Latest Updates
-
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா? அப்போ அத மறைச்சுருங்க.
நீங்கள் தேர்ந்யெடுக்கும் கன்சீலர் நிறம் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த கன்சீலர் நிறம் மிகவும் வெள்ளையாகவோ அல்லது டார்க் நிறமாகவோ இருக்க கூடாது. ஏனெனில் இந்த நிறங்கள் உங்கள் கரும்புள்ளிகளை மறைக்க உ
உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் உள்ளதா? எத்தனையோ கிரீம்களை நீங்கள் உபயோகித்து இருப்பீர்கள், ஆனால் எதற்கும் இந்த கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறையவில்லை என்ற கவலை உங்களுக்கு இருக்கும். என்னதான் நம் சருமத்தை சுத்தமாக வைத்து இருந்தாலும் கரும்புள்ளிகள் அங்கங்கே இருக்கத்தான் செய்கிறது.

கரும்புள்ளிகளை முழுமையாக நீக்க முடிய விட்டாலும் உங்கள் மேக்கப் மூலம் அவற்றை மறைய வைக்க முடியும். உங்களுக்கு இயற்கையான அழகும், அழகான சருமமும் வேண்டுமென்றால் கன்சீலர் பயன்படுத்தி உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைத்து அழகான மற்றும் வெண்மையான சருமத்தை பெறலாம். அதாவது கன்சீலரில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் எது உங்கள் சருமத்திற்கு ஏற்றது என்பதை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

எப்படி தேர்ந்து எடுப்பது
நீங்கள் தேர்ந்தெடுக்கும் கன்சீலர் நிறம் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த கன்சீலர் நிறம் மிகவும் வெள்ளையாகவோ அல்லது டார்க் நிறமாகவோ இருக்க கூடாது. ஏனெனில் இந்த நிறங்கள் உங்கள் கரும்புள்ளிகளை மறைக்க உதவாது. நீங்கள் தேர்வு செய்யும் கன்சீலர் உங்கள் தோலின் நிறத்திற்கு ஏற்றமாதிரி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் நிறத்தை விட சற்று டார்க் கலர் தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இது உங்கள் கரும்புள்ளிகளை மறைக்க ஏற்றதாக இருக்கும்.

கரும்புள்ளிகளின் வகைகள்
உங்களது கன்சீலர் தேர்வு செய்யும் முறை உங்கள் முகங்களில் உள்ள கரும்புள்ளிகளை பொறுத்தே இருக்க வேண்டும். உங்களுக்கு பழுப்பு நிற இருண்ட வட்டங்கள் இருந்தால் நீங்கள் மஞ்சள் நிறத்தை பயன்படுத்தலாம் அல்லது இரத்த ஓட்டத்தின் காரணமாக நீல நிற வட்டங்கள் ஏற்பட்டால் ஆரஞ்சு அல்லது பிங்க் கலர் பரிந்துரைக்கப்படுகிறது.

கன்சீலர் வகைகள்
கன்சீலர் வகைகள் என்பது உங்களுக்கு தேவையான கடினத்தன்மை மற்றும் கவரேஜ் பொறுத்தே அமைகிறது. உங்களுக்கு கவரேஜ் வேண்டுமென்றால் கிரீம்களை விட பென்சில் மற்றும் குச்சி போன்ற கன்சீலர்கள் சிறந்தவை. மேலும் கிரீம்களை விட லீகுய்ட்ஸ் சிறந்தவையாக இருக்கும்.

கரும்புள்ளிகள்
குச்சி மற்றும் பென்சில் இரண்டும் கரும்புள்ளிகளை மறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் இதனை நீங்கள் நேரடியாக பயன்படுத்தலாம்.

மங்குகள்
உங்கள் முகங்களில் ஏற்பட்ட பெரிய மங்குகளை மறைக்க உங்களுக்கு கிரீம்களே ஏற்றதாக இருக்கும். மேலும் முகத்தில் உள்ள மங்கிய பகுதிகளை மறைக்க வேண்டுமானால் நீங்கள் கிரீம்களை தேர்வு செய்வது நல்லது. கன்சீலர்கள் கொண்டு மங்குகளை நீங்கள் முழுவதுமாக மறைக்க வேண்டும். முகத்தின் விளிம்புகளையும் முழுவதுமாக மறைக்க வேண்டியது அவசியம். அப்போது தான் இது இயற்கையானதாக தோன்றும்.

கருவளையங்கள்
லீகுய்ட் கன்சீலர் உங்கள் கண்களை சுற்றி உள்ள கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க உதவும். மேலும் இது உங்கள் கருவளையங்களை மறைத்து இயற்கையான அழகை உங்களுக்கு கொடுக்கிறது. அப்ளை செய்த பின்பு சற்று உலர விடுங்கள். முழுவதும் காய்ந்த பிறகு உங்கள் மேக்கப் தொடங்குங்கள்.

சரியான வரிசை
நீங்கள் வாங்கும் கன்சீலர் பொறுத்தே உங்களுடைய மேக்கப் முறை அமைய வேண்டும். நீங்கள் லீகுய்ட் மற்றும் கிரீம் கன்சீலர்களை பயன்படுத்தும் போது பவுண்டேசன் பின்னாலும் பேஷ் பவுடர்க்கு முன்பு பயன்படுத்த வேண்டும். இப்போது உங்களுக்குத் தேவையான கன்சீலர் எது என்பதை தேர்வு செய்து இருப்பீர்கள். அவற்றை வாங்கி உங்கள் கரும்புள்ளிகளை மறைத்து அழகான சருமத்தை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications
