Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஷேவ் செய்த பின்னும் சருமம் வழுவழுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
பாதுகாப்பான முறையில் ஷேவ் செய்வதற்கான பத்து வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை முயற்சி செய்து பயன்பெறுங்கள்.
நாம் என்ன தான் முயன்றாலும் ஒரு வழுவழுப்பான ஷேவிங் செய்வது என்பது கடினமான காரியமாகவே இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் விளம்பரத்தில் வருவது மாதிரி மென்மையான சருமத்தை பெற நாமும் எவ்வளவோ முயற்சிப்போம். நம்முடைய ஷேவிங் க்ரீம், ஷேவிங் ஸ்டைல் இப்படி எல்லாவற்றை மாற்றியும் நாம் எதிர்பார்த்த பலன் நமக்கு கிடைப்பதில்லை.

ஷேவிங்
ஒரு மென்மையான பாதுகாப்பான ஷேவிங்கை பெற நிறைய வழிகள் இருக்கின்றன என்று கிளீவ்லேண்ட் கிளினிக்கின் அழகியல் நிகழ்ச்சியின் மேலாளர் சோண்ட்ரா பவல் கூறுகிறார். உங்களின் தேவையற்ற முடிகளை நீக்க அனைத்து வகைகளிலும் ரேசர் முறை சிறந்தது என்கிறார் அவர். ரேசரை பயன்படுத்தி முடிகளை நீக்குவது இலகுவாகவும் எளிதாகவும் இருக்கும் என்கிறார் அவர்.
உங்களுக்கு நெருக்கமான ஷேவ் செய்ய வேண்டும் என்றால் கீழ்க்கண்ட 10 குறிப்புகளை பின்பற்றுங்கள்.

வறண்ட சருமத்தில் ஷேவ் செய்யாதீர்கள்
வறண்ட சருமத்தின் மீது ஷேவ் செய்யும் போது காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.இதனால் எரிச்சல் ஏற்படும். உங்கள் சருமத்தை மென்மையாக இறந்த செல்களை நீக்கி வழுவழுப்பாக வைக்க ஷேவிங் பெரிதும் பயன்படுகிறது. இப்படி மென்மையான சருமம் கிடைக்க குளித்து முடித்த பிறகோ அல்லது குளிக்கும் நேரங்களிலோ ஷேவிங் செய்யலாம். உங்களுடைய சருமம் கண்டிப்பாக 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது வறண்ட சருமம் நீங்கி மென்மையான ஷேவிங்கை நீங்கள் பெறலாம் என்று பவல் கூறுகிறார்.

இறந்த செல்களை நீக்குதல்
ஷேவிங் செய்வதற்கு முன் கண்டிப்பாக ஸ்க்ரப் கொண்டு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி கொள்ளுங்கள். காரணம் இறந்த செல்களை நீக்காமல் ஷேவிங் செய்யும் போது அதுவே தடையாக இருக்கும். மேலும் நாம் நினைத்த மாதிரி வழுவழுப்பான ஷேவிங் கிடைக்காது.

குளிரான நீர்
நீங்கள் நீண்ட நேரம் சருமத்தை சூடான நீரில் வைக்க கூடாது. உங்கள் சருமம் சூடான நீரில் நீண்ட நேரம் இருந்தால் மென்மையாகி விடும். இதனால் ஷேவிங் செய்யும் எளிதாக காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஷேவிங் செய்வதற்கு முன்பு சரும லேசான குளிர்ந்த நீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

ஷேவிங் க்ரீம்
நிறைய பெண்கள் மற்றும் ஆண்கள் ஷேவிங் க்ரீம்க்கு பதிலாக சோப்பு சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் சோப்பை பயன்படுத்தும் போது ஷேவிங் செய்த பிறகு உங்கள் சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளது.
பிரத்யேகமான ஷேவிங் க்ரீம் அல்லது ஹேர் கண்டிஷனர் அல்லது பாடி ஆயில் போன்றவற்றை பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்கிறார் பவல். இது உங்கள் சருமத்தை மென்மையாக வைக்க உதவும்.

பெண்கள்
பெண்கள் ஆண்கள் பயன்படுத்தும் ரேசரை பயன்படுத்தக் கூடாது. பெண்கள் ஆண்களுக்கான ஷேவிங் க்ரீம் மற்றும் ஜெல்லை பயன்படுத்துகிறார்கள். இது சரியானது கிடையாது. ஏனெனில் ஆண்களுக்கான ஷேவிங் ஜெல் அவர்களின் முடியின் வளர்ச்சி தன்மைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு இருக்கும். எனவே இதை பெண்கள் தங்கள் உடம்பில் உள்ள முடிகளை நீக்க பயன்படுத்துவது சரியானது கிடையாது.

