Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க தலைமுடி பலவீனமா இருக்கா? அப்ப தயிரை வெச்சு இப்படி ஹேர் பேக் போடுங்க..
Hair Care Tips In Tamil: தற்போது தலைமுடி குறித்த கவலை நிறைய பேருக்கு உள்ளது. அதுவும் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. முக்கியமாக நிறைய பேருக்கு தங்களின் அழகைப் பராமரிக்க போதுமான நேரம் இருப்பதில்லை.
குறிப்பாக தலைமுடியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதன் விளைவாக தலைமுடி பலவீனமாகி முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. இது தவிர சிலரது தலைமுடி மென்மையிழந்து தேங்காய் நார் போன்றும் இருக்கிறது. இப்படியான அனைத்து தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்கள் அருமையான தீர்வை வழங்கும் ஆற்றல் நிறைந்தவை. அதில் ஒன்று தான் தயிர்.

தயிரில் உள்ள சத்துக்கள் தலைமுடியை மென்மையாக்குவதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதற்கு தயிரைக் கொண்டு வாரம் ஒருமுறை ஹேர் மாஸ்க் போட்டு வந்தால் போதும். நீங்கள் உங்களின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தயிர் ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தி வாருங்கள்.
1. தயிர் மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியின் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரம் 2 முறை பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. தயிர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிர் மற்றும் தேனை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
3. தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் நன்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
4. தயிர் மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் ஷவர் கேப்பை அணிந்து, 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 2 முறை பயன்படுத்தலாம்.
5. தயிர் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் நற்பதமான கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலையில் தடவி, ஷவர் கேப் அணிந்து, 25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
* இன்னும் சிறப்பான பலனைப் பெற, ஷவர் கேப்பிற்கு பதிலாக, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் சுற்றி, ஊற வையுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
