Latest Updates
-
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Honey Face Packs In Tamil: உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்படுகிறதா? வெயிலில் சுற்றி உங்கள் முகம் கருமையாக இருக்கிறதா? இப்படி கருப்பாக இருக்கும் உங்கள் முகத்தை பொலிவாகவும், வெள்ளையாகவும் மாற்ற வேண்டுமா? அதுவும் இயற்கை வழியில் உங்கள் முகத்தை வெள்ளையாக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு தேன் பெரிதும் உதவி புரியும்.

ஏனெனில் தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்தை மென்மையாகவும், நீர்ச்சத்துடன் இருப்பதற்கும் உதவக்கூடும். அதுவும் இந்த தேனுடன் குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் போடும் போது இன்னும் சிறப்பான பலனைப் பெறக்கூடும். கீழே பொலிவான சருமத்தைப் பெற உதவும் சில தேன் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
1. தேன் + மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேன் + தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு தேனை வெதுவெதுப்பாக சூடேற்றி, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சருமம் பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.
3. தேன் + ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. தேன் + பட்டை + எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பட்டைத்தூள், 2 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. தேன் + பாதாம் பவுடர் + எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications