For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் அசிங்கமாக மேடு பள்ளங்கள் உள்ளதா? அதைப் போக்கும் சில ஃபேஸ் பேக்குகள் இதோ!

இங்கு முகத்தில் அசிங்கமாக உள்ள மேடு பள்ளங்களை சரிசெய்யும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

சிலருக்கு முகத்தில் அசிங்கமாக பள்ளங்கள் காணப்படும். இதற்கு காரணம் சருமத் துளைகள் திறந்து மூடாமல் இருப்பது தான். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அவ்வப்போது வந்து முகத்தின் அழகையே அசிங்கமாக காட்டும். அதுமட்டுமின்றி, இத்தகையவர்களது முகத்தின் எண்ணெய் அதிகம் வழிந்து காணப்படும். இப்படி எண்ணெய் பசை நிறைந்த சருமத்தில் பாக்டீயாக்களின் தாக்கம் அதிகம் இருப்பதோடு, அழுக்குகளும், தூசிகளும் அதிகம் சேரும்.

Natural DIY 2-ingredient Face Packs To Shrink Open Pores

சரி, இப்படி முக அழகை அசிங்கமாக காட்டும் மேடு பள்ளங்கள் நிறைந்த சருமத் துளைகளைப் போக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் முடியும். அதுவும் ஒருசில ஃபேஸ் பேக்குகள் கொண்டு எளிதில் முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்கலாம். அதிலும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைத் தயாரித்து அடிக்கடி பயன்படுத்தினால், திறந்த சருமத்துளைகளை மூடிவிடலாம்.

கீழே ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் பயன்படுத்தி வந்தால், முகத்தில் அசிங்கமாக உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை மற்றும் எலுமிச்சை சாறு

முட்டை மற்றும் எலுமிச்சை சாறு

* ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.

* 15-20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.

பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை

பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை

* 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வையுங்கள்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். பின் பால் கொண்டு முகத்தை துடைத்து, 2 நிமிடம் கழித்து மீண்டும் நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

முல்தானி மெட்டி மற்றும் ஆலிவ் ஆயில்

முல்தானி மெட்டி மற்றும் ஆலிவ் ஆயில்

* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதனை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறையும்.

வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

* சிறிது வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் 4-5 துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதனை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவு வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேன் மற்றும் டீ-ட்ரீ ஆயில்

தேன் மற்றும் டீ-ட்ரீ ஆயில்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் தேனுடன் 3-4 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நீரால் நனைத்து, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணெய்

வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணெய்

* நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

* இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்

சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்

* 1/2 டீஸ்பூன் சந்தன பவுடரை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.

* பின் 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய்

ஓட்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய்

* 1 டீஸ்பூன் வேக வைத்த ஓட்ஸ் உடன், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு மைல்டு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

தயிர் மற்றும் நாட்டுச் சர்க்கரை

தயிர் மற்றும் நாட்டுச் சர்க்கரை

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் தயிருடன், 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறைந்துவிடும்.

மஞ்சள் மற்றும் பால்

மஞ்சள் மற்றும் பால்

* ஒரு சிறிய பௌலில் 1 டீஸ்பூன் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வையுங்கள்.

* பின்பு முகத்தை நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural DIY 2-ingredient Face Packs To Shrink Open Pores

Open pores often cause uneven skin tone, dullness and too much oil. This can lead to the build-up of dirt and impurities on the skin. By using natural DIY 2-ingredient face packs, it can visibly shrink the pores and help you attain a clean and clear skin.
Story first published: Saturday, January 27, 2018, 17:26 [IST]
Desktop Bottom Promotion