For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

10 நிமிடத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப இத செய்யுங்க...

ஒவ்வொரு சரும பிரச்சனைகளுக்கும் ஒவ்வொரு மாதிரியான க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் வெள்ளையாவதற்கு நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கும், எலுமிச்சையுமே போதுமானது.

|

சருமத்தின் அழகை மெருகேற்றுவதற்கு மார்கெட்டுகளில் ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துமே அனைவருக்கும் நல்ல பலனைத் தரும் என்று கூற முடியாது. இதற்கு அவற்றில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம். சில கெமிக்கல்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். எனவே இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு சரும அழகை மேம்படுத்துவதற்கு பதிலாக வீட்டு சமையலறையில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு அழகை மேம்படுத்தலாம்.

MOST READ: மார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்!

குறிப்பாக இன்று பலர் தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க விரும்புகின்றனர். இதற்காக சரும நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களைப் பயன்படுத்துகின்றனர். அதேப் போல் ஒவ்வொரு சரும பிரச்சனைகளுக்கும் ஒவ்வொரு மாதிரியான க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் வெள்ளையாவதற்கு நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கும், எலுமிச்சையுமே போதுமானது. இக்கட்டுரையில் பல சரும பிரச்சனைகளைப் போக்கவும், சருமத்தை வெள்ளையாக்கவும் உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருமையைப் போக்க...

கருமையைப் போக்க...

உருளைக்கிழங்கு சாற்றிற்கு சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, சருமத்தை வெள்ளையாக்கும் ப்ளீச்சிங் பண்புகள் இயற்கையாகவே நிறைந்துள்ளது. எனவே உங்கள் முகத்தில் கருமை அதிகமாக இருந்தாலோ அல்லது கரும்புள்ளிகள் இருந்தாலோ, உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சரும கருமை நீங்கி, வெள்ளையாவீர்கள்.

கருவளையங்கள் நீங்க...

கருவளையங்கள் நீங்க...

கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்து, உங்கள் முக அழகையே கெடுக்கிறதா? அப்படியானால் உருளைக்கிழங்கைப் பயன்படுத்துங்கள். அதற்கு உருளைக்கிழங்கை சாறு எடுப்பதற்கு பதிலாக, வட்ட துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு 20 நிமிடங்கள் உருளைக்கிழங்கு துண்டை கண்களின் மீது வைத்து, குளிர்ந்த நீரால் கழுவி வர, கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் காணாமல் போகும்.

சோர்ந்த கண்களை புத்துணர்ச்சியாக்க...

சோர்ந்த கண்களை புத்துணர்ச்சியாக்க...

உருளைக்கிழங்கு சோர்வடைந்த கண்களைப் புத்துணர்ச்சியாக்கும் என்பது தெரியுமா? அதற்கு உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களின் மீது வைக்க வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாற்றினை ஒன்றாக பயன்படுத்தலாம். அதற்கு உருளைக்கிழங்கு சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் கண்களை மூடியிருக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, கண்களைச் சுற்றியுள்ள வீக்கமும் குறையும்.

சருமத் துளைகளை சுத்தம் செய்ய...

சருமத் துளைகளை சுத்தம் செய்ய...

சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் சேர்ந்தால் தான், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே சரும பிரச்சனைகளை தடுக்க வேண்டுமானால், சருமத் துளைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உருளைக்கிழங்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே 5 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, பின் சிறிது நேரம் கழித்து ஒரு கப் நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையைக் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமத் துளைகளின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறிவிடும்.

உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்

உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்

உருளைக்கிழங்கைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் கூட போடலாம். அதற்கு ஒரு மெல்லிய துணியை உருளைக்கிழங்கு சாற்றினை நனைத்து, பின் அந்த துணியை முகத்தில் வைத்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால், ஒரு நல்ல மாற்றத்தை முகத்தில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Potato And Lemon Combination To Enhance Skin Color

Here are the easiest ways to use potato juice for the skin. Read on...
Story first published: Friday, November 29, 2019, 16:53 [IST]
Desktop Bottom Promotion