Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
முகப்பருக்களை போக்க முலாம் பழத்தை இப்படி பயன்படுத்தினா போதும்.!
எப்போவுமே முகம் முழுக்க பருக்களா இருக்கா..? பருக்கள் உங்க முகத்தையே கெடுக்குதா..? இனி அந்த கவலையை ஒட்டு மொத்தமா ஒழித்து கட்ட ஒரு எளிய வழி இருக்குங்க. அது என்னனு நினைக்குறீங்களா..? ஒரு அற்புத பழத்தை வைத்தே நாம் எளிதில் முக பிரச்சினைகள் அனைத்துமே சரி செய்து விடலாம்.

குறிப்பாக முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக சரி செய்து விடலாம். அதற்கு ஒரே இரு பழம் மட்டும் போதும்க. அது தான் முலாம் பழம். உங்களின் முக பிரச்சினைகள் அனைத்தையும் எளிமையாக சரி செய்ய இந்த பழம் நன்கு உதவும். வாங்க, முலாம் பழத்தின் நச்சுனு 5 டிப்ஸ்களை பார்ப்போம்.

இனிமையான பழம்..!
பலருக்கு இந்த முலாம் பழம் ஜுஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த பழத்தை அப்படியே சாப்பிட்டாலோ அல்லது ஜுஸ் செய்து சாப்பிட்டாலோ மிக சுவையாக இருக்கும். இதில் ஏராளமான பயன்கள் உள்ளது. உடல் ஆரோக்கியம் முதல் முக பிரச்சினைகள் வரை அனைத்தையும் இது சரி செய்து விடும்.

அழுக்குகளை நீக்க
முகத்தில் சேர்ந்துள்ள தூசுகள் மற்றும் அழுக்குகளை நீக்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு தேவையானவை...
தேன் 1 ஸ்பூன்
முலாம் பழம் ஜுஸ் 2 ஸ்பூன்
மஞ்சள் அரை ஸ்பூன்

செய்முறை :-
முதலில் முலாம் பழத்தை சாறு போன்று அரிது கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் மற்றும் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை சாதாரண நீரில் கழுவவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் வெண்மை பெறும்.

எண்ணெய் வடிதலை நிறுத்த
முகத்தில் எண்ணெய் அதிகமாக வடிந்தால், இந்த முலாம் டிப்ஸை வைத்து சரி செய்து விடலாம்.
தேவையானவை :-
முலாம் பழம் ஜுஸ் 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
கடலை மாவு 1 ஸ்பூன்

செய்முறை :-
கடலை மாவு மற்றும் எலுமிச்சையை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் முலாம் பழ சாற்றை கலந்து முகத்தில் பூசி கொள்ளவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு செய்து வந்தால் எண்ணெய் வடிதல் நின்று, பருக்களும் வராதாம்.

முகம் மினுமினுக்க
முகத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வரலாம்.
தேவையானவை :-
பால் பவ்டர் 1 ஸ்பூன்
முலாம் சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-
பால் பவ்டரை முலாம் சாறுடன் கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை முகத்தில் ஃபேஸ் பேக் போல போட்டு கொள்ளவும். 15 நிமிடம் சென்று முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த குறிப்பு உங்கள் முகத்தை பளபளவென மின்னும் சருமத்தை தரும்.

இப்படியும் செய்யலாம்..!
முலாம் பழத்தை சாப்பிட்டாலும் நமது உடலுக்கும் முக அழகிற்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் முலாம் பழத்தை அப்படியேவும் முகத்தில் தடவி மசாஜ் செய்து, முகத்தை கழுவினால் முகம் அழகு பெறும்.
இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications
