Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
நீங்க வீட்டிலேயே செய்யும் 'இந்த' ஃபேஷியல் உங்களுக்கு பளபளப்பான மின்னும் சருமத்தை தருமாம்...!
ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள். தயிர், தேன் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இது சீரற்ற சரும நிறத்தை போக்கி ஊட்டச்சத்தை அளிக்கக் கூடிய ஸ்டெப்
நாம் அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அழகாக இருக்க பேஷியல் செய்வது தற்போது பேஷனாகி வருகிறது. பேஷியல் என்றதும், ஆயிரக்கணக்கில் செலவு செய்துதான் ஃபேஷியல் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டிலேயேவும் குறைந்த செலவில் நிறைவாகவும் ஃபேஷியல் செய்யலாம். முதலில் முகத்தின் சருமம் சுவாசம் பெற அழுக்குகளை நீக்கி சருமத் துளைகளைத் தூண்டிவிட வேண்டும். அதற்கு முகத்திற்கு சரியான பராமரிப்பும், மசாஜும் அவசியம். இவை இரண்டும் ஒன்று சேர கிடைப்பதுதான் ஃபேஷியல். அதற்காக பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

முகத்திற்கு சிகிச்சையளிப்பது வாழ்க்கையின் சிறிய ஆடம்பரங்களில் ஒன்றாகும். கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், ஸ்பா மற்றும் சலூன்களுக்குச் செல்வது பாதுகாப்பானதாக இல்லாதபோது, வீட்டிலேயே ஃபேஷியலைத் தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும். வீட்டிலேயே சரியான ஃபேஷியல் செய் முகத்தை ஒளிர வைக்க செய்வது எப்படி என்று இக்கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கிளென்சர்
முதலில் முகத்தில் மேற்சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். அதற்கு முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ற கிளென்சரை பயன்படுத்தி வட்ட வாக்கில் முகத்தில் மசாஜ் போல் செய்து அழுக்குகளை நீக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நீங்கள் மேக்-அப் அணிந்திருந்தால், முதலில் மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்தி அதை அகற்ற வேண்டும். அதன் பிறகு, உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை ஃபேஸ் வாஷ் மூலம் அகற்றி முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

எக்ஸ்ஃபோலியேட்
எக்ஸ்ஃபோலியேட் மிக முக்கிய படியாகும். இது முகத்தில் சருமத்துளைகளை அடைத்துக் கொண்டிருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை தெளிவுபடுத்தும். சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டரை தேர்வு செய்து முகத்தில் தடவி மசாஜ் போல் 2 நிமிடங்கள் சீராகத் தேய்க்கவும். அதற்காக அதிக நேரம் செய்யக் கூடாது. இது சருமத்தின் மென்மையை பாதிக்கும். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, இறந்த செல்கள் நீங்கிய பின் முகத்தில் ஏற்படும் பொலிவை நீங்களே உணர்வீர்கள்.

ஸ்க்ரப்
சந்தையில் கிடைக்கும் எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப்களை நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவது எப்போதும் நன்மை பயக்கும். காபி மற்றும் அலோ வேரா க்ளியர் ஜெல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யலாம்.

நீராவி
இப்போது உங்கள் முகம் புதிதாக உரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது ஸ்டீமரைப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே இந்த ஸ்டீமரையும் பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வெதுவெதுப்பான நீரை ஒரு கிண்ணத்தில் நிரப்பவும். தண்ணீர் கொதிக்காமல் பார்த்துக் கொள்ளவும். நறுமணத்துடன் இருக்க ஏதேனும் நறுமண எண்ணெயையும் ஒரு சொட்டு இதில் சேர்த்துக் கொள்ளலாம். கட்டாயம் இல்லை. முகத்தில் வடியும் வேர்வையை காட்டன் துணி கொண்டு அவ்வபோது துடைத்து விட வேண்டும். அது உங்கள் முகத்தில் வைக்கும் அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கிறதா என்று சோதிக்கவும். உங்கள் முகத்தில் மெதுவாக தடவுவதன் மூலம் ஐந்து நிமிடங்களுக்கு நீராவியை அனுபவிக்கவும்.

டோனர்
இது மேலே நீங்கள் செய்த அத்தனை ஸ்டெப்புகளிலும் பெற்ற பலனைப் பாதுகாக்க உதவும் ஸ்டெப்பாகும். ஆம் , உங்களின் சருமத் துளைகளை இறுகச் செய்து அழுக்குகள் உட்புகுந்து முகப்பருக்கள் ஏற்படாமல் இருக்க உதவும். டோனரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் சீராக துடைத்து எடுத்து விடுங்கள். இரண்டு வைப்புகளுக்கு ஒரு முறை புதிய பஞ்சை பயன்படுத்துங்கள்.

கரும்புள்ளிகளை நீக்கவும்
உங்கள் பிளாக்ஹெட்ஸை அகற்ற நீங்கள் ஒரு பிரித்தெடுக்கும் கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை கவனமாக செய்யுங்கள். உங்கள் விரல்களைப் பயன்படுத்தி கரும்புள்ளிகளைப் பிரித்தெடுக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் கைகளை கழுவி, உங்கள் விரல்களை ஒரு டிஷ்யூ அல்லது டாய்லெட் பேப்பரில் மடிக்கவும். காமெடோவைச் சுற்றி உங்கள் விரல்களை வைத்து, கரும்புள்ளிகளை அகற்றவும்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள். தயிர், தேன் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இது சீரற்ற சரும நிறத்தை போக்கி ஊட்டச்சத்தை அளிக்கக் கூடிய ஸ்டெப் ஆகும். இதனால் உங்கள் மனமும் ரிலாக்ஸாகி முகமும் தெளிவாகும். ஃபேஸ் மாஸ்கை பிரெஷில்தான் அப்ளை செய்ய வேண்டும். முகம் முழுவதும் சீராக இந்த மாஸ்கை அப்ளை செய்யுங்கள். கண்கள் மற்றும் வாய்க்கு மிக அருகில் அப்ளை செய்யக் கூடாது. ஃபேஸ் மாஸ்க்கை உங்கள் முகத்தில் 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு, ஈரமான துணியால் அகற்றவும்.

ஈரப்பதம் மற்றும் மசாஜ்
உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சரைசரை ஒரு நல்ல அடுக்கில் தடவி, உங்கள் முகத்தை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. ஜேட் ரோலர், குவா ஷா கருவி அல்லது உங்கள் விரல்களைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை மசாஜ் செய்யலாம்.

இறுதிகுறிப்பு
மேலே குறிப்பிட்ட ஸ்டெப்புகளை முறையாக செய்தால், உங்கள் முகம் பார்லர் சென்றாலும் கிடைக்காத பளபளப்பை பெற்றுவிடும். வாரம் ஒரு முறை வீட்டில் ரிலாக்ஸாக இதையெல்லாம் முயற்சி செய்யுங்கள். உங்கள் சருமம் எந்த வித நச்சுகளாலும் பாதிப்படையாமல் என்றும் இளமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











