Latest Updates
-
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம்
பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க...
கடலை மாவு அனைத்து சருமத்தினரும் பயன்படுத்த ஏற்றது. அதுவும் இந்த கடலை மாவை ஒருசில பொருட்களுடன் சேர்த்து கலந்து ஃபேஸ் பேக் போட்டால் பல சரும பிரச்சனைகளை போக்கி, சருமத்தின் அழகை மேம்படுத்தலாம்.
கடலை மாவு சமையலில் மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பழங்காலத்தில் நம் முன்னோர்களின் அழகின் ரகசியத்திற்கு காரணமாக இருந்தது கடலை மாவு தான். சொல்லப்போனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் சோப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவை தான் பயன்படுத்தினார்கள். கடலை மாவு நமது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதில் சரும கருமையைப் போக்குவது, எண்ணெய் பசையை குறைப்பது, சருமத்தில் வளரும் முடிகளை நீக்குவது, முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவது, தழும்புகளை மறைப்பது, முதுமையை எதிர்ப்பது போன்றவை அடங்கும்.

கடலை மாவில் ஏராளமான ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்து, சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. இத்தகைய கடலை மாவு அனைத்து சருமத்தினரும் பயன்படுத்த ஏற்றது. அதுவும் இந்த கடலை மாவை ஒருசில பொருட்களுடன் சேர்த்து கலந்து ஃபேஸ் பேக் போட்டால் பல சரும பிரச்சனைகளை போக்கி, சருமத்தின் அழகை மேம்படுத்தலாம். இப்போது ஒருசில கடலை மாவு ஃபேஸ் பேக்குகளைக் குறித்து காண்போம்.

பொலிவான சருமத்தைப் பெற...
உங்கள் முகம் பொலிவிழந்து உள்ளதா? அப்படியானால் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பால், 2 துளிகள் கிளிசரின் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

கருமையான தழும்புகளைப் போக்க...
உங்கள் முகத்தில் அசிங்கமாக கருமையான தழும்புகள் அதிகமாக உள்ளதா? அப்படியானால் அதைப் போக்க ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பேஸ்ட் செய்ய தேவையான அளவு தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பிம்பிளைப் போக்க...
உங்களுக்கு பிம்பிள் அதிகமாக வருமா? மற்றும் அந்த பிம்பிள் உங்கள் முகத்தில் அசிங்கமான வடுக்களை விட்டு செல்கிறதா? அப்படியானால் அவற்றைத் தடுக்க, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வலிமிக்க பருக்களுக்கு...
உங்களுக்கு அடிக்கடி சீழ் நிறைந்த மற்றும் வலிமிக்க பருக்கள் வருமா? அவற்றைத் தடுக்க வேண்டுமானால், ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கருவளையத்தைப் போக்க...
உங்களுக்கு கருவளையம் உள்ளதா? அந்த கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? அப்படியானால் அவற்றைப் போக்க, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, டீ டிகாசனை சிறிது ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எண்ணெய் பசையைப் போக்க...
உங்கள் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக உள்ளதா? எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிந்தவாறு உள்ளதா? அப்படியானால் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவில் 2-3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, ரோஸ் வாட்டரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்துங்கள்.

கருமையை நீக்க...
உங்கள் முகம் கருப்பாக உள்ளதா? உங்கள் முகத்தில் உள்ள கருமையைப் போக்க, ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

சரும சுருக்கத்தைப் போக்க..
உங்கள் முகத்தில் முதுமைக் கோடுகள், சுருக்கங்கள் தெரிய ஆரம்பிக்கிறதா? அவற்றைப் போக்க வேண்டுமா? அப்படியானால் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த சருமம் இளமையாக காட்சியளிக்கும்.



Click it and Unblock the Notifications