Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
CTM என்றால் என்ன? அது உங்கள் சருமத்தை எப்படி ஜொலிக்க வைக்க வைக்கும் தெரியுமா?அவசியம் தெரிஞ்சிக்கோங்க...!
எப்பொழுதும் நம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க நாம் பல முயற்சிகளை எடுப்பதுண்டு. தினமும் பேஸ் வாஷ், க்ரீம்கள் மற்றும் லோஷன்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தினாலும் தினசரி இந்த 3 பராமரிப்பு மிகவும் அவசியம் என்கிறார்கள் சரும நிபுணர்கள். இந்த மூன்று பராமரிப்பு முறையை பொதுவாக CTM என்று அழைக்கின்றனர்.
அதாவது சுத்தப்படுத்துதல் (Cleaning), டோனிங் செய்தல் (Toning), ஈரப்பதமூட்டுதல் ( Moisturizing) என்று அழைக்கப்படுகிறது. இந்த 3 முறையையும் நீங்கள் சரியாக செய்து வந்தால் உங்கள் சருமம் மேம்படும். நீங்கள் சிறந்த பயனை பெறுவீர்கள். இந்த CTM முறை பற்றி விரிவாக காண்போம்.

CTM சரும பராமரிப்பு வழிமுறைகள்
சருமத்தை சுத்தப்படுத்துதல்
சருமத்தை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம். நம் சுற்றுச்சூழல் மாசுக்கள், எண்ணெய் பிசுக்குகள் மற்றும் அழுக்குகள் போன்றவை நம் சருமத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க நீங்கள் முகத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சருமத்தை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்தாதீர்கள்.
ஏனெனில் சோப்பு உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்யலாம். அதே மாதிரி முகம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள எண்ணெய் பிசுக்குகளை நீக்குங்கள். இது சரும துளைகள் அடைபடுவதை நீக்குகிறது. தினசரி இரட்டை சுத்திகரிப்பு அவசியம்.
உதவிக்குறிப்பு
எதாவது தாவர எண்ணெய் அல்லது பேபி ஆயில் போன்றவற்றை சருமத்திற்கு பயன்படுத்துங்கள். இது சருமத்திற்கு சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது. உங்களுக்கு பிடித்த எண்ணெயை எடுத்துக் கொண்டு முகம் மற்றும் கண்களைச் சுற்றி 3-5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்து முகத்தில் உள்ள எண்ணெய் முழுவதையும் துடைத்து எடுங்கள். பிறகு முகத்தை சுத்தம் செய்ய ஃபேஸ் வாஷ் அல்லது க்ளீன்சரை பயன்படுத்துங்கள்.
சருமத்தை டோனிங் செய்தல்
சருமத்தை டோனிங் செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். தற்போது சந்தையில் நிறைய டோனர்கள் கிடைக்கிறது. டோனர்கள் உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஊட்டமளிக்கிறது. டோனர்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தை வழங்குகிறது. முடிந்த வரை ஹைட்ரேட்டிங் டோனர்களை பார்த்து வாங்க வேண்டும். இந்த டோனர்களை நேரடியாக முகத்தில் தெளித்து பயன்படுத்தலாம்.
உதவிக் குறிப்பு
அதே மாதிரி நீங்கள் இயற்கையான டோனர்களை பயன்படுத்த விரும்பினால் க்ரீன் டீ அல்லது ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இவை உங்கள் சருமத்தை மிருதுவாக்கி, இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இதன் மூலம் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்கிறது.
சருமத்திற்கு போதுமான ஈரப்பதம்
சருமம் வறண்டு போவதற்கு முக்கிய காரணம் சருமத்தில் போதுமான ஈரப்பதம் இல்லை என்பது தான். எனவே உங்கள் சருமத்தை போதுமான ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம். உங்கள் சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுங்கள். உங்கள் சருமம் எண்ணெய் சருமமாகவோ அல்லது வறண்டு போய் இருந்தால் கனமான மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். அதே மாதிரி லேசான எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தி வரலாம்.
உதவிக் குறிப்பு
உங்கள் சரும வகை எதுவாக இருந்தாலும் மாய்ஸ்சரைசரை தவிர்க்க கூடாது. உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஏராளமான மாய்ஸ்சரைசர்கள் தற்போது சந்தையில் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்துங்கள்.
தினமும் CTM யை எப்படி பின்பற்ற வேண்டும்
தினமும் முகத்தை சுத்தப்படுத்த இயற்கையான பொருட்களால் அடங்கிய பேஸ் வாஷ்யை பயன்படுத்தலாம். வைட்டமின் சி ஃபேஸ் வாஷ், க்ரீன் டீ, clay போன்ற பேஸ் வாஷ்களை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம்.
பிறகு டோனரில் 2-5 சொட்டுகள் எடுத்து பயன்படுத்த வேண்டும். டோனரை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். இரவில் நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பும், பிறகு முகத்தை சுத்தம் செய்த பிறகும் செய்ய வேண்டும். டோனரை சிறுதளவு ஒரு பஞ்சில் நனைத்து முகத்தை அப்ளை செய்ய வேண்டும். க்ரீன் டீ, விட்டமின் சி ஃபேஸ் டோனர்களை பயன்படுத்தலாம்.
நீங்கள் தினசரி குளிக்கும் போது உங்கள் சருமத்தின் ஈரப்பதம் போய் விடும். எனவே குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள். அதே மாதிரி கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தாதீர்கள். மேக்கப் போடுவதற்கு முன்பும், படுக்கைக்கு செல்வதற்கு முன்பும் மாய்ஸ்சரைசர் அவசியம். வைட்டமின் சி மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications

