Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
பார்ட்டிக்கு செல்லும் போது கருப்பு நிற ஆடையில் அழகாக காட்சியளிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
நீங்கள் அடிக்கடி பார்ட்டிகளுக்கு செல்லும் நபர் என்றால், உங்களிடம் ஏராளமான உடைகளைகளும் அதற்கு ஏற்றாற்போல் ஆபரணங்களும் இருக்கும். நாம் பார்ட்டிகளுக்கு செல்லும் போது அழகாகவும் நேர்த்தியாகவும் உடை அணிந்திருப்பவர்களை ரசித்து பார்த்து கொண்டிருப்போம். நீங்களும் அதுபோல் அழகாக காட்சியளிக்க வேண்டாமா? வாருங்கள் படிக்கலாம்.
நீங்கள் தீவிர நாட்டம் வைத்து கொண்டிருக்கும் லிட்டில் ப்ளாக் டிரஸை (பெண்கள் பார்ட்டிகளுக்கு அணியும் குட்டையான கருப்பு ஆடை வகை) வைத்திருந்தாலும், இதனை படிக்கலாம்.
எந்த ஒரு விழாவும் இந்த லிட்டில் ப்ளாக் டிரஸ் இல்லாமல் முழுமையடையாது. ஆனால், அந்த விழாவை வண்ணமயமாக்கவும் அழகாக்கவும் இது அவசியமான ஒன்றாகும். மேலும், உங்களை ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக காண்பிக்கும் உடையாக இருக்கும். ஹர்ஷ் ஹர்ஷ் என்றழைக்கப்படும் வடிவமைப்பாளர் ஹர்ஷ் குப்தா அவர்கள் இந்த உடையில் மாற்றங்களை எவ்வாறு கொண்டுவருவது என்று அவர் கூறும் ஆலோசனைகளை இப்பொழுது படிக்கலாம். நியோன் நிறங்களிலான நெக்லஸ், தோடுகள், பிரேஸ்லெட்கள் போன்றவை வேடிக்கையான தோற்றத்தை கொடுக்கும். நீங்கள் உங்கள் லிட்டில் ப்ளாக் டிரஸ்சோடு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அணியலாம்.

இல்லாவிட்டால் விரும்பத்தக்க பொருட்களான சேலை பின் (ப்ரூச்), பெல்ட் அல்லது கைக்கடிகாரம் போன்றவற்றை உலோக நிறங்களில் அணியலாம். 1940 ஆண்டுகளில் அணிந்து வந்த பாரம்பரிய முறையில் இந்த ஆடையை அணியலாம். இந்த கருப்பு உடையின் இடுப்பு பகுதியில் சில ஒளிவீசும் விளிம்புகளை வைத்து முத்துக்களால் அலங்கரிக்கலாம். ஹாலிவுட் நடிகையான ஆவ்ட்ரே ஹெப்பரன் போன்று வடிவமைத்து அணியலாம். முத்து நெக்லஸ் உடன் கருப்பு பீப்-டோஸ் அல்லது ஸ்டில்எடோஸ் அணியலாம். உங்கள் LBD யோடு லெதர் பூட்ஸ், ஜாக்கெட், மற்றும் சில டெனிம் ஆபரணங்களை அணிந்து வித்தியாசமான தோற்றத்தை அளிக்கலாம். உங்கள் ஆடையில் சில லெதர் அல்லது டெனிம் வேலைபாடுகளை செய்து முட்டி வரையிலான கவ்பாய் பூட்ஸ்களை அணியலாம். ஓகே. நீங்கள் பார்ட்டிக்கு தயாராகிவிட்டீர்களா?
சிறந்த லிட்டில் ப்ளாக் டிரஸ் என்பது உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி மற்றவரை வியக்கும்படி வைப்பது தான். நீங்கள் அவ்வாறு செய்வதற்கு காத்திருந்தால், இதோ உங்கள் LBD வடிவமைப்பதற்கு தயாராகுங்கள். எனினும், இந்த கருப்பு ஆடையை அணிவதற்கு பல வழிகள் உள்ளன. உங்கள் உடையை சிறந்த உடையாக மாற்றுவதற்கான வழிகளில் முக்கியமான ஒன்று அதனை அழகான ஆபரணங்களுடன் அணிவதுதான். பெரிய வளையல்கள், சிறிய நெக்லஸ் போன்ற ஆபரணங்களை உபயோகிக்கலாம்.
நீங்கள் செல்லும் பார்ட்டியில் எல்லோருடைய கண்களுக்கும் உங்களையே பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் இந்த வழிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். அடுத்து, இந்த ஆடையை போல்கா டாட் டையிட்ஸ் உடன் அணிய வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் இந்த டையிட்ஸை வடிவமைத்தால், இது உங்களை அழகாகவும் நாகரீகமாகவும் காட்சியளிக்கச் செய்யும். நீங்கள் நாகரீகமான பார்ட்டிகளுக்கு செல்ல நினைத்தால், இந்த முறையில் உங்கள் ஆடையை வடிவமைப்பது தான் சிறந்ததாகும்.
எல்லோரையும் கவர்வதற்கு வெறும் இந்த லிட்டில் ப்ளாக் டிரஸ் மட்டும் போதாது. அதில் சிறிது இணைப்புகளை செய்தால் அது பெரும் வித்தியாசங்களை ஏற்படுத்தும்.அழகான தலை அலங்காரத்துடன் இந்த ஆடையை அணியவேண்டும். இது உங்களை மேலும் அழகாக காட்சியளிக்கச் செய்யும். உங்கள் தலை அலங்காரத்தை சிறந்த வல்லுனர்களை கொண்டு செய்யலாம்.
எல்லோர் கவனமும் உங்கள் பக்கம் திரும்ப வேண்டுமென்றால், நீங்கள் சற்று கூடுதல் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். உங்கள் லிட்டில் ப்ளாக் டிரஸ்சை தைக்கப்பட்ட ஜாக்கெட்டுடன் அணிந்தால் அழகாக காட்சியளிக்கும். இதனை அணிவதன் மூலம் எல்லோரின் பாராட்டுகளையும் பெறலாம். அதனால் இதனை முயற்சிசெய்து மாற்றத்தை கண்டறியுங்கள்.
நீங்கள் சிறிய நெக்லஸ்சை விரும்பாதவர் என்றால், பெரிய நெக்லஸ்களை இந்த ஆடையுடன் அணியலாம். இந்த பெரிய நீண்ட நெக்லஸ்கள் வண்ணமயமாகவும் அழகாகவும் காட்சியளிக்கச் செய்யும். நீங்கள் குண்டாக இருப்பதை நினைத்து வருந்துகின்றீர்களா? கவலையை விடுங்கள். இந்த பெரிய நெக்லஸ்கள் உங்களை ஒல்லியாக காட்ட உதவும்.
உங்கள் லிட்டில் ப்ளாக் டிரெஸ்ஸை அழகாகவும் நேர்த்தியாகவும் காண்பிக்க சில ப்ரூச் அல்லது சேலைபின்களை அதில் சேர்த்து அணியலாம். இது உங்கள் ஆடையின் அழகை மேலும் அதிகரிக்க செய்து எல்லோரும் கவரும்வண்ணமாக இருக்கும். பெண்கள் அனைவருமே அழகாக காட்சியளிக்கவே விரும்புவார்கள். ஆனால், அது எளிதான காரியம் அல்ல. சில எளிமையான கவனமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அழகு தேவதையாக காட்சியளிக்கலாம்.



Click it and Unblock the Notifications











