Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
லோரியல் காஜல் வெளியீட்டு விழாவில் அட்டகாசமாக வந்த ஐஸ்வர்யா ராய்!
திருமணமாகி அம்மா ஆன பின்னரும் இன்னும் அழகாய் காணப்படும் பாலிவுட் நடிகைகளில் ஷில்பா ஷெட்டி முதன்மையாக இருந்தாலும், ஐஸ்வர்யா ராய் பச்சனைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். ஏனெனில் மும்பையில் நடைபெற்ற லோரியல் பாரிஸ் நடத்திய ஐ லைனர் காஜல் வெளியீட்டின் போது ஐஸ்வர்யா மிகவும் அழகாக வந்திருந்தார்.
பால் போன்ற நிறம் கொண்ட அவருக்கு, கருப்பு நிற உடை மிகவும் பொருத்தமாக இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு, அவர் இந்த விழாவிற்கு மிகவும் க்யூட்டான கருப்பு நிற மேக்ஸி கவுன் உடையில் அசத்தலாக வந்திருந்தார். இவ்விழாவில் அவரைப் பார்க்கும் போது, அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது என்று சொன்னால் நம்ப முடியாத அளவில் அழகாக காணப்பட்டார்.
பிரசவம் முடிந்து, முதன் முறையாக அவர் விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, அவரைப் பார்த்து நீங்கள் தான் ஐஸ்வர்யா ராயா என்று கேட்கும் அளவில், உருவம் மாறி குண்டாக காணப்பட்டார். ஆனால் இந்த மும்பை விழாவில் மீண்டும் பழைய ஐஸ்வர்யாவைப் பார்க்கலாம்.
சரி, இப்போது அந்த லோரியல் பாரிஸ் நடத்திய விழாவில் பங்கு கொள்ளும் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் எப்படி வந்திருந்தார் என்று பார்ப்போம்.

க்யூட் ஐஸ்
இது தான் லோரியல் பாரிஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது நீளமான கருப்பு நிற லேஸ் கொண்ட மேக்ஸி கவுன் அணிந்து வந்த போது எடுத்த படம்.

கருப்பு நிற கோட்
ஐஸ்வர்யா ராய் பச்சன் கருப்பு நிற லேஸ் மேக்ஸி கவுன் உடைக்கு, இடுப்பளவுள்ள கருப்பு நிற கோட் அணிந்து அசத்தலாக வந்திருந்தார்.

அழகிய கண்கள்
பாலிவுட் நடிகைகளிலேயே கவர்ச்சியான மற்றும் அழகான கண்களைக் கொண்டவர்களில் முதன்மையானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். அதிலும் இந்த விழாவிற்கு அவர் மேற்கொண்ட ஸ்மோக்கி ஐ மேக் அப், அவரது நீல நிற கண்களின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

பிங்க் உதடுகள்
ஐஸ்வர்யா ராய், தனது உடைக்கு பொருத்தமாக பிங்க் நிற மின்னும் லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

ஆபரணங்கள்
ஐஸ்வர்யா, இந்த லேஸ் மேக்ஸி கவுன் உடைக்கு அதிக அளவில் ஆபரணங்கள் அணியாமல், வைர கம்மல், தங்க மோதிரம் மற்றும் அழகான கோல்டன் பிரேஸ்லெட் மட்டும் அணிந்து வந்திருந்தார்.

சிம்பிளான ஹேர் ஸ்டைல்
இந்த முறை ஐஸ்வர்யா ராய் சிம்பிளான ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார்.

பெல்ட்
கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா படு அட்டகாசமாக மற்றும் மிகவும் ஸ்டைலாக உள்ளார் தானே! அதிலும் இந்த உடைக்கு இவர் போட்டிருந்த கருப்பு நிற பெல்ட் அவரது கச்சிதமான உடலை நன்கு வெளிப்படுத்துகிறது.

நேச்சுரல் லுக்
ஐஸ்வர்யா இந்த விழாவிற்கு அளவுக்கு அதிகமாக மேக் அப் போடாமல் நேச்சுரல் லுக்கில் வந்திருந்தார்.

முன்பும், இப்போதும்
பிரசவத்திற்கு பின் ஐஸ்வர்யா கலந்து கொண்ட விழாக்களிலேயே, லோரியல் பாரிஸ் நடத்திய விழாவில் தான் ஐஸ்வர்யா மிகவும் சிக்கென்ற உடலுடன் அழகாக இருக்கிறார். அதை இங்கு கொடுக்கப்பட்ட படத்தில் நன்கு காணலாம்.



Click it and Unblock the Notifications