Latest Updates
-
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா?
இரண்டாம் நாள் கேன்ஸ் விழாவில் சிம்பிளா இருந்தாலும், டக்கரா இருக்கும் ஐஸ்வர்யா!!!
உலக திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவிற்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் வந்தாலும், ஐஸ்வர்யாவின் வருகையை அனைவருமே சற்று அதிக ஆவலுடன் தான் காண்போம். உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன், திருமணமாகி குழந்தையைப் பெற்றுக் கொண்டாலும், மீண்டும் அவர் தனது பழைய அழகான உடலமைப்பைப் பெற்றுவிட்டார். இதனால் அவரால் எந்த ஒரு உடையையும் கவலையின்றி அணிய முடிகிறது.
மேலும் 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு முதன்முறையாக வரும் போது கோல்டன் நிற ராபர்டோ கவாலி கவுனை அணிந்த ஐஸ்வர்யா ராய், இரண்டாம் முறை வருகைத் தரும் போது வெள்ளை மற்றும் சில்வர் கலந்த ராபர்டோ கவாலி கவுனை அணிந்து வந்திருந்தார். சொல்லப்போனால் இரண்டு உடையும் ஒரளவு ஒரே மாதிரியாக இருப்பது போல் இருந்தது.
இப்போது கேன்ஸ் விழாவிற்கு இரண்டாம் முறையாக வந்த போது ஐஸ்வர்யா மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ராபர்டோ உடையில்...
கேன்ஸ் விழாவிற்கு இரண்டாம் முறையாக வருகை தரும் போது, ஐஸ்வர்யா ராய் மீண்டும் ராபர்டோ கவாலி கவுனில் வந்தார். அதிலும் வெள்ளை நிற கவுனில், சில்வர் நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

டீப் நெக்
ஐஸ்வர்யா அணிந்திருந்த வெள்ளை நிற ராபர்டோ கவாலி கவுனானது டீப் நெக் கொண்டிருந்தது.

ஐஸ்வர்யாவின் மேக்கப்
முதல் நாள் ஃபுல் மேக்கப்பில் வந்த ஐஸ்வர்யா, இரண்டாம் நாள் மிகவும் சிம்பிளாக அளவான மேக் அப் போட்டு வந்திருந்தார். இதனால் இவரது அழகு இன்னும் அதிகரித்து வெளிக்காட்டியது.

புன்னகையில் ஐஸ்
ஐஸ்வர்யா உதடுகளுக்கு நியூட் நிற மின்னும் லிப் கிளாஸ் அணிந்து வந்திருந்தார். இதனால் அவரது புன்னகை கூட மிகவும் அழகாக இருந்தது.

ஸ்மோக்கி மேக்கப்
ஐஸ்வர்யா ராய் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்திருந்தது, அவரது கண்களை கவர்ச்சிகரமாக வெளிக்காட்டியது.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யாவிற்கு மற்றொரு அழகு அவரது கூந்தல் தான். அவர் இந்த வெள்ளை நிற கவுனிற்கு கூந்தலின் முனைகளில் மட்டும் கர்லி மேற்கொண்டிருப்பது, உடைக்கு பொருத்தமாக இருந்தது.

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்
ஐஸ்வர்யா ராய் காதுகளுக்கு நீளமான வைர கம்மலும், கைக்கு வைர வளையலும் அணிந்து வந்திருந்தார்.

ஒரே மாதிரியான கவுன்
இது தான் ஐஸ்வர்யா முதல் முறையாக வரும் போது ஸ்ராப்லெஸ் கவுனையும், இரண்டாம் முறையாக வரும் போது ஸ்லீவ்லெஸ் கவுனையும் அணிந்து வந்தது. உங்களுக்கு ஐஸ்வர்யாவின் எந்த லுக் பிடித்திருக்கிறது?



Click it and Unblock the Notifications
