Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
நயன்தாராவின் அழகிற்கு முக்கிய காரணமான தேங்காய் எண்ணெய்- அதை எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா?
லேடி சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா 37 வயதாகியும் இன்னும் பொலிவான மற்றும் இளமையான சருமத்தைக் கொண்டுள்ளார் என்றால் அதற்கு காரணம் தேங்காய் எண்ணெய் தானாம்.
திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் தங்கள் வேலைக்காக அழகைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதற்காக அவர்கள் தங்கள் சருமம் இளமையாகவும், அழகாகவும் இருக்க தினந்தோறும் பல்வேறு சரும பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் விலை அதிகமான அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு தங்களின் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதை விட, வீட்டு சமையலறையில் இருக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டே பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள்.

அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா 37 வயதாகியும் இன்னும் பொலிவான மற்றும் இளமையான சருமத்தைக் கொண்டுள்ளார் என்றால் அதற்கு காரணம் அவர் தனது சரும அழகைப் பராமரிக்க பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய பொருள் தான் காரணம் என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அது என்னவெனில், நாம் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் தானாம். நயன்தாரா இதை தான் பல ஆண்டுகளாக மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தி வருகிறாராம்.
எனவே நீங்களும் உங்கள் சருமம் நீண்ட காலம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க விரும்பினால் தேங்காய் எண்ணெய் கொண்டு பராமரிப்பு கொடுங்கள். கீழே பளபளப்பான சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தி உங்கள் அழகை மெருகேற்றுங்கள்.

1. இளமையான சருமத்தைப் பெற உதவும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்
* ஒரு அகவேடோ அல்லது வெண்ணெய் பழத்தின் தசைப் பகுதியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அவகேடோவை நன்கு பேஸ்ட் போல் ஸ்பூன் கொண்டு மசித்து விட வேண்டும்.
* பின்பு அதில் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக் சரும சுருக்கங்களைத் தடுத்து, சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவி புரிந்து, சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

2. முகப்பருவைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி பேஸ்ட் செய்ய வேண்டும்.
* பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து மென்மையாக முகத்தை 5 நிமிடம் விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகப்பருக்கள் வருவதைத் தடுக்கும்.

3. பொலிவான சருமத்தைப் பெற உதவும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இலைகளை போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் நன்கு தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மென்மையான துணியால் துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்திற்கு ஒருவித பொலிவையும் பிரகாசத்தையும் அளிக்கும் மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்.

4. கரும்புள்ளிகளைப் போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை மென்மையாக விரல்களால் 2 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படும். முக்கியமாக தேய்க்கும் போது கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் சற்று அதிக நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் கரும்புள்ளிகளின்றி நன்கு மென்மையாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், கரும்புள்ளி காணாமல் போகும்.

5. அதிக எண்ணெய் பசையை நீக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்
* முதலில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, சருமத்திற்கு ஒருவித பொலிவைக் கொடுக்கும்.

6. சரும கருமையைப் போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்
* முதலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதை முகத்தை தடவி 15 நிமிடம் ற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்துளைகளில் ஆழமாக ஊடுருவி ஈரப்பதமூட்டும் திறன் கொண்டது மற்றும் இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சீரான சருமத்தைப் பெற உதவுகிறது.



Click it and Unblock the Notifications