Latest Updates
-
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க..
வெயில் காலத்தில் முடி அதிகமா கொட்டாம இருக்கணுமா? இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க
Summer Hair Care Tips: ஒருவரின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துவதில் அவர்களுடைய கூந்தல் முக்கியப்பங்கு வைக்கிறது. கூந்தல் அழகாக இல்லாவிட்டால் எவ்வளவு அலங்காரம் செய்தாலும் அது வீண்தான். முடி உதிர்தல் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரையுமே பாதிக்கும் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். மரபணு காரணங்களைத் தவிர, தைராய்டு சுரப்பிகளின் குறைவான செயல்பாடு, மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, முதுமை அல்லது மருந்துகள், காற்று மாசுபாடு அல்லது போதிய இரத்த ஓட்டம் இன்மை என முடி உதிர்தலுக்குப் பல காரணங்கள் உள்ளன.

சில சமயங்களில் பருவக்காலமும் முடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். கோடைக்காலத்தில் முடி தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும். கோடை காலத்தில் ஏற்படும் வெப்பம் மற்றும் சூரிய ஒளியின் நேரடி தாக்கம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள், முடி உதிர்தலைத் தூண்டுகின்றன. நேரடி சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பது உங்கள் முடியை எளிதில் உடையக்கூடியதாக மாற்றி, இறுதியில் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். மேலும், கோடை மாதங்களில் சூரிய ஒளியின் தாக்கம் காரணமாக, உங்கள் முடியில் அதிகப்படியான உப்புத்தன்மை உருவாகி, அது உரோமக்கால்கள் உடைவதற்கு காரணமாக அமைகிறது.
முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தவும், அது மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும், உங்கள் சமையலறையிலேயே எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. கோடைகாலத்தில் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கற்றாழை
கற்றாழை, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டும் சிறந்த பொருளாகும். இது அரிப்பு மற்றும் செதில் உதிர்தல் போன்ற உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். லேசான காரத்தன்மை கொண்ட கற்றாழை, உச்சந்தலையின் இயற்கையான pH அளவை மீட்டெடுக்கிறது, மேலும் பொடுகு சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படலாம். இது உச்சந்தலை மற்றும் உரோமக்கால்களின் ஆழம் வரை ஊடுருவி, உங்கள் வறண்ட மற்றும் சேதமடைந்த கூந்தலுக்குப் புத்துணர்ச்சி அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டும். வெயில் காலத்தில் உங்கள் உச்சந்தலையில் அடிக்கடி கற்றாழை தடவுவதை வாக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வெந்தயம்
வெந்தயம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். இது உரோமக்கால்களைப் புத்துயிர் பெறச் செய்து, முடி மீண்டும் வளர்வதற்கு உதவுகிறது. இதில் புரதமும் நிக்கோடினிக் அமிலமும் நிறைந்துள்ளதால், முடியின் தண்டை வலுப்படுத்தி, முடியை வலிமையானதாகவும், பளபளப்பாகவும், நீளமாகவும் மாற்றுகின்றன. இரவே ஊறவைத்த வெந்தய விதைகளை எடுத்து, சிறிதளவு நீருடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதை உங்கள் உச்சந்தலையில் சீராகப் பூசவும். 30 முதல் 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரால் கழுவிவிடவும்.
தேங்காய் எண்ணெய்
புரதங்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த தேங்காய் எண்ணெய், முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது, முடி உடைவதைக் குறைக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் பொட்டாசியமும் உள்ளது, இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது தலைமுடிக்கு ஈரப்பதம் அளித்து, அதை வலுப்படுத்தி, பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகள் நிறைந்துள்ளன, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகின்றன.
பீட்ரூட் சாறு
பீட்ரூட்டில் வைட்டமின் C, ஃபோலேட், மாங்கனீசு, பீடைன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பீட்ரூட் சாறை முடியில் பயன்படுத்துவது, முடி உதிர்வுக்குக் கையாளக்கூடிய எளிய வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வைட்டமின் C குறைபாடாகும். எனவே, பீட்ரூட்டை உட்கொள்வது உரோமக்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவும்.
வெங்காய சாறு
வெங்காயம் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களைச் செய்யும். வெங்காயத்தின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன, மேலும் அதிலுள்ள கந்தகம் உரோமக்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையில் கந்தகம், பாஸ்பரஸ், செலினியம், அயோடின், துத்தநாகம் மற்றும் புரதம் ஆகியவை நிறைந்துள்ளன. இது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கலவையாகும். முட்டையின் மஞ்சள் கருவுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து ஒரு முட்டை மாஸ்க்கைத் தயாரிக்கவும். அதை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் பூசி, 20-25 நிமிடங்கள் கழித்து ஒரு மென்மையான ஷாம்பூவைக் கொண்டு அலசினால் முடியின் ஆரோக்கியம் மேம்படும்.



Click it and Unblock the Notifications

