Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
முகப்பரு வருவதற்க்கு முன்பே எப்படி தடுப்பது? இத பண்ணுங்க.
உங்களுக்கு முகப்பரு வர போவதற்கு முன்னால் ஏதேனும் அறிகுறி தெரிந்தால் அல்லது நீங்கள் முன்கூட்டியே அவற்றை வராமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்காக சில குறிப்புகள் உள்ளன.
பருக்கள் என்பது எல்லாருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். பருக்கள் திடீரென்று நமது சருமத்தில் உருவாகும் ஒன்று. அதிலும் ஏதேனும் விசேஷ நாட்கள் அல்லது முக்கியமாக வெளியே செல்ல வேண்டும் என்று பிளான் வைத்து இருக்கும் போது முகத்தில் பருக்கள் ஏற்பட்டு நம்மை எரிச்சல் அடையச் செய்யும்.

முகப்பரு ஏற்படுவதினால் முகத்தின் அழகையே கெடுத்து விடும். என்ன தான் மேக்கப் போட்டுக் கொண்டாலும் பருக்களை மறைக்க முடியாது. உங்களுக்கு முகப்பரு வர போவதற்கு முன்னாள் ஏதேனும் அறிகுறி தெரிந்தால் அல்லது நீங்கள் முன்கூட்டியே அவற்றை வராமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்காக சில குறிப்புகள் உள்ளன. அவற்றை பின்பற்றி முகப்பரு வராமல் தடுத்திடுங்கள்.

ஐஸ் கட்டி
ஐஸ் கட்டியை நாம் பொதுவாக வீக்கத்தினை குறைபதிற்கும் மற்றும் உடலில் தோன்றும் சிவப்பு நிற மாற்றத்தினை சரி செய்வதற்கும் பயன்படுவோம். அதே போல முகத்தில் ஏற்படும் முகப்பருக்களையும் சரி செய்வதற்கு ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம். ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் அப்ளை செய்தல் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதனை ஒரு காட்டன் துணியில் போட்டு முகத்தில் பருக்கள் ஏற்பட இருக்கும் இடத்தில் 5 நிமிடங்கள் வைத்து எடுங்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம்.

தண்ணீர்
உங்களுக்கு மிகவும் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால் அதிக அளவு தண்ணீர் குடிப்பதினால் பருக்கள் உருவாகாமல் தடுக்க முடியும். அதாவது தண்ணீருக்கு உங்கள் உடலில் இருக்கும் உப்பினை வெளியேற்றும் தன்மை உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது நீங்கள் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பின்பு பருக்கள் விரைவில் மறைந்து விட்டதை நீங்கள் உணருவீர்கள். மேலும் உங்கள் சருமத்தில் ஏதேனும் சிவப்பு நிற மாற்றங்கள் இருந்தால் அவற்றை மறைத்து சருமத்தினை மிருதுவாகவும், நீரேற்றத்துடனும் வைக்கும்.

ஆல்கஹால்
பருக்கள் உங்கள் முகத்தில் இருக்கும் நாட்களை நீங்கள் குறைக்க விரும்பினால் ஆல்கஹாலை பருக்களின் மீது அப்ளை செய்யலாம். சிறிதளவு ஆல்கஹால் எடுத்து பருக்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் மற்றும் தடவி உலர விடுங்கள். ஆனால் முகத்தில் வேறு இடங்களில் ஆல்கஹால் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே பருக்கள் உள்ள இடங்களில் மட்டும் ஆல்கஹாலினை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தடவுங்கள்.
MOST READ: நாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.

களிமண் மாஸ்க்
காலையில் எழுந்து நீங்கள் கண்ணாடியை பார்க்கும் போது முகத்தில் பருக்கள் இருந்தால் சற்று எரிச்சலாக தான் இருக்கும். எனவே முகப்பரு வராமல் தடுப்பதற்கு நீங்கள் இரவில் தூங்கும் போது களிமண் மாஸ்க்Fடன் படுகைக்குச் செல்லலாம். அதற்காக உங்களின் முழு முகத்தையும் களிமண் மாஸ்க் கொண்டு மறைக்க கூடாது. எந்த இடத்தில பருக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அங்கு மட்டும் தடவுங்கள். இதில் பிடித்த ஒரு முறையை உங்கள் சருமத்திற்கு தேர்வு செய்து பருக்கள் வராமல் தடுத்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
