Just In
- 3 hrs ago
இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்... இந்த ராசிகளில் குறைவான மக்களே இருக்காங்களாம்... உங்க ராசி என்ன?
- 4 hrs ago
இந்த கோடையில் நீங்க உடற்பயிற்சி செய்யும்போது என்னென்ன செய்யணும் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?
- 5 hrs ago
மிதுனம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணுமாம்.. உங்க ராசியும் இருக்கா?
- 6 hrs ago
உங்க கணவன் அல்லது மனைவி உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிறாங்களா? அப்ப 'இத' பண்ணுங்க...!
Don't Miss
- News
கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - தனி மனித இடைவெளி அவசியம் : தமிழக அரசு
- Finance
அதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்த பிளிப்கார்ட்.. அது புதுசா இருக்கே..!
- Automobiles
இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது தெரியுமா? சரியா சொல்லுங்க பார்ப்போம்...
- Sports
தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுத்த கும்ப்ளே... பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடறாரு அஸ்வின்!
- Movies
தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கொரோனா பாதித்த நடிகை...வலுக்கும் எதிர்ப்பு
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கண்கவர் ஆடைகளை அணிந்து கலக்கிய பிரபலங்கள்!
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது விழாவின் 78 ஆவது பதிப்பு கலிஃபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக இவ்விருது விழாவானது கடந்த வருடத்தைப் போல் இல்லாமல், இந்த வருடம் இணையம் வழியாக நேரலையில் கோல்டன் குளோப் விருதை வென்றவர்கள் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
விருது விழாவில் கலந்து கொள்ளும் போது எப்படி பிரபலங்கள் பல கண்கவர் உடைகளை அணிந்து வருவார்களோ, அதேப் போல் இந்த வருடம் இணையம் மூலமாக நடக்கும் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு தங்களின் இருப்பிடத்திலேயே அற்புதமான உடைகளை அணிந்து பங்கு கொண்டனர். கீழே 2021 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாற்கு அட்டகாசமான உடைகளை அணிந்திருந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

காலே குக்கோ
நடிகை காலே குக்கோ கிரே நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்திருந்தார். இந்த உடையானது ஆஸ்கார் டி லா ரென்டாவிலிருந்து வந்தது. இந்த கவுனிற்கு காலே அதிகமான ஆபரணங்களை அணியாமல், ஹாரி வின்ஸ்டனின் குறைந்தபட்ச நகைகளுடன் ஜொலித்தார். மேக்கப் என்று பார்த்தால், கன்னங்களுக்கு லேசாக பிளஷ் அடித்து, உதட்டிற்கு பிங்க் நிற லிப் ஷேடு போட்டிருந்தார். ஹேர் ஸ்டைல் பற்றி கூற வேண்டுமானால், சைடு ஸ்வெப்ட் செய்து, ப்ரீ ஹேர் விட்டிருந்தார்.

ரோசமண்ட் பைக்
ரோசமண்ட் பைக் அலெண்சாண்டர் மெக்வீனிடமிருந்து வந்த சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் பால் பவுன் அணிந்து, பொம்மை போல காட்சியளித்தார். இந்த கவுனானது பல அடுக்கு சுருக்கங்களைக் கொண்டது. இந்த உடையின் அடுக்குகளானது நெட்டட் துணி வகையால் ஆனது. இந்த கவுனிற்கு கால்களில் கருப்பு நிற பூட்ஸ் அணிந்திருந்தார். மேலும் மேக்கப் என்று பார்த்தால், கண்களுக்கு கண் மை போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிங்க் பிளஷ் அடித்து, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார். ரோசமண்ட் இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து, ப்ரீ-ஹேர் விட்டிருந்தார்.

