ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க..

Tomato Face Packs In Tamil: உங்கள் முகம் எப்போதும் பொலிவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டுமா? அதற்காக நீங்கள் கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டு சமையலறையிலேயே முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும் ஏராளமான பொருட்கள் உள்ளன. முக்கியமாக தினசரி சமையலில் பயன்படுத்தும் தக்காளியைக் கொண்டே சரும பொலிவை எளிதில் மேம்படுத்தலாம்.

Top 5 Tomato Face Packs For Instant Glow

ஏனெனில் தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை சருமத்தில் மாயங்களைப் புரியும். அதும் இந்த தக்காளியுடன் குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் போட்டு வரும் போது, முகம் உடனடியாக பொலிவை பெறுவதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இருப்பினும், தக்காளியின் அமிலத்தன்மை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனம் அவசியம். இப்போது உடனடி சரும பொலிவைப் பெற தக்காளியைக் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் போடலாம் என்பதைக் காண்போம்.

1. தக்காளி மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

2. தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தக்காளி கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

3. தக்காளி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தக்காளி கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. தக்காளி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு தக்காளி கூழ் உடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தக்காளி கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, October 14, 2026, 21:45 [IST]
Desktop Bottom Promotion