Latest Updates
-
13 வருடம் கழித்து சனிக்கிழமையில் வரும் சனி ஜெயந்தி: இந்த 3 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்க.. -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தக்காளி சட்னியை இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் அரைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
பிரபலங்களின் பிரிவா? வதந்திகளை நம்பி நீங்களும் இப்படித்தான் பேசுகிறீர்களா? உண்மை இதோ! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இந்த பக்குவத்துல மிளகு சிக்கன் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த கணவர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
விஜய் - சங்கீதா விவகாரம்: உறவில் விரிசல் ஏற்பட்டால் குழந்தைகளை எப்படி கையாள்வது? இதோ சில முக்கிய ஆலோசனைகள்! -
கொரிய பெண்கள் மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 நேச்சுரல் பொருட்களை தொடர்ந்து யூஸ் பண்ணுங்க.. -
அழகான பெண்கள் அதிகமுள்ள டாப் 10 நாடுகள் - எந்த நாடு முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல் இறால் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
ஃபெமினா விருது விழாவிற்கு லோ நெக் கவுனில் செக்ஸியாக வந்த ஐஸ்வர்யா ராய்!
மும்பையில் உள்ள JW மாரிட் ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டின் ஃபெமினா பியூட்டி விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பல அழகிய உடை அணிந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியை ஜொலிக்க வைத்தனர். இந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களும் கண்களைக் கவரும் வண்ணம் அற்புதமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தனர்.
அதில் சிலரது உடைகள் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவற்றை நம்மால் தவிர்க்க முடியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை 2018 ஆம் ஆண்டு ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு வந்த சில பிரபலங்களின் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் பச்சன்
ஐஸ்வர்யா ராய் பச்சன் நாளுக்கு நாள் சிக்கென்று மாறிக் கொண்டு இருந்தாலும், அவரது முகத்தில் வயதாகிவிட்ட தோற்றம் நன்கு தெரிகிறது எனலாம். இருப்பினும் இந்த ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த டீப் லோ நெக் கொண்ட கருப்பு மற்றும் பழுப்பு ஷேடு மின்னும் பால் கவுன், இவரை சிறப்பாக காட்டியது. அதிலும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த சிவப்பு கம்பளத்தில் தேவதைப் போன்று நடந்து வந்தது, இன்னும் அழகாக காட்டியது.

அதிதி ராவ் ஹைதாரி
பால் போன்ற நிறம் கொண்ட அதிதி ராவ், சிம்பிளான உடையில் வந்திருந்தாலும், க்யூட்டாக இருந்தார். அதிலும் இவர் அணிந்து வந்த வெள்ளை நிற மின்னும் கவுன் அவரை மிகவும் அழகாக வெளிக்காட்டியது. இவர் அணிந்து வந்த உடையானது டிசைனர் ஸ்ரேயா சோம் வடிவமைத்தது. இது அந்த ஃபெமினா பியூட்டி விருது விழாவில் அதிதி ராவ் கொடுத்த போஸ்களாகும்.

திஷா பதானி
திஷா பதானி ஒற்றைத் தோள்பட்டை கொண்ட மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடை முழுவதும் மின்னும் கோல்டன் பூ எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. இந்த உடையின் தொடைக்கு கீழே ட்ரான்ஸ்பெரண்ட்டாக இருப்பதால், இது திஷா பதானிக்கு ஒரு செக்ஸியான தோற்றத்தைக் கொடுத்தது. உங்களுக்கு திஷா பதானியின் இந்த லுக் பிடித்துள்ளதா?

கெய்ரா அத்வானி
கெய்ரா அத்வானி இருவேறு மென்மையான வெளிர் நிறங்கள் கொண்ட உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். கெய்ரா அணிந்து வந்த உடை முற்றிலும் வித்தியாசமாக இருந்ததோடு, அதை அவர் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது. இந்த உடையின் மேல் பகுதி கிராப்டு ஸ்ட்ராப்லெஸ் பிகினி டாப் மற்றும் மொசுமொசுவென்று நெட் ஸ்கர்ட் கொண்டிருந்தது.

ஈவ்லின் சர்மா
ஈவ்லின் மிகவும் அழகிய கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது ப்ளைன் க்ரீம் கலர் பாடி கொண்டு, பேர்டாப் ஸ்லீவ் மற்றும் வெயிஸ்ட்லைனில் ப்ரில்களைக் கொண்டிருந்தது. இந்த உடைக்கு ஈவ்லின் அழகிய பெரிய காதணி அணிந்து, பாஸ்டல் ஷேடு ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது, அவரை கவர்ச்சிகரமாக காட்டியது.

கிருதி கர்பண்டா
டிவி நடிகையான கிருதி, ஃபெமினா பியூட்டி விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் லேபிள் டி பாஸ்டல் பச்சை நிற கவுன் அணிந்து, ட்ரெஸ்மோடு ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார். கிருதி அணிந்து வந்த உடையின் முன்பகுதியில் தொடை முழுவதும் நன்கு தெரியும் படி மிகவும் ஏற்றமாக இருந்தது, அவரை சற்று கவர்ச்சிகரமாக காட்டியது எனலாம். உங்களுக்கு கிருதியின் இந்த லுக் பிடித்துள்ளதா?

மலாய்கா அரோரா கான்
மலாய்கா அரோரா ஒற்றைத் தோற்பட்டை கொண்ட நீல நிற கவுன் அணிந்து வந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடையை வடிவமைத்தவர் அன்டோனியோ ரிவா மிலானோ ஆவார். இந்த உடையானது சுருக்கம் கொண்ட நெக்லைனைக் கொண்டிருந்தது. மேலும் மலாய்கா இந்த உடைக்கு பொருத்தமான காதணியைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்தது அவரை சிறப்பாக காட்சியது. உங்களுக்கு மலாய்காவின் தோற்றம் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications