Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Summer Skin Care Tips: கோடையில் முகப்பரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்கணுமா? இதோ சில டிப்ஸ்...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் வந்தாலே நிறைய பேர் சந்திக்கும் ஒருவித சரும பிரச்சனை தான் முகப்பரு/பிம்பிள். பருவ காலங்களிலேயே கோடையில் தான் ஒருவர் முகப்பரு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு காரணம் அதிகப்படியான வெப்பம், அதிகளவு வியர்வையால் எப்போதும் சருமம் எண்ணெய் பசையுடன் பிசுபிசுப்பாக இருப்பது, தூசி போன்றவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன.
கோடைக்காலத்தில் சந்திக்கும் முகப்பரு பிரச்சனையைத் தவிர்க்க வேண்டுமானால், ஒருசில பழக்கங்களை தவறாது மேற்கொள்ள வேண்டும். இப்போது கோடையில் வரும் முகப்பரு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து இப்போது காண்போம்.

* கோடைக்காலத்தில் சருமம் பிசுபிசுப்பாக இருப்பதால், இந்த பிசுபிசுப்பை போக்க ஒரு நாளைக்கு 1-2 முறை மைல்டு கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்யும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும்.
* முகத்தில் பருக்கள் வந்தால், அதை கிள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி கிள்ளினால், அந்த முகப்பரு காயமாக மாறி, முகத்தில் அசிங்கமான மற்றும் கருமையான தழும்புகளை விட்டுச் செல்வதோடு, முகத்தில் பரவத் தொடங்கும்.
* கோடையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து பருக்களை அதிகம் வரத்தூண்டும்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளிலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, பருக்களை வரத் தூண்டும்.
* நார்ச்சத்து உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே நார்ச்சத்து அதிகம் உள்ள செரில்கள், நார்ச்சத்துள்ள ப்ளூபெர்ரி, கிரேப்ஃபுரூட் போன்ற பழங்களை உண்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் சுத்தமாக இருக்கும்.
* கோடையில் பருக்கள் அதிகம் வரக்கூடாதெனில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்த உணவுகளான கேரட், பப்பாளி, பசலைக்கீரை மற்றும் தக்காளி ஜூஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
* முகத்தில் பருக்கள் இருந்தால், ஃபவுண்டேஷன் பயன்படுத்துவதை ஒரு வாரத்திற்கு நிறுத்துங்கள். இது முகப்பருக்களை போக்குவதோடு, பருக்களில் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கும்.
* முகப்பரு அதிகம் வருபவர்கள் முகத்தில் மேக்கப் அதிகம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது சருமத்தில் பருக்கள் இன்னும் அதிகமாக வரத் தூண்டும்.



Click it and Unblock the Notifications

