Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அலட்டிக் கொள்ளாமல் சிம்பிளாக வந்த கர்ப்பிணி ஜெனிலியா!
கடந்த சனிக்கிழமையன்று நடிகை அசின் மற்றும் ராகுல் ஷர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இரண்டாம் முறையாக தாயாகி இருக்கும் நடிகை ஜெனிலியா, தன் கணவர் மற்றும் நடிகருமான ரித்தேஷ் உடன் வந்திருந்தார். ஜெனிலியா திருமணத்திற்கு பின் மற்ற நடிகைகளைப் போல் அல்லாமல், குடும்பத்தின் மீது மட்டும் கவனத்தை செலுத்தி வந்தார்.
அத்தகையவர் நடிகை அசின் மற்றும் ராகுல் ஷர்மாவின் திருமண வரவேற்புக்கு அற்புதமான உடையணிந்து, ஜோடியாக வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜெனிலியா அழனாக நீல நிற அனார்கலியை அணிந்து, தன் வயிறு தெரியாதவாறு துப்பட்டாவைப் போட்டு வந்திருந்தார்.
சரி, இப்போது அசின் மற்றும் ராகுலின் திருமண வரவேற்பிற்கு ஜெனிலியா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அனிதா டாங்ரே உடை
நடிகை ஜெனிலியா அசின் மற்றும் ராகுலின் திருமண வரவேற்பிற்கு நீல நிற அனிதா டாங்ரே அனார்கலியை அணிந்து வந்திருந்தார். படத்தில் காட்டப்பட்டுள்ள இது தான் டிசைனர் அனிதாடாங்ரே வடிவமைத்த அனார்கலி.

சிம்பிள் லுக்
ஜெனிலியா இந்த அனார்கலிக்கு அளவுக்கு அதிகமாக மேக்கப் போடாமல் சிம்பிளாக டச்சப் செய்து கொண்டு, காதுகளுக்கு அழகிய கம்மலை அணிந்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ரித்தேஷ் உடன் ஜெனிலியா
இது கர்ப்பிணி ஜெனிலியா தன் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் நடந்து வரும் போது எடுத்த போட்டோ. நடிகர் ரித்தேஷ் கருப்பு நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற கோட் அணிந்து, தலையில் ஜெல் தடவி ரவுடி போன்று ஹேர்ஸ்டைல் வைத்துக் கொண்டு வந்தார்.

கர்ப்பிணிக் களை
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் அழகாக தெரிவார்கள். அசினின் திருமண நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஜெனிலியாவின் முகத்தில் கர்ப்பிணிக் களை தாண்டவமாடுவது நன்கு தெரிந்தது.



Click it and Unblock the Notifications