For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் தொட்டால் ஷாக் அடிக்கும் பிரா... இனி எதுக்கு #METOO... சென்னை மாணவர்கள் கண்டுபிடிப்பு

|

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

கற்பழிப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே பேகிறது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உறுதியாகி விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#METOO

#METOO

Image Coursty

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்த வேளையில் சமீபத்தில், #METOO என்ற movement ஐ சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தி, அதன்மூலம் பெண்கள் பணியிடங்களில், சூழலில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலம் சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் இருக்கும், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் சிக்கி வருகின்றனர்.

இதில் யார் சிக்குகிறார்கள் என்ற பரபரப்பு செய்தியை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களைத் தேடும் நாம், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலைக் குறைப்பதற்காக நம்முடைய சென்னை மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அற்புத கண்டுபிடிப்பைக் கணடுகொள்ளாமலே போய்விட்டோம். அதுபற்றி இங்கே விளக்கமாகப் பார்ப்போம்.

பாலியல் சீண்டல்கள்

பாலியல் சீண்டல்கள்

பேருந்து நிலையங்கள் தொடங்கி பொது இடங்கள் வரை உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, அவர்களின் மார்பகங்களை தொட்டு நசுக்கிவிட்டு கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினம் தினம் இந்திய பெண்களுக்கு நடந்தேறுகின்றன. இதை அவமானமாக கருதி பெரும்பான்மையான பெண்கள் வெளியே சொல்வதில்லை.

அப்படியே வெளியே சொன்னாலும் இவர்களை பிடித்து தண்டிப்பது யார்?

Most Read: பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்?

ஷாக் அடிக்கும் பிரா

ஷாக் அடிக்கும் பிரா

Image Coursty

இதுபோன்ற காம கொடூரர்களின் தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய கட்டாயம் இந்திய பெண்களுக்கு இருந்தது. இந்த சூழலில்தான் ஒரு அறிய பெண்கள் உள்ளாடையை (பிரா) சென்னை SRM கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை SRM கல்லூரியில் ஆட்டோ மொபைல் படிக்கும் மாணவிகளான மோனிஷா மோகன் மற்றும் ரிம்பி திரிபாதி ஆகியோர் இந்த அதிசய பெண்கள் உள்ளாடையை கண்டு பிடித்துள்ளனர். இந்த பிராவை பெண்கள் அணிந்து செல்லும் பொழுது இந்திய காமகொடூரர்கள் பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு (கற்பழிக்க) பிடித்தால் போதும் உடனே அந்த பெண் அணிந்திருக்கும் பிரா கடுமையான மின்சாரத்தை வெளிப்படுத்தும்.

எப்படி இயங்குகிறது?

எப்படி இயங்குகிறது?

Image Coursty

அதாவது அந்த நவீன பிரா 3800 கிலோ வால்ட் சக்தி கொண்ட பெரும் மின்சார அதிர்ச்சி (ஷாக்) ஒன்றை கொடுக்கும். அது தொடும் நபரை உடனே மயக்க நிலைக்கு தள்ளும் சக்தி கொண்டது. அது மட்டுமல்ல இந்த சம்பவம் நடந்த நேரம், இடம் குறித்த தகவல்கள் பெண்ணின் தாய், தந்தையர் மற்றும் உறவினர்களுக்கும் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கும் GPS வழியாக SMS கொடுத்துவிடும் இந்த பிரா. மேலும் இது போன்று 82 முறை அதிர்ச்சி (ஷாக்) கொடுக்க கூடிய அளவுக்கு திறன் வாய்ந்ததாக இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

Most Read: உங்கள் சருமத்தை முதல்முறையே கலராக்கும் அத்திப்பழம்... எதோடு கலந்து அப்ளை செய்யணும்?

எப்போது?

எப்போது?

இப்படி அதி சக்திவாய்ந்த மின்சார தாக்குதல் கொடுக்கப்படும் பொழுது, அதை அணித்து இருக்கும் பெண்களுக்கு அது எந்த கெடும் விளைவிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும். இது இந்த #METOO வுக்கு பிறகு வந்தது இல்லை. இந்த அற்புதமான பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கண்டுபிடிப்பு இந்த மாணவர்களால் 2013 ஆம் ஆண்டே வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நாம் தான் அந்த கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமலே போய்விட்டோம். இனியாவது இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவும், விழிப்புணர்வும் அடைவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

electric shocking bra designed by students

here we are focus about the new invention by student for electric shocking bra designed.
Story first published: Tuesday, October 23, 2018, 18:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more