For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்

சருமத்தில் கொலஜான் என்னும் வேதிப்பொருளை அளித்து சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் விட்டமின் சி தருகிறது. முகப்பொலிவையும், சருமப்பொலிவையும் விரும்பும் பெண்களுக்கு அதைப் பராமரிக்க எண்ணற

By Haribalachandar Baskar
|

சருமத்தில் கொலஜென் என்னும் வேதிப்பொருளை அளித்து சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் விட்டமின் சி தருகிறது. முகப்பொலிவையும், சருமப்பொலிவையும் விரும்பும் பெண்களுக்கு அதைப் பராமரிக்க எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. பேஸ்ட்களை உருவாக்கி சருமத்தில் தேய்த்துக் கொள்வது உட்பட அனைத்தும் நேரச்செலவை ஏற்படுத்துகின்றன.

 Vitamin C-Rich Drink Recipes

தொடர்ச்சியாக அலுவலகம் செல்பவர்களால் இதை சரிவர செய்யமுடியாது. அந்தக் குறைகளை நீக்குவதற்குத் தான் விட்டமின் சி நிறைந்த பழங்களின் கலவையைக் கொண்டு உருவாக்கப்படும் ஜூஸ்கள் இருக்கின்றன. இதை சரியான டயட்டாக எடுத்துக் கொள்ளும் போது வெளிப்புற பூச்சுக்களுக்கு இணையான பயன்களை அடைய முடியும். வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்ச், கிவி, எலுமிச்சை, அன்னாசி, மா ஆகியவறைக் கொண்டு தனித்தனியான பழங்களின் பழச்சாறாக இல்லாமல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பழங்களின் கூட்டுச் சாறாக 5 ரெசிபிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ் மற்றும் டீ-டாக்ஸ் ரெசிபி

ஆரஞ் மற்றும் டீ-டாக்ஸ் ரெசிபி

ஆரஞ்சு பழங்களை உண்ணும் போது தான் முழுமையான வைட்டமின் -சி சத்துக்களை பெற முடியும். ஆரஞ்சு பழங்களில் தான் 100 கிராமில் 64 % சதவீதம் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஆரஞ்ச் கேரட், எலுமிச்சை மற்றும் இஞ்சி கலந்து உருவாக்கப் படுகின்ற ஜூஸில் மஞ்சளும் இடம் பெறுவதால் தோலுக்கு பலன் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது.

மாம்பழ கிவி ஃஃப்யூஸ் ரெசிபி

மாம்பழ கிவி ஃஃப்யூஸ் ரெசிபி

ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக மாம்பழம் ஒரு நாளைக்குத் தேவையான 60 சதவீத விட்டமின் - சி சத்தைக் கொண்டுள்ளது. இந்தக் கோடைகாலத்து மாம்பழத்தோடு கிவியும் சேரும் பொழுது உங்கள் தோலின் சருமப் பொலிவை மேலும் மெருகூட்டுவதற்குப் பயன்படுகிறது.

MOST READ:இன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்...

புதினா, கிவி, எலுமிச்சை ரெசிபி

புதினா, கிவி, எலுமிச்சை ரெசிபி

கிவியும் எலுமிச்சையும் மிகச்சிறந்த வைட்டமின் சி சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. இதனுடன் புதினா சேரும் போது புத்துணர்ச்சியை அளிக்கிறது. மேலும் உடல் சூட்டைத் தவிர்க்க மிகப்பெரிய பங்காற்றுகிறது. இதனால் சருமத்தை வெப்பத்தினால் வருகிற அனைத்து விதமான நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள இது உதவுகிறது.

 குளிர்விக்கப்பட்ட மா சூப்

குளிர்விக்கப்பட்ட மா சூப்

மாம்பழங்களை வைத்து செய்யப்படும் மற்ற பழச்சாறுகளைப் போல் அல்லாமல் இது இருக்கிறது. குளிர்விக்கப்பட்ட மாம்பழ சூப்பில் மாம்பழம், பழுத்த தக்காளியோடு சேர்த்து செய்யப்படுகிறது. இதில் வைட்டமின் சி காம்போக்கள் நிறைந்துள்ளன. தக்காளிக்கு பதிலாக எலுமிச்சை சாறையும் இதோடு கலந்து சூப் தயாரிக்கப்படுகிறது.

MOST READ:தெரிஞ்சே ஒரு வருஷம் கெட்டுப்போன உணவை மட்டும் சாப்பிடும் மனிதர்... இப்படியொரு மனுஷனா?

அன்னாசி பன்னா

அன்னாசி பன்னா

அன்னாசிப்பழம் வைட்டமின் சி நிறைந்த மேலுமொரு பழமாகும். இதில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் சி-யில் 79% சதவீதத்தை அன்னாசி மட்டுமே தருகிறது. அன்னாசிப் பன்னாவில் வறுத்த சீரகம், கருப்பு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Delicious Vitamin C-Rich Drink Recipes for Skin

Vitamin C is an important vitamin required for the health of the skin and hair, as well as a healthy immunity.In this article we are sharing about 5 Delicious Vitamin C-Rich Drink Recipes For Skin
Story first published: Thursday, July 18, 2019, 19:21 [IST]
Desktop Bottom Promotion