Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
விருது விழா ஒன்றில் போட்டிப்போட்டு கவர்ச்சியை தெறிக்கவிட்ட பிரபலங்கள்!
சமீபத்தில் மிகவும் பிரபலமான 2020 அமெரிக்கன் மியூசிக் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாப்ட் தியேட்டரில் நடைபெற்றது.
சமீபத்தில் மிகவும் பிரபலமான 2020 அமெரிக்கன் மியூசிக் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாப்ட் தியேட்டரில் நடைபெற்றது. இந்த பிரபலமான விருது விழாவிற்கு கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு நடிகர் நடிகைகள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர். அதில் பல பெண் பிரபலங்கள் கவர்ச்சிகரமான மற்றும் மிகவும் ஸ்டைலான உடைகளில் விருது விழாவிற்கு வந்திருந்தனர்.

கீழே 2020 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு கவர்ச்சிகரமான உடையில் வந்திருந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

துவா லிபா
பாடகியும், பாடலாசிரியருமான துவா லிபா, கோல்டன் மற்றும் சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, நட்சத்திர மீன் எம்பிராய்டரி செய்யப்பட்ட குட்டையான உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் கழுத்தில் தங்க நெக்லேஸ் அணிந்து, கண்களுக்கு க்ரீன்-ப்ளூ ஐ-ஷேடோ மற்றும் கால்களுக்கு மெட்டாலிக் ஹை ஹீல் காலணியை அணிந்திருந்தார்.

ஜெனிபர் லோபஸ்
51 வயதான ஜெனிபர் லோபஸ் சில்வர் நிற உடையில் வந்து ஜொலித்தார். இவர் ஒரு டூ-பீஸ் கொண்ட பால்மெய்ன் உடையை அணிந்திருந்தார் இந்த உடையின் டாப்ஸானது மிகவும் லோ நெக், ஸ்கூப் நெக்லைன் மற்றும் ஃபுல் ஸ்லீவ்களைக் கொண்டிருந்தது. மேலும் பாவாடையானது ஒரு தொடை முழுவதும் தெரியுமாறு தை-ஹை சைடு ஸ்லிட் கொண்டு படு கவர்ச்சிகரமாக இருந்தது. அதோடு இந்த உடைக்கு ஏற்றவாறு இவர் காதுகளுக்கு வைர காதணி மற்றும் ஈரமான தலைமுடி ஸ்டைல் என தனது தோற்றத்தை முடிந்த அளவு சிறப்பாக வெளிக்காட்டினார்.

காரா டெலிவிங்னே
அமெரிக்கன் சூப்பர் மாடலான காரா, மெட்டாலிக் சில்வர் டோல்ஸ் மற்றும் கபனா சூட்டில் பிரகாசமாக வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் அழகிய மோதிரங்கள், கழுத்தில் செயின்களை அணிந்திருந்தார். மேலும் காரா இந்த உடைக்கு பொருத்தமாக கண்களுக்கு ஐ-ஷேடோ மற்றும் சைடு ஸ்வெப்ட் எடுத்து கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

சியாரா
35 வயதான பாடகியான சியாரா, ஹை ஸ்லிட், ரொமான்டிக் ஸ்லீவ்ஸ் மற்றும் டீப்-லோ நெக் கொண்ட பால்மெய்ன் ஸ்கார்லெட் சிவப்பு கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் இவர் கால்களுக்கு வெய்ட்ஸ்மேன் தை பூட்ஸ் மற்றும் ஜெனிபர் மேயர் நகைகளையும் அணிந்திருந்தார். முக்கியமாக இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டை, இவரது தோற்றத்தை வித்தியாசமாகவும், சிறப்பாகவும் காட்டியது எனலாம்.

தாராஜி பி. ஹென்சன்
இந்த விருது விழாவைத் தொகுத்து வழங்கியவர் தான் தாராஜி. இவர் மின்னும் சில்வர் ஆர்மணி உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் ஸ்டைலான வெள்ளை நிற தலைப்பாலை மற்றும் சில்வர் ஹீல்ஸ் அணிந்திருந்தார். முக்கியமாக இவர் கையடக்கமான முகமூடி மற்றும் டிஃப்பனி & கோ நகைகளுடன் தனது தோற்றத்தை முடித்தார்.

பெபே ரெக்ஷா
பிரபல பாடகரான பெபே ரெக்ஷா இளஞ்சிவப்பு நிற மாறுபட்ட கட் அவுட் கவுனில் வந்து பிரகாசித்தார். இந்த உடைக்கு இவர் சில்வர் நிற பிரேஸ்லெட் மற்றும் ஸ்டைலெட்டோக்களால் தோற்றத்தை நிறைவு செய்தார். இந்த கவர்ச்சிகரமான கட் அவுட் கவுன் ஒரு முழு தொடையையும் அப்பட்டமாக வெளிக்காட்டியபடி இருந்தது, இவரது கவர்ச்சியை பலமடங்கு அதிகரித்துக் காட்டியது. முக்கியமாக இந்த உடைக்கு இவர் அணிந்திருந்த ஆபரணங்கள் பொருத்தமாகவும் அற்புதமாகவும் இருந்தது எனலாம்.

பாரிஸ் ஹில்டன்
பாரிஸ் ஹில்டன் சில்வர் நிற மின்னும் மினி ட்ரஸ் அணிந்து வந்திருந்தார். இந்த மினி உடையானது டீப்-லோ நெக் கொண்டிருந்தது. இந்த உடைக்கு இவர் ஹை போனிடைல் போட்டு, சில்வர் காதணி மற்றும் சில்வர் பம்ப்ஸ் அணிந்திருந்தது, அவரது தோற்றத்தை சிறப்பாக காட்டியது.

லாவெர்ன் காக்ஸ்
அமெரிக்க நடிகையான லாவெர்ன் காக்ஸ் மைக்கேல் கோஸ்டெல்லோ கவுன் அணிந்து வந்திருந்தார். ஏற்கனவே இந்த உடை கவர்ச்சிகரமாக இருந்தது. இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் இவருக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது.



Click it and Unblock the Notifications
