Latest Updates
-
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும்
பட்ஜெட்: நிர்மலா சீதாராமனின் புடவைகளைப் பற்றிய ஒரு பார்வை..!
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 3ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை அவர் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்கிறார். தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனையை படைக்கிறார் நிர்மலா சீதாராமன்.

இந்நிலையில் ஒவ்வொருமுறை பட்ஜெட் தாக்கலின்போதும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடுத்தும் புடவையின் நிறம் என்ன? அவர் என்ன விதமான புடவையை அணியபோகிறார் என்று அனைவரின் கவனமும் முக்கியமாக பெண்களின் கவனமும் இருக்கும்.. பட்ஜெட் முன்பு அல்வா கிண்டும் நாளிலும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவையை மக்கள் தவறாமல் கவனிப்பார்கள்.. இதுவரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த 6 முறையும் 6 விதமான புடவைகளை அணிந்து வந்துள்ளார். அது முற்றிலுமாக பேசும் பொருளாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம்.. வாங்க அந்த 6 புடவைகள் என்னென்ன? அவற்றின் சிறப்பு மற்றும் நிறம் என்ன? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
2024 இடைக்கால பட்ஜெட்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் நீல நிற கைத்தறி டஸ்ஸர் சேலையை அணிந்து வந்தார்.. அது அவரது 6வது பட்ஜெட் உரை ஆகும். க்ரீம்கலர் ப்ளவுஸ் அணிந்து கையில் சிவப்பு நிற பேக் உடன் செய்தியாளர்கள் முன்பு தோன்றினார்.
2023 பட்ஜெட்:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பாரம்பரிய கோபுரம் பார்டர் சிவப்பு புடவை அணிந்தார். சீதாராமன் பட்ஜெட் நாளில் கருப்பு பார்டர் மற்றும் சிக்கலான தங்க வேலைப்பாடு கொண்ட சிவப்பு கோபுரம் புடவையை தேர்வு அணிந்து வந்திருந்தார்.. சிவப்பு அன்பு, அர்ப்பணிப்பு, வலிமை மற்றும் தைரியத்தை குறிக்கிறது.
2022 பட்ஜெட்:
2022 ஆம் ஆண்டில், நிதியமைச்சர் மெரூன் நிற புடவை அணிந்திருந்தார்.
இது பொதுவாக கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் தயாரிக்கப்பட்டது. அவரது சேலை பிரவுன் மற்றும் சிகப்பு ஆகிய இரண்டு வண்ணங்களின் கலவையாக இருந்தது, அவை ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
2021 பட்ஜெட்:
2021ஆம் ஆண்டில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பட்டு போச்சம்பள்ளி புடவையை அணிந்து வந்தார்.. நிர்மலா சீதாராமன் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பட்டு போச்சம்பள்ளி புடவையில் பச்சை நிற பார்டருடன், பல்லுவை சுற்றி இகாட் வடிவங்களுடன் காணப்பட்டார். போச்சம்பள்ளி இகாட் பாரம்பரியமாக தெலுங்கானாவில் உள்ள பூடன் போச்சம்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது 'இந்தியாவின் பட்டு நகரம்' என்று பிரபலமாக அறியப்படுகிறது.
2020 பட்ஜெட்:
2020 ஆம் ஆண்டில், நிதியமைச்சர் நீல நிற பார்டர் மற்றும் பொருத்தமான ப்ளவுஸ்வுடன் கூடிய அழகிய மஞ்சள்-தங்க பட்டுப் புடவையை அணிந்திருந்தார். மஞ்சள் பொதுவாக செழிப்புடன் தொடர்புடையது மற்றும் பெரும்பாலும் இந்தியர்களால் சுப சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. சீதாராமனின் பிரகாசமான புடவை, தொற்றுநோய் காரணமாக பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நாடு அடைய விரும்பும் துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது.
2019 பட்ஜெட்:
2019 ஆம் ஆண்டில், நிர்மலா சீதாராமன் ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு, தங்க-பார்டர் கொண்ட மங்கல்கிரி புடவையை அணிந்திருந்தார். தனது முதல் பட்ஜெட்டில், அவர் முதல் முறையாக பிரீஃப்கேஸை பாரம்பரிய 'பாஹி கட்டா'வுடன் மாற்றினார். பட்ஜெட் ஆவணங்கள் பட்டு சிவப்பு துணியில் சுற்றப்பட்டு அதன் மேல் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதுவே அவருடைய முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்..
இதுபோலவே வரும் 22ஆம் தேதியும் நடக்க இருக்கும் பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் என்ன புடவை அணிவார் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.. ? பொருத்திருந்து பார்க்கலாம்...



Click it and Unblock the Notifications