எல்லே பன்னிங்
எல்லே பன்னிங் ஐஸ்-ப்ளூ நிற மின்னும் கவுன் அணிந்து, கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் ஜொலித்தார். இந்த விழாவிற்கு இவர் ஸ்லீவ்லெஸ் மற்றும் பிளங்கிங்-நெக்லைன் கொண்ட சாடின் குஸ்ஸி கவுனைத் தேர்ந்தெடுத்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் ஃப்ரெட் லெய்டனின் வெள்ளி நிறமான காதணிகளை அணிந்திருந்தது, அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது. எல்லேவின் ஹேர் ஸ்டைல் பற்றி கூறவேண்டுமானால், இவர் இந்த உடைக்கு கொண்டையைப் போட்டிருந்தார். மேக்கப் என்று பார்க்கும் போது, கண்களுக்கு மை போட்டு, கன்னங்களில் லேசாக பிளஷ் அடித்து, உதட்டிற்கு லேசாக பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

அமண்டா செஃப்ரிட்
அமண்டா, ஆஸ்கார் டி லா ரென்டாவிலிருந்து வந்த பேக்லெஸ் சிவப்பு நிற மெர்மெய்டு கவுனைத் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார். இந்த ஸ்ட்ராப்லெஸ் உடையானது, கனமான மலர் வளையத்தைக் கொண்டிருந்தது. இந்த உடைக்கு அமண்டா முத்து காதணி மற்றும் நெக்லேஸ் அணிந்திருந்தது, அவரை அட்டகாசமாக காட்டியது. அமண்டா இந்த உடையின் தோற்றத்தை மேலும் சிறப்பாக வெளிக்காட்ட சைடு ஸ்வெப்ட் எடுத்து, முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்து, ப்ரீ-ஹேர் விட்டிருந்தார். மேக்கப் பற்றி கூற வேண்டுமானால், கண்களுக்கு கருப்பு நிற ஐ-லைனர், கண் மை போட்டு, கன்னங்களில் பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு வெளிரிய பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

சிந்தியா எரிவோ
சிந்தியா எரிவோ நியான் பசை நிற ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்திருந்தார். இந்த வாலண்டினோ ஸ்பிரிங் 2021 கோச்சர் கவுனிற்கு, இவர் அற்புதமான காலணியை தேர்வு செய்து அணிந்திருந்தார். மேலும் இந்த கவுனிற்கு இவர் காதுகளில் சில்வர் நிற காதணி மற்றும் மூக்குத்தியை அணிந்திருந்ததுடன், முழங்கை வரையிலான கையுறைகளை அணிந்திருந்தார். இவர் மொட்டை தலை ஸ்டைலுடன், கண்களுக்கு கண் மை, கனமான மஸ்காரா, உதடுகளில் வெளிரிய பிங்க் நிற லிப்ஸ்டிக் என இவர் தனது தோற்றத்தை முழுமைப்படுத்தினார்.

மார்கோட் ராபி
மார்கோட் ராபி ஒரு கருப்பு நிற ஸ்லிட் கவுன் அணிந்து அசத்தினார். இந்த உடையானது கனமான கிரிஸ்டல் பதிக்கப்பட்டு, பல அடுக்கு லேயர்களைக் கொண்டிருந்தது. மேலும் இந்த உடைக்கு இவர் அணிந்திருந்த மெல்லிய கருப்பு நிற பெல்ட், இந்த உடையின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது. மார்கோட் இந்த உடைக்கு சில்வர் நிற காதணிகள், மோதிரங்கள் மற்றும் விரல் நகங்களுக்கு கருப்பு நிற நெயில்பாலிஷ் போட்டிருந்தார். மேக்கப் பற்றி கூற வேண்டுமானால், கண்களுக்கு ஐ-லைனர் போட்டு, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

சாரா ஹைலேண்ட்
சாரா ஹைலேண்ட் பிரகாசமான அடர் சிவப்பு நிற ஆஃப்-ஷோல்டர் கவுன் அணிந்திருந்தார். இந்த கவுனிற்கு இவர் கால்களில் ஹீல்ஸ் போட்டு, காதுகளில் சில்வர் நிற காதணிகள் மற்றும் கைவிரலில் மோதிரங்களை அணிந்திருந்தார். அதோடு சாரா இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து, முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்து, ப்ரீ-ஹேர் விட்டிருந்தார். மேக்கப் என்றால், கண்களுக்கு மை போட்டு, போலியான கண் இமைகளை வைத்து, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிப் போட்டிருந்தார்.
உங்களுக்கு இவர்களுள் யாருடைய லுப் பிடித்துள்ளது?