அடிக்கடி முகப்பரு வருதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை போடுங்க...

நீங்கள் உங்கள் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள விரும்பினால் பப்பாளியை உங்களின் சரும பராமரிப்பில் சேர்த்து வாருங்கள்.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய மற்றும் விலை குறைவில் கிடைக்கும் பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனெனில் இதில் சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. முக்கியமாக பப்பாளியில் புத்துணர்ச்சியூட்டும் நொதிகள் உள்ளன. இவை சருமத்துளைகளை சுத்தப்படுத்தி, சருமத்தை பளிச்சென்று வெளிக்காட்டும்.

Papaya Face Packs To Remove Skin Problems In Tamil

எனவே நீங்கள் உங்கள் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள விரும்பினால் பப்பாளியை உங்களின் சரும பராமரிப்பில் சேர்த்து வாருங்கள். அதுவும் பப்பாளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அதன் அழகு நன்மைகளைப் பெற முடியும். இப்போது சரும பிரச்சனைகளைப் போக்க பப்பாளியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்களைக் குறைக்க...

பருக்களைக் குறைக்க...

பச்சை பப்பாளி சருமத்தில் வரும் பருக்களை தடுப்பதோடு, திறந்த சருமத் துளைகளை சுருக்குகிறது. அதற்கு பச்சை பப்பாளியை அரைத்து சாறு எடுத்து, அவற்றை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சரும சுருக்கங்களை போக்க...

சரும சுருக்கங்களை போக்க...

பப்பாளியைக் கொண்டு ஒரு சிறந்த ஆன்டி-ஏஜிங் மாஸ்க் போடலாம். ஏனெனில் பப்பாளியில் ஆல்பா ஹைட்ராக்ஸில் அமிலம் உள்ளது. இது முதுமைக்கான அறிகுறிகளான சரும சுருக்கம், முதுமை கோடுகள் போன்றவற்றைத் தடுக்கும். மேலு பப்பாளியில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி உள்ளதால், இது சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும். அதற்கு நன்கு கனிந்த 1/2 கப் பப்பாளியை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கருவளையங்களை நீக்க...

கருவளையங்களை நீக்க...

இன்று நிறைய பேர் சரியான தூக்கம் கிடைக்காமல் கருவளையங்களைக் கொண்டுள்ளனர். இந்த கருவளையங்களைப் போக்க, நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதை கண்களைச் சுற்றி தடவி குறைந்தது 12 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் மறையும்.

சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளைப் போக்க...

சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளைப் போக்க...

பப்பாளி சருமத்தில் உள்ள தழும்புகள், காயங்கள் மற்றும் பிற சரும பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்தது. பப்பாளியில் பாப்பைன் என்னும் நொதி பொருள் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்துளைகளை சுத்தம் செய்கிறது. அதுவும் பப்பாளி எக்ஸிமா மற்றும் சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அதுவும் சருமத்தில் ஏற்படும் கடுமையான அரிப்புக்களை தடுக்க நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சரும முடிகளை நீக்க...

சரும முடிகளை நீக்க...

உங்கள் முகத்தில் அசிங்கமாக முடிகள் வளர்ந்திருந்தால், அவற்றை நீக்க, பப்பாளி காய் ஃபேஸ் பேக்கை போடுங்கள். இதனால் அவற்றில் உள்ள பாப்பைன் மயிர்கால்களை பலவீனப்படுத்துவதோடு, அதன் நிறத்தை மழுங்கடிக்கும். அதற்கு பப்பாளி காயை அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion