Latest Updates
-
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இறுதி நாளில் அபிஷேக் பச்சன்!!!
இன்றுடன் இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் நிறைவுறுகிறது. இந்நாளில் ரோஹித் பால் என்னும் ஆடை வடிவமைப்பாளரின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. ரோஹித் பாலின் கலெக்ஷன்களுக்கு பாலிவுட் நடிகரும், நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் ஷோஸ்டாப்பராக வந்தார்.
நடிகர் அபிஷேக் பச்சன், ரோஹித் பாலுக்காக ராம்ப் வாக் நடந்த போது, அந்த டிசைனர் வடிவமைத்த கருப்பு நிற பந்த்கலா அணிந்து வந்திருந்தார். அபிஷேக் அணிந்திருந்த அந்த பந்த்கலா உடையானது பிங்க் நிற பட்டன்களைக் கொண்டிருப்பதோடு, காலரிலும் பிங்க் நிற பார்டர் கொண்டுள்ளது.
ஏஸ் டிசைனரான ரோஹித் பால் பல்வேறு மணமகன் மற்றும் மணமகள் ஆடைகளை டிசைன் செய்து வெளியிட்டுள்ளார். இப்போது ரோஹித் பால் வடிவமைத்து வெளியிட்ட ஆடைகள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் பச்சன்
இது மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன், ஆடை வடிவமைப்பாளர் ரோஹித் பாலுடன் சேர்ந்து எடுத்தது.

ரூபி ரெட்
ரோஹித் பால் வடிவமைத்த ஆடைகளில் ஒன்று தான், இந்த ரூபி ரெட் மற்றும் கோல்ட் கலந்த லெஹெங்கா உடை.

அடர் ஊதா
ரோஹித் வடிவமைத்ததிலேயே அடர் ஊதா நிற உடையில் அழகான பிங்க் நிற நூல் கொண்டு எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த ஆடை க்யூட்டான லுக்கைக் கொடுக்கிறது.

பூப்போட்ட டிசைன்
பெரும்பாலும் அனைத்து டிசைனர்களுமே பூப்போட்ட டிசைனில் பல ஆடைகளை வெளியிட்டுள்ளனர். அதில் இவர் மட்டும் விதிவிலக்கா என்ன. ஆனால் இவரது உடையில், நிச்சயம் ஒரு வித்தியாசம் உள்ளது. அது என்னவென்றால், வெள்ளை நிற முழுக்கையில் ஊதா நிற கோடுகள் போட்டிருப்பது தான்.

ராஜா லுக்
ரோஹித் பால் வடிவமைத்த உடைகளில் இந்த கருப்ப நிற குர்தாவில் கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பது மகாராஜா லுக்கைக் கொடுக்கிறது.

க்ரீம் மற்றும் கோல்ட்
எப்போதுமே க்ரீம் மற்றும் கோல்ட் கலந்த ஆடைகள் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். அதைத் தெரிந்து கொண்டு, இந்த டிசைனர் கூட க்ரீம் மற்றும் கோல்ட் கலந்த லெஹெங்கா ஆடையை வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.

காபி நிறம்
இது ரோஹித் பாலின் கலெக்ஷன்களிலேயே மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக கொண்ட லெஹெங்கா தான் இந்த கோல்டன் பார்டர் கொண்ட காபி நிற லெஹெங்கா.

க்ரீமுடன் சிவப்பு
க்ரீம் மற்றும் சிவப்பு சேர்ந்தாலும் நல்ல லுக்கைக் கொடுக்கும். மேலும் இந்த நிறங்கள் கலந்த உடையை மணப்பெண்கள் அணிந்தால், சூப்பராக இருக்கும். இது தான் க்ரீம் மற்றும் சிவப்பு நிறம் கலந்த ரோஹித் பால் வடிவமைத்த உடை.

கருப்பு நிற நெட் புடவை
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த புடவையிலேயே, இந்த கருப்பு நிற நெட் புடவை தான் சிறந்தது. ஏனெனில் இந்த புடவையின் ஜாக்கெட் ஷீர் கொண்டிருப்பதோடு, சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

க்ரே குர்தா
இது தான் ரோஹித் பால் வடிவமைத்த ஆண்களுக்கான க்ரே நிற குர்தா. இந்த குர்தாவில் க்ரே நிறம் மட்டுமின்றி, கருப்பு மற்றும் சில்வர் நிறங்களும் கலந்துள்ளன.

கருப்பு வெள்ளை கவுன்
உண்மையிலேயே இதுவரை வெளிவந்த கவுனிலேயே இந்த கருப்பு மற்றும் வெள்ளை நிற கவுன் தனி இடத்தைப் பிடித்திருக்கும். ஏனெனில் அந்த அளவில் இது வித்தியாசமாக இருப்பதோடு, ராயல் லுக்கைக் கொடுக்கிறது.

ஷீர் கவுன்
ரோஹித் பால் வடிவமைத்த கவுனில் மிகச்சிறந்த கவுன்களில் ஒன்று தான் இந்த ஷீர் கவுன்.

லோ நெக்
இந்த க்ரே மற்றும் சந்தனம் கலந்த எம்பிராய்டரி உடையானது லோ நெக் கொண்டிருப்பதோடு, காலர் கொண்டு உள்ளது.



Click it and Unblock the Notifications
