் எத்தனையோ நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுள் அஜித்-ஷாலினிக்கு அடுத்தப்படியாக ஏராளமானோரின் மனதில் சிறந்த தம்பதிகள் என்ற பெயரைப் பெற்றவர்கள் தான் சூர்யா-ஜோதிகா. இதை இந்த தேசிய விருது விழாவிலும் ஒரே நிறத்திலான உடையை அணிந்து வந்து சிறந்த தம்பதி என்பதை வெளிக்காட்டியுள்ளனர் என்றே கூறலாம்.

சூரரைப் போற்று குழுவுடன்..
இது இயக்குநர் சுதா கொங்கரா, நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் தயாரிப்பாளரும் தனது ஆசை மனைவியுமான ஜோதிகாவுடன் சூர்யா எடுத்த செல்ஃபி போட்டோ.

ஜோவுடன் சூர்யா
இது 68 ஆவது தேசிய விருது விழா நடக்கும் இடத்தில் தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா சேர்ந்து எடுத்த செல்ஃபி போட்டோ.

தியா-தேவ்
இது சூர்யாவும், ஜோதிகாவும் தாங்கள் வாங்கிய தேசிய விருதை தியா மற்றும் தேவ் உடன் சேர்ந்து எடுத்த போட்டோ. இந்த போட்டோவில் தியா அப்படியே ஜோதிகா மாதிரியும், தேவ் சூர்யாவைப் போன்றும் உள்ளனர் தானே!

தந்தை-தாயுடன் சூர்யா
இது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தாங்கள் வாங்கிய விருதை தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வைத்துக் கொண்டு சந்தோஷமாக எடுத்த போட்டோ.
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications
