Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
இளைஞர்களின் முகத்தில் ஏற்பட கூடிய பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் #நச்சுனு 6 டிப்ஸ்..!
ஆண்களின் முகத்தை பராமரிக்க பல வேதி பொருட்கள் இருந்தாலும், இயற்கை ரீதியான பொருட்களே என்றுமே சிறந்தது. முகப்பருக்கள், கருமை, அழுக்குகள் போன்ற பல பிரச்சினைகளுக்கும் நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வை கண்டிபிடித்து விடலாம்.

டீன் பருவத்தில் உள்ள இளைஞர்களுக்கு முக சருமம் மிக மென்மையாகவும், கடினமாக கூடிய தருவாயில் இருக்கும். ஆனால், இந்த கால கட்டத்தில் எந்த கிரீம்களையும் பயன்படுத்தி முகம் சார்ந்த பிரச்சினைகளை வரவழைத்து கொள்ளாதீர்கள். இந்த பதிவில் கூறும் குறிப்புகளை பயன்படுத்தி முக அழகை பொலிவாக்கிடுங்கள் நண்பர்களே.

சுருக்கங்களை வராமல் தடுக்க
இளம் வயதிலே முகத்தில் சுருக்கங்கள் வந்தால் பலருக்கும் கஷ்டமாக தான் இருக்கும். இதனை எளிதில் சரி செய்ய கூடிய முறை இந்த குறிப்பில் உள்ளது.
தேவையானவை :-
பப்பாளி விதை 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
கடலை மாவு 1 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் பப்பாளி விதைகளை கடலை மாவுடன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் சுருக்கங்கள் இறுக்கமாகும். எனவே எப்போதும் இளமையான சருமத்தை பெறுவீர்கள்.

அழுக்குளை நீக்க
மீண்டும் உங்கள் முகத்தை வெண்மையாகவும், பொலிவாகவும் மாற்ற இந்த குறிப்பு நன்கு உதவும். இதற்கு தேவையானவை..
அரிசி மாவு 1 ஸ்பூன்
யோகர்ட் 2 ஸ்பூன்
ஸ்ட்ராவ்பெர்ரி சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் ஸ்ட்ராவ்பெரியை நன்கு மசித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் அரிசி மாவு மற்றும் யோகர்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும். மேலும், முகம் மினுமினுப்பான பொலிவை பெற செய்யும்.

கருவளையங்கள் மறைய வைக்க
உங்கள் முகத்தில் இந்த கருவளையங்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா..? இனி அதற்கான தீர்வை தருகிறது இந்த குறிப்பு.
தேவையானவை :-
பால் 2 ஸ்பூன்
பாதாம் பொடி 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் பாதாம் பொடியை பாலுடன் நன்றாக கலந்து கொள்ளவும். அதன் பின் இந்த கலவையுடன் தேன் சேர்த்து கொண்டு, முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும். அத்துடன் முகம் வெண்மையாகவும் மாறும்.

அரிப்புகள் அற்ற முகத்திற்கு
முகம் எப்போதும் மென்மையாகவும் பார்க்க பொலிவாகவும் இருக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.
தேவையானவை :-
தேன் 2 ஸ்பூன்
அவகேடோ பழ சாறு 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
மாம்பழ சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் அவகேடா மற்றும் மாம்பழத்தை அரைத்து கொண்டு அவற்றின் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகம் மென்மையாகவும், எரிச்சலின்றி இருக்கும்.

முகம் கழுவுதல்
ஆண்களே, எப்போதும் வெளியில் சென்று வீடு சேர்ந்தவுடன் முகம், கை கால்களை கழுவி விட்டு பிறகு, மற்ற வேலைகளை செய்வது சிறந்தது. குறிப்பாக மாசுக்கள் அதிகமானதால் வேப்பிலை போட்ட நீரை பயன்படுத்துவது மிக சிறந்தது, இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை வரவிடாமல் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications