For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி அன்னிக்கு பளிச்சுன்னு வெள்ளையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...

சரும அழகை அதிகரிக்க அழகு நிலையங்களில் உள்ள பொருட்கள் மட்டுமின்றி, நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களும் உதவும்.

|

தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. தீபாவளி அன்று பட்டாசுக்களை வெடிக்க, பலகாரங்களை சுவைக்க மட்டும் விரும்பமாட்டோம், அழகாக ஜொலிக்கவும் தான் விரும்புவோம். பொதுவாக பெண்கள் பண்டிகை காலங்களில் அழகாக ஜொலிப்பதற்கு அழகு நிலையங்களுக்கு சென்று தங்கள் அழகை மேம்படுத்துவார்கள். ஆனால் கொரோனா பரவ ஆரம்பித்த பின் அழகு நிலையங்களுக்கு செல்ல பயந்து, பெரும்பாலான பெண்கள் அங்கு செல்வதையே நிறுத்திவிட்டனர். அதோடு வீட்டிலேயே தங்களின் அழகை மேம்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர்.

DIY Last Minute Home Face Packs Will INSTANTLY Brighten Your Skin

சரும அழகை அதிகரிக்க அழகு நிலையங்களில் உள்ள பொருட்கள் மட்டுமின்றி, நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களும் உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வருட தீபாவளி அன்று பளிச்சென்று ஜொலிக்க அழகு நிலையம் செல்ல முடியவில்லை என்று நீங்கள் வருத்தம் கொள்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் கீழே சரும நிறத்தை உடனடியாக அதிகரித்து உங்களை பளிச்சென்று காட்டும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தீபாவளி அன்று காலையில் முகத்திற்கு போட்டாலே போதும், நீங்கள் பிரகாசமாக ஜொலிப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடலை மாவு ஃபேஸ் பேக்

கடலை மாவு ஃபேஸ் பேக்

சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, உடனடி பொலிவைத் தரும் ஃபேஸ் பேக்குகளுள் ஒன்று தான் கடலை மாவு ஃபேஸ் பேக். அதிலும் எண்ணெய் பசை மற்றும் காம்பினேஷன் சருமத்தினருக்கு கடலை மாவு ஃபேஸ் பேக் நல்ல மாற்றத்தைத் தரும். இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு, ஒரு பௌலில் சிறிது கடலை மாவை எடுத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

பாதாம் மற்றும் பால்

பாதாம் மற்றும் பால்

உங்கள் சரும நிறம் உடனே அதிகரித்து காண வேண்டுமானால், 2-4 பாதாமை பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி ஃபேஸ் பேக் போட்டால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழ ஃபேஸ் பேக்

நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை கையால் மசித்து, அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவிவிட்டு, துடைத்துவிடுங்கள். அதன் பின் தயாரித்து வைத்துள்ள வாழைப்பழ கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சருமம் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும்.

பேக்கிங் சோடா ஃபேஸ் பேக்

பேக்கிங் சோடா ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தும் முன், முதலில் மணிக்கட்டில் பயன்படுத்தி, அலர்ஜி ஏதேனும் ஏற்படுகிறதா என்று சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

ரோஸ்வாட்டர் மற்றும் கடலை மாவு பேக்

ரோஸ்வாட்டர் மற்றும் கடலை மாவு பேக்

கடலை மாவு சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவுகிறது. அதற்கு 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவில் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். உங்களுக்கு வேண்டுமானால், இதில் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

கருமையடைந்த காணப்படும் முகத்தை பளிச்சென்று பொலிவாக்க, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி ஃபேஸ் பேக்

பப்பாளி ஃபேஸ் பேக்

பப்பாளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான பழம். அந்த பப்பாளியின் ஒரு துண்டை நன்கு மசித்து, அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை பண்டிகை நாட்களில் போட்டால், முகம் பளிச்சென்று அழகாக காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Last Minute Home Face Packs Will INSTANTLY Brighten Your Skin

Diwali 2020: These DIY last minute home face packs will INSTANTLY brighten and glow your skin. Read on...
Desktop Bottom Promotion