ஷேவிங் செய்யும் திசை
உங்களுக்கு நெருக்கமான ஷேவ் செய்ய வேண்டும் என்றால் முடிகள் வளர்ந்துள்ள திசைக்கு எதிர் திசையில் ஷேவ் செய்ய வேண்டும். உதாரணமாக முடிகள் கீழ்நோக்கி வளர்ந்து இருந்தால் நாம் மேல்நோக்கி ஷேவ் செய்ய வேண்டும்.
அக்குள் பகுதியில் இருக்கும் முடிகளை கூட நீங்கள் மேல்நோக்கி நீக்கினால் வேர் வரை நீக்கம் செய்யப்பட்டு மென்மையான ஷேவிங் கிடைக்கும்.

சரும துளைகளை அடையுங்கள்
வெதுவெதுப்பான நீர் உங்கள் சரும துளைகளை திறந்து விடும். ஷேவ் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவி விடுங்கள். இதனால் துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகள், சோப்பு நுரைக்க எல்லாம் நீங்கி விடும். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விடுங்கள். துளைகள் மூடி விடும். உடனடியாக மாய்ஸ்சரைசர் கொண்டு தடவி விட்டால் வறண்ட சருமம் இல்லாமல் அழகான சருமம் கிடைக்கும். சரும நிறமாற்றம் அடையாமல் இருக்கக் கூட க்ரீம்களை தடவிக் கொள்ளுங்கள்.
வேக்ஸ் போன்ற ஹேர் ரீமுவல் முறையில் வேக்ஸை கொண்டு முடிகளை நீக்கிய பிறகு சரும துளைகள் திறந்திருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் சரும நிறமாற்றும் லோசனை தடவும் போது அது சரும துளைகளுக்குள் சென்று ஒரு ஒடுங்கிய தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.

அடர்ந்த முடி வளரும்
ஷேவிங் செய்தால் முடி அடர்த்தி யாகும், வேகமாக வளரும் என்ற இது போன்ற கட்டுக்கதைகளை நம்பாதீர்கள். இது உண்மை கிடையாது
ஷேவிங் செய்த பிறகு முடிகள் அடர்ந்தியாகவும் வேகமாக வளர்கிறது போன்று தோன்றுதல் ஒரு வித கற்பனை மட்டுமே. முடி களின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி என்பது உங்கள் உடற் செயல்களை பொருத்து மட்டுமே. ஷேவிங் செய்வதால் எதுவும் மாறுவது கிடையாது.

சூரியனிடமிருந்து சரும பாதுகாப்பு
சன் ஸ்கிரீனை எப்பொழுதும் பயன்படுத்துங்கள்.ஏனெனில் ஷேவ் செய்த பிறகு உங்கள் சருமம் மிகவும் சென்ஸ்டிவ் ஆக இருக்கும். இதனால் சூரியக் கதிர்களால் சருமம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
ஷேவிங் செய்த பிறகு 24 மணி நேரம் வரை சருமத்தில் சூரிய ஒளி நேரடியாக படாதவாறு பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் நீச்சல் குளத்திற்கு சென்றாலோ அல்லது வெளியில் சென்றால் கூட SPF 30 சன் ஸ்கிரீன் லோசனையாவது பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று பவல் கூறுகிறார்.

ரேசரை அடிக்கடி மாற்றுங்கள்
ஷேவிங் செய்த பிறகு சருமத்தில் உள்ள நிறைய அழுக்குகள் தூசிகள் எல்லாம் ரேசரில் தேங்கிக் போய் இருக்கும். இதை நீங்கள் என்ன தான் நீரில் கழுவினால் கூட போகாது. எனவே அடிக்கடி ரேசரை மாற்ற தவறாதீர்கள்.
ஷேவிங் செய்யும் போது சின்னதா காயங்கள் ஏற்பட்டாலும் பாக்டீரியா அதன் வழியாக நுழைய வாய்ப்புள்ளது. எனவே கவனமாக மெதுவாக ஷேவிங் செய்யுங்கள்.
மேற்கண்ட முறைகள் உங்களுக்கு ஒரு மென்மையான ஷேவிங் அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் பவல்.



Click it and Unblock the Notifications











