Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முகத்திற்கு சோப்பு பயன்படுத்தினால் சருமம் ரொம்ப வறண்டு போகுதா? அப்ப இந்த பொருட்களை யூஸ் பண்ணுங்க..
சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு கெமிக்கல் கலந்த சோப்பு, ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கலாம்.
நாம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பு அல்லது ஃபேஷ் வாஷைப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த சோப்பு மற்றும் ஃபேஷ் வாஷ் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? அப்படியெனில் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய்கள் போன்றவற்றை எப்படி நீக்குவது என்று நீங்கள் கேட்கலாம். சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கெமிக்கல்கள் கலந்த பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பதைத் தவிர்த்து, இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு கெமிக்கல் கலந்த சோப்பு, ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கலாம். இப்போது அந்த நேச்சுரல் கிளின்சர்களைப் பார்ப்போம். இந்த கிளின்சர்களைப் பயன்படுத்தினால் சருமம் எப்போதும் பொலிவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

பால்
சருமத்தில் உள்ள அழுக்கைப் போக்க உதவும் ஒரு பொருள் தான் பால். அதுவும் கொழுப்புள்ள பாலைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்யும் போது, சருமம் நன்கு ஈரப்பதத்துடன் இருக்கும். அதற்கு காய்ச்சாத பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

ஓட்ஸ்
ஓட்ஸ் சருமத்தில் உள்ள அழுக்கை திறம்பட நீக்க உதவும். அதற்கு ஓட்ஸ் பொடியை நீர் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.

தேன்
தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது மற்றும் இது நல்ல மாய்ஸ்சுரைசராகவும் செயல்படுகிறது. இது தவிர, தேன் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கவும் உதவுகிறது. அதற்கு தேனை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 2 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

எலுமிச்சை
எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களுக்கு எலுமிச்சை ஒரு நல்ல கிளின்சர். மேலும் எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை பாலில் அல்லது தயிரில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 2 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

சர்க்கரை
சர்க்கரையும் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்க உதவும். அதற்கு சர்க்கரையை நீரில் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக சர்க்கரையை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக அழுத்தி தேய்க்க வேண்டாம். இல்லாவிட்டால் எரிச்சலை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications