பட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா? அப்ப இத மறக்காம செய்யுங்க...

ஒவ்வொரு பெண்ணுக்கும் மென்மையான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதைப் பெறுவதற்காக பல பெண்கள் பல வகையான சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். அதில் அழகு சாதனப் பொருட்கள், ஸ்பா சிகிச்சைகள் மற்றும் சில சமயங்களில் அறுவை சிகிச்சை போன்றவை குறிப்பிடத்தக்கவை. க்ரீம்கள் மற்றும் வழக்கமான முறைகள் வாழ்நாள் முழுவதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்குமா என்றால் கட்டாயம் இல்லை. அப்படியெனில் வாழ்நாள் முழுவதும் மென்மையான சருமத்தைப் பெற வேண்டுமானால் என்ன செய்வது?

Miracle of Honey to Get Smooth Skin

உங்களுக்கு இயற்கையாகவே மென்மையான சருமம் வேண்டுமானால், அதற்கு ஒரு பொருள் அந்த ஆசையை நிறைவேற்றும். அது வேறொன்றும் இல்லை, தேன் தான். இந்த தேனைக் கொண்டு ஒருவர் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம். தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புதமான பொருள். இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-வைரல் போன்ற பண்புகள் ஏராளமாக உள்ளது. இது சருமத்திற்கு தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, சருமத்திற்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, சருமத்தின் இளமைத்தன்மையையும் தக்க வைக்கும்.

சரி, இப்போது தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும், பொலிவாகவும், இளமைத்தன்மையுடனும் இருக்கும் என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் ஃபேஸ் மாஸ்க்

தேன் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* சுத்தமான தேன் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* தேனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

* இந்த செயலை ஒரு நாளைக்கு 1-2 முறை என மூன்று வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.

தேன் மற்றும் பால் ஃபேஸ் மாஸ்க்

தேன் மற்றும் பால் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* தேன் - 1 டீஸ்பூன்

* பால் - 2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் முகத்தை மென்மையாக துடையுங்கள்.

* இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை செய்து வாருங்கள். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மை மேம்படும்.

தேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

தேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் தேன் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.

* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

* இந்த செயலை தினமும் ஒருமுறை என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து, சருமம் மென்மையாகவும், பொலிவோடும் காணப்படும்.

பப்பாளி, சந்தனம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

பப்பாளி, சந்தனம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* கனிந்த பப்பாளி - 1/2 கப்

* சந்தன பவுடர் - 1 டீஸ்பூன்

* தேன் - 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் மிக்ஸியில் பப்பாளியைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த பப்பாளியை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் சந்தனம் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை செய்து வாருங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் தேன் மாஸ்க்

பேக்கிங் சோடா மற்றும் தேன் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்

* தேன் - 1 டீஸ்பூன்

* குளிர்ந்த நீர் - 1 கப்

* வெதுவெதுப்பான நீர் - 1 கப்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் முகத்தில் நீரைத் தெளித்து, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 1- நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

* பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை மேற்கொள்வது நல்லது.

ஓட்ஸ், தேன், பாதாம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

ஓட்ஸ், தேன், பாதாம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* பாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

* ஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10-15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி இந்த மாஸ்க்கை தினமும் ஒருமுறை என வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

முட்டை மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

முட்டை மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* முட்டையின் வெள்ளைக்கரு - 1

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தேன் சேர்த்து நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை மேற்கொண்டு வந்தால், சருமம் எப்போதும் மென்மையாக இருப்பதோடு, இளமைத்தன்மையும் தக்க வைக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, May 3, 2018, 17:40 [IST]
Desktop Bottom Promotion