For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்?...

சன் ஸ்கிரீன் போடாமல் வெயிலில் வெளியே செல்லுவது சருமத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நமது தினசரி மேக்கப்பையும் சன் ஸ்கிரீன் லோச னையும் ஒரு சேர பயன்படுத்துவது என்ற பெரிய கு

By Suganthi Rajalingam
|

கோடை காலம் வந்து விட்டாலே சுட்டெரிக்கும் சூரியனை சமாளிப்பது பெரும் சிரமமாகி விடுகிறது. அதிலும் சன் ஸ்கிரீன் போடாமல் வெளியே செல்லுவது சருமத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல.

how to use sunscreen with makeup

இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நமது தினசரி மேக்கப்பையும் சன் ஸ்கிரீன் லோச னையும் ஒரு சேர பயன்படுத்துவது என்ற பெரிய குழப்பம் நம் மனதில் எழும். அதை தீர்த்து வைப்பது தான் இந்த கட்டுரையின் ஸ்பெஷலே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேக்கப் உடன் சன்ஸ்க்ரீன்

மேக்கப் உடன் சன்ஸ்க்ரீன்

சுத்தப்படுத்துதல்

மேக்கப் போடுவதற்கு முன் முதலில் உங்கள் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ப்ரஷ்ஷான வைப்ஸ் டிஸ்யூ, ரோஸ் வாட்டர் நனைத்த காட்டன் பஞ்சு, மைல்டு க்ளீன்சர் இவற்றை பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தினால் போதும்.

அப்ளே சன்ஸ்க்ரீன்

அப்ளே சன்ஸ்க்ரீன்

இப்பொழுது உங்கள் கைகளில் கொஞ்சம் சன்ஸ்க்ரீனை எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவுங்கள்.இதை அதிகமாக தடவினால் உங்கள் மேக்கப் திட்டு திட்டாக தெரிய வாய்ப்புள்ளது. எனவே குறைந்த அளவு பயன்படுத்தி அதிகப்படியான க்ரீம்யை டிஸ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்து விடுங்கள்.

மேக்கப்

மேக்கப்

இப்பொழுது உங்கள் மேக்கப்பை நீங்கள் தொடங்கலாம். டிரான்ஸூலன்பேஸ் பவுடரை முகத்தில் அப்ளே செய்யும் போது ஒரு நல்ல லுக் கிடைக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் ப்ளாட்டிங் பேப்பரை எப்பொழுதும் கையுடன் வைத்து கொள்ளுங்கள்

தயாராகுதல்

தயாராகுதல்

உங்கள் மேக்கப் மற்றும் சன் ஸ்கிரீன் அளவை சரியாக பயன்படுத்தி உங்கள் முகத்தை அழகுபடுத்தி விட்டாலே போதும் நீங்கள் வெளியில் செல்ல ரெடி.

எப்பொழுது பயன்படுத்த வேண்டும்

சன்ஸ்க்ரீன் SPF 30 யை உங்கள் மாய்ஸ்சரைசர் மற்றும் மேக்கப் போடுவதற்கு முன்பு பயன்படுத்துங்கள். மாய்ஸ்சரைசர் அப்ளே செய்த பிறகு குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மேக்கப் பவுடர் கலைந்து விடாமல் இருக்கவும், சூரிய ஒளிக்கதிர்களுக்கு நல்ல தடுப்பாகவும் அமையும்.

மேக்கப் வகைகள்

மேக்கப் வகைகள்

இப்பொழுது நீண்ட நேரம் களையாத மினரல் மேக்கப் ரெம்ப பாப்புலராக இருப்பதோடு உங்கள் சருமத்தின் உள்புற அடுக்குகளையும் வெயிலிருந்து பாதுகாக்கிறது. இந்த மினரல் மேக்கப்பை சன் ஸ்கிரீனுக்கு மேலாக போடும் போது சூரிய ஒளியால் ஏற்படுகிற கொப்புளங்கள், கருப்பு நிற புள்ளிகள் போன்றவற்றை சருமத்திலிருந்து விரட்டி அடிக்கலாம் என்று பியூட்டி எக்ஸ்பட்ஸ் கூறுகின்றனர்.

செளகரியமாக

செளகரியமாக

இப்பொழுது எல்லாம் கைக்கு அடக்கமான வடிவத்தில் கூட சன் ஸ்கிரீன் SPF 30 - 50 போன்ற லோஷன்கள் கிடைக்கின்றன. இவை உங்கள் சரும அடுக்களை நன்றாகப் பாதுகாக்க உதவுகிறது. எனவே மீட்டிங்கின் போது, நண்பர்களை சந்திக்கும் போது இதை செளகரியமாக கையில் வைத்துக் கொள்ளலாம். உங்கள் சரும வகைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்புறம் இன்னும் ஏன் வெயிட் பண்ணுறீங்க. இந்த முறையை பின்பற்றி இனி வெயில் காலத்திலும் வெளியில் தாராளமாக செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Sunscreen With Makeup?

Love doing makeup during summer months but still worried about sunscreen application? If that is you – the solution to your problem lies within this post. It isn’t very difficult to apply makeup with sunscreen if you know the right technique. We will give the solution for that. Your makeup and sunscreen, both have been applied the right way, and you are now ready
Story first published: Thursday, April 26, 2018, 9:51 [IST]
Desktop Bottom Promotion