For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்து, தொடை, அக்குள், பிறப்புறுப்பு - இவற்றில் தோன்றும் 'மரு' ஒரு தோல் நோயா? விவரம் உள்ளே!

மரு என்பது தோல் வியாதி அல்ல; தோலின் சாதாரண மாற்றம் தான். இது வலி மற்றும் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தாத வரை அபாயமில்லை. அப்படி ஏற்படுத்தினால், இவற்றை நீக்குவது அவசியம்; மேலும் இதை மருத்துவ

|

நமது உடலின் பல பாகங்களில் குறிப்பாக கழுத்து, அக்குள், பிறப்புறுப்பு, தொடை போன்ற பகுதிகளில் தோன்றும் ஒரு மென்மையான, சிறிய மேல்தூக்கிய பரு போன்ற சதை அமைப்பு மரு அதாவது ஸ்கின் டேக் என்று அழைக்கப்படுகிறது. இவை 2-5 மில்லி மீட்டர் என சிறிய அளவிலும், 2 முதல் 5 சென்டி மீட்டர் வரை சற்று பெரிதாகவும் வளரக்கூடியவை; இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சருமங்களிலும் தோன்றும்; இந்த மரு கண்ணின் இமைகள் மற்றும் மார்பகத்தின் கீழ்ப்புற பாகங்களிலும் ஏற்படலாம்.

Is skin tag a tumour or skin disease in tamil

இந்த மருக்கள் நடுத்தர வயது ஆண் மற்றும் பெண்களில் மற்றும் குண்டான தேகம் கொண்டவர்களில் அதிகம் காணப்படுகிறது. ஒருவரின் உடலில் நூறுக்கும் மேற்பட்ட மருக்கள் தோன்றலாம்; இந்த மருக்கள் பொதுவாக அனைத்து உயிரினங்களுக்கும் அவர்தம் வாழ்நாளில் ஒருமுறையாவது தோன்றி மறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட ஸ்கின் டேக் எனப்படும் மருக்கள் ஒரு தோல் வியாதியா என்ற சந்தேகம் பலரின் மனதில் நிலவுகிறது. அந்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த பதிப்பினை வழங்குகிறோம்! படித்து பயனடையுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவர்களின் பதில்

மருத்துவர்களின் பதில்

மரு என்றால் என்ன என்று முந்தைய பத்தியில் படித்து அறிந்தோம். இவற்றைக் குறித்து மருத்துவர்களிடம் வினவிய போது, "இது தோல் வியாதி அல்ல; தோலின் சாதாரண மாற்றம் தான். இது வலி மற்றும் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தாத வரை அபாயமில்லை. அப்படி ஏற்படுத்தினால், இவற்றை நீக்குவது அவசியம்; மேலும் இதை மருத்துவ மற்றும் வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி எளிதில் நீக்கிவிடலாம். இதைக்குறித்து எண்ணி தேவையற்ற பயம் கொள்ள வேண்டியதில்லை" என்று கூறினார்கள்.

எதனால் தோன்றுகிறது?

எதனால் தோன்றுகிறது?

இந்த மருக்கள் உடலில் எதனால் ஏற்படுகின்றன என்றால், தெரியாது என்பதே விடையாக கிடைக்கிறது. சில சமயங்களில் மிகவும் அழுத்தமான ஆடை, ஒத்துக்கொள்ளாத ஆபரணங்கள், உள்ளாடைகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகள் மூலமாகவும் இந்த மருக்கள் உடலில் ஏற்படுவதாக நம்பப்படுகிறது; இவை எல்லாம் வெற்று நம்பிக்கையே! இவற்றை நிரூபிக்கும் எந்த சான்றுகளும் இல்லை.

இவை இயற்கையாகவே, உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடியவை. முக்கியமாக கழுத்தின் பின்புறம், அக்குள், கண் இமைகள், மார்பகங்களின் மேல் மற்றும் அடிப்பகுதி, தொடை இடுக்குகள், தொடைகள், பிறப்புறுப்பின் முன் மற்றும் பின் பகுதிகள் போன்ற இடங்களில் ஏற்படுகின்றன. இது எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது உடலில் அதிகமாக ஏற்பட்டிருக்கும் நிலையை அக்கன்தோசிஸ் நைஜிரிஸான்ஸ் என்று அறியப்படுகிறது.

நீக்கினால் அதிகமாகுமா?

நீக்கினால் அதிகமாகுமா?

மருக்களை நீக்கினால், அவை பெருகும் என்ற தவறான கருத்து நம்மிடையே நிலவுகிறது; ஆனால் அது உண்மையல்ல, அதை உண்மை என்று நிரூபிக்கும் எந்த சான்றுகளும் இல்லை. உடலில் தோன்றி இருக்கும் சதை மாற்றம் மருவா இல்லை வேறு எதுவுமா என்ற குழப்பம் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து அறிவது அவசியம்.

ஏனெனில் மரு எவ்வித பாதிப்பையும் உடலில் உண்டாக்காது; ஆனால் அதுவே தோலின் அசாதாரண மாற்றமாக இருந்தால், அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே உடலில் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது நல்லது.

மரு என்பது கட்டியா?

மரு என்பது கட்டியா?

மரு என்பது பாதிப்பு ஏற்படுத்தாத, தீங்கு விளைவிக்காத தோலின் வளர்ச்சி. இவை பொதுவாக புற்றுநோய் வகையையோ அல்லது அதன் செல்களின் வகையையோ சார்ந்தது அல்ல. மிக அரிதான நிலையில், சிலரின் உடல் அமைப்பு காரணமாக மருக்களில் இருந்து இரத்தம் கசிதல், மரு வளர்தல் அல்லது மருவின் நிறம் இளம் சிவப்பு அதாவது பிங்க், பிரௌன், சிவப்பு அல்லது கருப்பு நிறமாக மாறலாம். இந்த மாற்றங்கள் இது சாதாரண மரு அல்ல என்ற குறிப்பை தருகின்றன. இது புற்றுநோய் அதாவது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் தொகுப்பாக மாரி இருக்கும் அபாயம் உண்டு. ஆகையால், இந்த நிலையில் உடனடியாக மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

வேறு எதுவாக இருக்கலாம்?

வேறு எதுவாக இருக்கலாம்?

தோலில் ஏற்படும் இந்த வகையான மாற்றம் மருக்கள் இல்லை என்றால், வேறு என்னவாக இருக்கலாம் என்று ஆராய்ந்தால், அவை சில வித்தியாசமான உடல் மாற்றமாகவோ, நரம்பு மற்றும் நார்க் குழாய்கள் சேர்ந்த மச்சமாகவோ, வார்ட்டுகளாகவோ, பர்னகில்களாகவோ அதாவது அரிசி க்ரிஸிபிகளாவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சாதாரண மருக்களாக உடலில் தோன்றியவற்றை கிள்ளியோ, அது தோன்றியுள்ள உடைத்தாய் அரித்தோ அல்லது சுரண்டியோ பெரிதாக்க கூடாது. இவ்வாறு செய்தல் சாதாரணமாய் தோன்றிய மரு அசாதாரண மாற்றங்களை உடலில் ஏற்படுத்திவிடும் வாய்ப்பு அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is skin tag a tumour or skin disease in tamil

Is skin tag a tumour or skin disease?
Story first published: Saturday, July 21, 2018, 17:06 [IST]
Desktop Bottom Promotion