Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கொரிய பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க சாப்பிடும் அந்த ரகசிய உணவுகள் என்னென்ன தெரியுமா?
Skin Care Tips: கொரியாவை சேர்த்த பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் மினுமினுப்பான சரும பொலிவை கொண்டிருப்பர்கள். இதை பார்க்கும் போது நமக்கு எப்படி இவர்கள் வயதானாலும் தோற்றத்தில் மாற்றம் இல்லாமல் பளபளப்பாக இருக்கிறார்கள் என தோன்றும்.
அதற்கான காரணம் அவர்களின் 10-நிலை தோல் பராமரிப்பு என சிலருக்கு தோன்றலாம். ஆனால் வேறு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அந்த ரகசிய காரணம் அவர்களின் உணவு வகைகள் தான். ஆம், அவர்கள் சரும பொலிவில் அவர்கள் சாப்பிடும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக அவை விலை உயர்ந்தவையாக இருக்குமோ அல்லது தீவிரமான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுமோ என நினைக்கிறீர்களா? இது அவர்களின் சுகாதாரமான பழங்கால உணவு பழக்கங்கள்தான்.

உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து அதன் மூலம் சரும பளபளப்பை அதிகரித்து அற்புதமான பராமரிப்பை பின்பற்றுகிறார்கள். இது எப்போதும் இளமையான தோற்றத்துடனும் பொலிவுடனும் இருக்க அவர்களுக்கு உதவுகிறது. அதற்காக அவர்கள் உணவில் சேர்க்கும் 5 பாரம்பரிய உணவு வகைகளை இங்கு பார்க்கலாம்.
கடற்பாசி (மியோக்)
கடற்பாசி பார்க்க கவர்ச்சியான ஒன்றாக இருக்காது. ஆனால் இந்த எளிமையான கடல் காய்கறி சருமத்தை மிளிர செய்யும் பல பொருட்களால் நிரம்பியுள்ளது. மேலும் இதில் அயோடின், கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற ஏராளமான தாதுக்கள் நிறைந்திருக்கிறது. இது தைராய்டு பிரச்சனை, தோல், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொரிய பெண்கள் இதை எப்போதும் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக மியோக்-குக் எனப்படும் ஒரு சுவையான சூப் கடற்பாசி வைத்து செய்யப்படுகிறது. இதை பாரம்பரியமாக பிறந்தநாள்களிலும், பெண்கள் பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிடுகிறார்கள். இது விரைவில் குணமடைந்து வலிமையை மீட்டெடுக்க உதவுகிறது.
கிம்ச்சி
கிம்ச்சி என்பது கொரியாவின் தேசிய உணவு வகைகளில் ஒன்று. இது புளித்த முட்டைக்கோஸ் அல்லது முள்ளங்கியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இது புரோபயாடிக்குகளால் நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்துடன் நெருக்கமாக தொடர்பை கொண்டிருக்கிறது. இந்த உணவை சாப்பிடுவதால் முகப்பரு, மந்தமான தன்மை மற்றும் வீக்கத்தை குறைத்து தடுக்கிறது.
இந்த கிம்ச்சியை அரிசி, நூடுல்ஸ், முட்டை, மற்றும் டோஸ்ட் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். கொரிய பெண்கள் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். இது அவர்களின் சரும பொலிவிற்கான ரகசிய ஆயுதமாக இருக்கிறது.
கிரீன் டீ
கிரீன் டீ நாமும் தினசரி பயன்படுத்த கூடிய ஒன்று. இது உடலுக்கு தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியிருப்பதால் வீக்கம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் தான் கொரிய பெண்கள் நாள் முழுவதும், அதிலும் குறிப்பாக உணவுக்குப் பின் இதை குடிக்கிறார்கள்.
நீங்கள் இன்னும் கிரீன் டீயை முயற்சிக்கவில்லை என்றால், மதிய காபிக்கு பதிலாக ஒரு கப் கிரீன் டீயை முயற்சிக்கவும். இது இனிமையாகவும் சிறிது எலுமிச்சை சேர்த்தால் சுவையாகவும் இருக்கும். மேலும் இது சருமத்தை பட்டு போல் மிளிர செய்யும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஒரு சுவையான பளபளப்பான ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்று. கொரியாவில் அனைத்து பகுதிகளிலும் சர்க்கரைவள்ளி கிழங்கு கிடைக்கிறது. குறிப்பாக இவை குளிர்காலங்களில் அதிகம் கிடைக்கிறது. கொரிய சர்க்கரைவள்ளி கிழங்கு மிகவும் எளிமையானது. இதை வறுத்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.
இவற்றில் பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கிறது. இது உடல் வைட்டமின் ஏ சத்துக்களை அதிகரித்து சரும பளபளப்பை கொடுக்கிறது. இது கிளைசெமிக் குறியீட்டிலும் குறைவாக உள்ளதால் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இது எளிதாக நிறைவான உணர்வை தருவதோடு மிளிரும் சருமத்திற்கும் உதவுகிறது.
டோஃபு
புரதம் பளபளப்பை அதிகரிக்க கூடிய ஒன்று. அது டோஃபுவில் நிறைந்திருக்கிறது. டோஃபு லேசான தாவர அடிப்படையிலான புரதத்தால் நிரம்பி இருக்கிறது. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் கொலாஜனை அதிகரிக்கவும் உதவும் கலவையான ஐசோஃப்ளேவோன்களை கொண்டிருக்கிறது. இது சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்க வைக்க உதவுகிறது.
இது கொரிய சூப் வகைகள், குழம்புகள், சாலடுகள் அல்லது லேசாக வறுத்து சோயா சாஸில் நனைத்து டோஃபுவை சாப்பிடலாம். இது எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதோடு சரும வசீகரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
