Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு சூட்டைக் கிளப்பும் ஹாட்டான உடையில் வந்த பிரபலங்கள்!
கீழே 2022 ஆம் ஆண்டின் நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு சூட்டைக் கிளப்பும் படியான கவர்ச்சியான உடை அணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 2022 ஆம் ஆண்டின் நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவானது மும்பையில் உள்ள செயிட் ரெஜிஸில் டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் அட்டகாசமான உடையில் வந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் ஒவ்வொருவரும் மிகவும் அழகான, கவர்ச்சிகரமான உடையில் வந்து அசத்தினர். ஒவ்வொரு பிரபலங்களும் மற்றவர்களுடன் போட்டிப் போட்டு யார் அழகானவர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கிளாமரான உடைகளையெல்லாம் அணிந்து வந்தனர்.

இந்த சிவப்பு கம்பள விருது விழாவிற்கு கத்ரீனா கைஃப், மலாய்கா அரோரா, ராஷ்மிகா மந்தனா, சாரா அலி கான், கியாரா அத்வானி, க்ரிதி சனோன், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழே 2022 ஆம் ஆண்டின் நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு சூட்டைக் கிளப்பும் படியான கவர்ச்சியான உடை அணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு யாருடைய லுக் பிடித்துள்ளது என்பதை சொல்லுங்கள்.

ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா 2022 நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவின் சிவப்பு கம்பளத்திற்கு பர்கண்டி நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார். இந்த கவுனிற்கு ஆபரணங்கள் எதுவும் அணியாமல் காதுகளில் மட்டும் நீளமான காதணியை அணிந்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

க்ரிதி சனோன்
நடிகை க்ரிதி சனோன் நைக்கான ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு வெள்ளை நிற தை-ஹை ஸ்லிட் கொண்ட கவர்ச்சிகரமான உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது டீப்-லோ நெக் கொண்டிருந்தது மற்றும் இந்த உடைக்கு இவர் கழுத்தில் ஆபரணங்கள் எதுவும் அணியவில்லை.

சாரா அலி கான்
நடிகை சாரா அலி கான் கருப்பு நிற தை-ஹை ஸ்லிட் மற்றும் ஃப்ரண்ட் கட்அவுட் டீடெய்ஸ்ட் கொண்ட கவுனை அணிந்து வந்திருந்தார். இந் உடைக்கு இவர் ஆபரணங்கள் அதிகம் அணியவில்லை மற்றும் இவர் நேர் உச்சி எடுத்து கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

மலாய்கா அரோரா
நடிகை மலாய்கா அரோரா நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு தேவதைப் போன்று வெள்ளை நிற கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த கவுனிற்கு இவர் எந்த ஒரு ஆபரணங்களும் அணியவில்லை.

கியாரா அத்வானி
நடிகை கியாரா அத்வானி நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு தை-ஹை ஸ்லிட், டீப்-லோ நெக் மற்றும் ரஃபிள் விவரங்களைக் கொண்ட ஸ்டைலான மற்றும் செக்ஸியான கருப்பு நிற கவுனை அணிந்து வந்திருந்தார்.

கத்ரீனா கைஃப்
நடிகை கத்ரீனா கைஃப் இந்த நைக்கா ஃபெமினா பியூட்டி சிவப்பு கம்பள விருது விழாவிற்கு பலவண்ணங்களைக் கொண்டு மின்னும் சிங்கிள் ஸ்ட்ராப் கவுனை அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவின் சிவப்பு கம்பளத்திற்கு நியான் நிற தேவதை போன்ற உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் ஜான்வி கபூர் கடற்கன்னி போன்று காட்சியளித்தார்.

ஷமிதா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டியின் சகோதரியும், நடிகையுமான ஷமிதா ஷெட்டி 2022 நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவின் சிவப்பு கம்பளத்திற்கு சற்று வித்தியாசமாக ஆரஞ்சு நிற தை-ஹை ஸ்லிட் மற்றும் ஹால்டர் நெக் கவுனை அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
