Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
முழங்கை அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க...
முழங்கையில் உள்ள கருமையைப் போக்க பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அதுவும் நமது சமையலறையில் உள்ள சில பொருட்களை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தியை கொண்டுள்ளன.
நாம் அனைவருமே அழகாக இருக்க விரும்புவோம். அதற்காக சரும அழகை மேம்படுத்த பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதுவும் நாம் பெரும்பாலும் முகம், கை, கால்களுக்கு தான் அதிக பராமரிப்புக்களைக் கொடுப்போம். இதனால் இப்பகுதிகள் அதிக கருமையாக இருக்காது. ஆனால் உடலிலேயே நாம் அதிகம் பராமரிப்புக்களை கொடுக்காத பகுதி என்றால், அது முழங்கைகள் தான். நிறைய பேர் தங்களின் முழங்கைகள் கருமையாக உள்ளது என்று, அவற்றை மறையும் வகையில் ஆடைகளை அணிவார்கள். எத்தனை நாட்கள் இப்படி மறைக்க முடியும்.

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அதுவும் நமது சமையலறையில் உள்ள சில பொருட்களை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தியை கொண்டுள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், முழங்கையில் உள்ள கருமையை போக்கி, வெள்ளையாக்கலாம். இப்போது அந்த இயற்கை வழிகள் சிலவற்றைக் காண்போம் வாருங்கள்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளதால், இவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, சரும கருமை விரைவில் நீங்கும். அதற்கு சிறிது எலுமிச்சை சாற்றினை எடுத்து, அவற்றை கருமையாக உள்ள முழங்கையில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்
நாம் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயை முழங்கை பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் பால்
மஞ்சள் இயற்கையாகவே சரும கருமையைப் போக்கும் பண்புகளை கொண்டது. அந்த மஞ்சள் தூள் சிறிது எடுத்து, பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக இருக்கும் முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய முழங்கை கருமை காணாமல் போகும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஒரு அற்புதமான மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, சரும கருமையைப் போக்கும் திறன் கொண்டது. அந்த கற்றாழை ஜெல்லை முழங்கையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், முழங்கையில் இருக்கும் கருமையை வேகமாக மறையச் செய்யலாம்.



Click it and Unblock the Notifications
