For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பருக்களினால் ஏற்பட்ட வடுக்களை சரி செய்ய இந்த அரிய வகை மூலிகைகளே போதும்...!

|

முகத்தில் பருக்கள் ஏற்பட்டாலே பெரும் தொல்லையாக இருக்கும். இவை முகத்தின் அழகை கெடுப்பதாக பலர் எண்ணுவார்கள். பருக்களை ஒழிக்க பல வகையில் முயற்சி செய்தாலும், அவை விட்டு சென்ற வடுக்கள் அப்படியே இருக்க தான் செய்கிறது.

பருக்களினால் ஏற்பட்ட வடுக்களை சரி செய்ய இந்த அரிய வகை மூலிகைகளே போதும்...!

பருக்களை போக்குவது ஒரு பெரிய வேலை என்றாலும், அதன் வடுக்களை போக்குவது அதை விட பெரிய கஷ்டமாக நாம் கருதுகின்றோம். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது எளிதாக கிடைக்கின்ற இந்த மூலிகைகள். இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இனி அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகம் முழுக்க பருக்களா..?

முகம் முழுக்க பருக்களா..?

முகத்தில் எண்ணெய் பசை அதிகமானால் இது போன்ற பருக்கள் ஏற்பட கூடும். பருக்கள் ஒன்று வந்தாலும் நாம் அதனை குத்தி அதில் இருக்கும் அழுக்கை வெளியேற்றும் போது, அதன் அருகிலே மற்றொன்று வர தொடங்கும். எனவே, இதனை முற்றிலுமாக போக்க மூலிகைகள் கொண்டே ஆயுர்வேத முறைதான் சிறந்தது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

முக பருக்கள் முழுவதையும், அதனால் உண்டான வடுக்களை முற்றிலுமாக குணப்படுத்தவும் இந்த இலவங்க குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையானவை :-

இலவங்க பொடி 1 ஸ்பூன்

தேன் 2 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் இலவங்க பட்டையை பொடி போன்று செய்து கொள்ளவும். அடுத்து, இதனை தேனுடன் கலந்து முகத்தில் பூசி கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் விரைவில் குணமாகி விடும்.

இந்த நிறம் போதுமே..!

இந்த நிறம் போதுமே..!

பருவினால் ஏற்பட்ட வடுக்களை இந்த மஞ்சள் நிறம் கொண்ட மூலிகைகள் சரி செய்து விடும்.

தேவையானவை :-

மஞ்சள் 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

MOST READ: நீங்கள் நல்லது என நினைத்து கொண்டிருக்கும் இவை உங்கள் உயிருக்கே ஆபத்தை தந்து விடும்...!

செய்முறை :-

செய்முறை :-

மஞ்சள் பொடியில் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு கலக்கி கொண்டு முகத்தில் உள்ள வடுகளில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் வடுக்கள் பறந்து போய் விடும்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

முகத்தில் ஏற்பட்டுள்ள பருக்களை ஒழிக்க ஜாதிக்காய் சிறந்த தீர்வாக பயன்படும். மேலும், இது பருக்கள் வருவதையும் தடுக்கும்.

தேவையானவை :-

ஜாதிக்காய் 2 ஸ்பூன்

இலவங்க பொடி 1 ஸ்பூன்

தேன் 3-4 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

ஜாதிக்காய் மற்றும் இலவங்க பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் பருவினால் ஏற்பட்ட வடுக்கள் சரியாகும்.

துளசி வைத்தியம்

துளசி வைத்தியம்

இந்த துளிசியின் மகத்துவம் நாம் நன்கு அறிந்தது தான். எனினும் இது பருவின் வடுக்களையும் குணப்படுத்த கூடியதாம். எப்படி என்பதை இனி அறிவோம்.

தேவையானவை :-

துளசி 10 இலைகள்

வேப்பிலை கொழுந்து 10 இலைகள்

மஞ்சள் 1/2 ஸ்பூன்

MOST READ: வயிறு உப்பி கொண்டே போவதை நம் முன்னோர்களின் முறைப்படி சரி செய்வது எப்படி...?

செய்முறை :-

செய்முறை :-

முதலில் துளசி மற்றும் வேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் மஞ்சள் சிறிது கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பருக்களும் வராது, வடுக்களும் ஏற்படாது.

கற்றாழை இருக்க பயமேன்..!

கற்றாழை இருக்க பயமேன்..!

இந்த கடினமான வடுக்களை போக்குவதற்கு ஒரு எளிய மூலிகை உள்ளது. அதுதான், கற்றாழை. இதன் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொண்டு முகத்தில் வடுக்கள் இருக்கும் இடத்தில் இரவு தேய்த்து கொண்டு மறுநாள் காலையில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் வடுக்கள் மறையும்.

தேங்காய் எண்ணெய் முறை

தேங்காய் எண்ணெய் முறை

தேங்காய் எண்ணெய்யை தலைக்கு மட்டும் தான் பெரிதும் நாம் பயன்படுத்துவோம். ஆனால், இவை நமது முகத்தின் அழகையும் பராமரிக்க உதவுமாம்.

தேவையானவை :-

சர்க்கரை 1 ஸ்பூன்

உப்பு 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் தேங்காய் எண்ணெய்யுடன் உப்பு அல்லது சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை பருக்கள் வந்த வடுகளின் மேல் தடவவும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட பருவின் வடுக்களை விரைவில் நீக்கி விடலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களின் முக அழகிற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Herbs That Will Help You To Heal Acne Scars

Maintaining a healthy skincare routine can prevent acne breakouts.
Story first published: Tuesday, October 30, 2018, 17:44 [IST]
Desktop Bottom Promotion