Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
லேக்மீ ஃபேஷன் வீக் 2023: கவர்ச்சியான நீல நிற உடையில் ஷோஸ் டாப்பராக வந்த ரகுல் ப்ரீத் சிங்!
அழகான பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஸ்ருதி சஞ்சேதி வடிவமைத்த ஆடையை அணிந்து ஷோஸ்டாப்பராக இன்று ராம்ப் வாக் செய்தார். மிக நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த நீல நிற கோ-ஆர்ட் செட்டை அணிந்திருந்தார்
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக் நேற்று தொடங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது. ஃபேஷன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த லேக்மீ ஃபேஷன் ஷோவில் பல்வேறு ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை திரை பிரபலங்கள் மற்றும் மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்து வருகிறார்கள். எல்லா ஆடைகளும் கவர்ச்சியாகவும் அழகாகவும் அட்டகாசமாகவும் பார்வையாளர்களை கவர்ந்துவருகிறது. லேக்மீ ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாள் பிரபல பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை ஷோஸ்டாப்பராக வலம் வந்தார். டிசைனர் ஸ்ருதி சஞ்செதி நேர்த்தியாக வடிவமைத்த ஆடையைத்தான் இவர் அணிந்து ராம்ப் வாக் செய்தார்.

வடிவமைப்பாளர் ஸ்ருதி சஞ்செதி, காதி இந்தியாவுடன் இணைந்து "நிலையானதாக இருத்தல்" என்று தடிமனான எழுத்துக்களில் எழுதப்பட்ட தொகுப்பை வழங்கினார். கதர் ஆடைகள் அணிவது சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று தெரிவிக்கிறார். மேலும், உகந்த பொருட்கள், வண்ணங்கள் மற்றும் நுட்பங்களால் தயாரிக்கப்பட்ட இந்த கதர் ஆடைகள் மனித நாகரீகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது.
அழகான பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஸ்ருதி சஞ்சேதி வடிவமைத்த ஆடையை அணிந்து ஷோஸ்டாப்பராக இன்று ராம்ப் வாக் செய்தார். மிக நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த நீல நிற கோ-ஆர்ட் செட்டை அணிந்திருந்தார். டேங்க் டாப் மற்றும் ஸ்கர்ட் மற்றும் முன் புறம் பிரிந்த வடிவமைப்பு கொண்ட ஷார்ட்ஸ் ஆடையை அணிந்து மிகவும் கவர்ச்சியாக தோற்றமளித்தார்.
நீல வண்ண ஆடையில் வெள்ளை நிறத்தில் பூக்கள் மற்றும் புள்ளிகள் கொண்ட டிசைனில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கோ-ஆர்ட் செட்டில் அசத்தலான மேட்சிங் ஜாக்கெட்டை ராகுல் அணிந்திருந்தார். டேங்க் டாப் மற்றும் ஜாக்கெட்டில் இடம்பெற்றிருக்கும் சிக்கலான கை எம்பிராய்டரி அழகாக இருந்தது. இது டிசைனர் ஸ்ருதி சஞ்சேதியின் சிறந்த கைவினைத்திறனை வெளிப்படுத்தியது.
இனிமையான வண்ணங்கள், கண்ணைக் கவரும் விவரங்கள் மற்றும் சோதனை நிழற்படங்களுடன், ஒருவர் பாணியை இந்த கதர் ஆடை மூலம் மாற்றலாம். இந்தியாவில் சிறந்த கைவினைத்திறனில் பாரம்பரிய ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
கதர் நெசவுகள், ஹேண்ட் பிளாக் பிரிண்டிங் மற்றும் ஹேண்ட் ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் எம்பிராய்டரி மூலம் நவீனமாக உருவாக்கப்பட்ட ஆடைகளை இந்நிகழச்சியில் காணலாம். இந்நிகழ்ச்சி மார்ச் 12ஆம் தேதி நிறைவடையும்.



Click it and Unblock the Notifications




