Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வெயிலால் கருத்துப் போன முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்...
Summer Skin Care Tips In Tamil: என்ன தான் கத்திரி வெயில் முடிந்துவிட்டாலும், அந்த வெயிலில் சுற்றி கருத்துப் போன முகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர பல நாட்கள் ஆகும். உங்கள் முகம் கூட வெயிலால் கருத்து போய்விட்டதா?
இப்படி கருமையான முகத்தை வெள்ளையாக்க கண்ட க்ரீம்கள் மற்றும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளைப் போடாதீர்கள். மாறாக நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக்குகளைத் தயாரித்து போடுங்கள்.

கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளால் உடனடி பலன் கிடைக்கலாம். ஆனால் அனைவருக்குமே இந்த வகையான பொருட்கள் சிறப்பான பலனைத் தரும் என்று கூறிவிட முடியாது. சிலருக்கு கெமிக்கல் கலந்த பொருட்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
இத்தகையவர்களுக்கு இயற்கை பொருட்கள் தான் நல்லது. உங்களது சருமமும் இந்த மாதிரி என்றால், வெயிலால் கருமையான உங்கள் முகத்தை வெள்ளையாக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளைப் போடுங்கள்.
குங்குமப்பூ மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில், 2-3 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்கு கலந்து, முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி பேக்
வெள்ளரிக்காய் பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வெள்ளரிக்காயுடன் ப்ளீச்சிங் பண்புகள் நிறைந்த தக்காளியை சேர்தது பயன்படுத்தினால், சரும கருமை விரைவில் அகலும்.
அதற்கு ஒரு பௌலில் ஒரு துண்டு வெள்ளரிக்காய் மற்றும் 2 துண்டு தக்காளியை மசித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1/2 ஸ்பூன் மில்க் க்ரீம், 1 சிட்டிகை மஞ்சள் தூள், 3-4 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் 2 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
குங்குமப்பூ மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
பழங்காலம் முதலாக குங்குமப்பூ சரும நிறத்தை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. தயிரில் ஜிங்க் மற்றும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. எனவே இவ்விரண்டையும் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது சரும கருமை நீங்கும். அதற்கு இரவு தூங்கும் முன் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அதில் சிறிது குங்குமப்பூவை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அதை கலந்து, அத்துடன் 1 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் முகம் பளிச்சென்று மின்னும்.
முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு முட்டைக்கோஸை எடுத்து அரைத்து, ஒரு பௌலில் அதன் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையை நீக்கி, முகத்தை பிரகாசமாக்கும்.
மைசூர் பருப்பு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
மைசூர் பருப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, கருமையையும் போக்கும். அந்த மைசூர் பருப்பை அரைத்து பொடி செய்து அல்லது ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் கற்றாழை ஜெல், தக்காளி விழுதை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நிச்சயம் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் தரும்.



Click it and Unblock the Notifications