சொரியாஸிஸ் வந்தால் எப்படி கண்டுபிடிப்பது?

Posted By: vijaya kumar
Subscribe to Boldsky

குளிர் மற்றும் வெயில் காலங்களில் எல்லோருடைய சருமமும் சற்று வறண்டு போய் வெடிப்புகளாக காட்சியளிக்கும். முகத்தில் கூட தோல் வறண்டு, திட்டு திட்டாகத் தெரிவதோடு, கை, கால் பகுதிகளிலும் தோல் வறண்டு, அரிப்பு ஏற்படுவது போன்ற உணர்வைத் தரும். சோரியாசிஸ் எனப்படும் சொரி சிரங்கும் இதே அறிகுறிகளை கொண்டுள்ளதால், உங்களுக்கு இருப்பது வெறும் வறண்ட தோல் தானா அல்லது சோரியாசிஸா என்பதை தெரிந்துகொள்வது அவசியம். சோரியாஸிசை கண்டுபிடிப்பதற்காக பிரபல தோல் நோய் மருத்துவர்கள் சில அறிகுறிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அந்த அறிகுறிகளை வைத்து வறண்ட சருமம் எது, சொரியாசிஸ் வந்த சருமம் எது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வறண்ட சருமம், சோரியாசிஸ் வேறுபாடு என்ன...?

1. வறண்ட சருமம், சோரியாசிஸ் வேறுபாடு என்ன...?

வறண்ட தோல் என்பது போதிய அளவு கொழுப்பு அமிலங்களும் உடலில் எண்ணெய் தன்மையும் இல்லாமல் இருப்பதால் வருவது. உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாமல் போனால், தோல் வெடிப்புகளாக, திட்டுதிட்டாக, சீரற்ற தன்மையுடன் இருக்கும். இந்த நிலை மேலும் தொடர்ந்து மோசமடைந்தால், போதிய அளவு நீர்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் சுரக்க நாம் முயற்சிகள் மேற்கொண்டாலும் உடல் பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளை சரி செய்து கொள்வதற்கான தன்மையை இழந்துவிடும். இதற்கு காரணம் தோலில் "பேரியர்" செயல்பாடு எனப்படும் தடுப்பு தன்மை தான்.

குளிர்ந்த வானிலை, காற்றில் குறைந்த நீர்ப்பதம், அதிகமாக தண்ணீரால் கழுவுவது, கடினமான சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, அதிக நேரம் கொதிக்கும் நீரில் குளிப்பது, அதிவேகமாக காற்று தொடர்ந்து வீசுவது போன்ற காரணங்களால் வறண்ட சருமம் ஏற்படுகிறது. மேலும் போதிய அளவு ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, தேவையான அளவு நீர் உட்கொள்ளாதது, தைராய்டு பிரச்சனைகள் இருப்பதால் வருவது என பல காரணிகள் சருமம் வறண்டு போக செய்கின்றன.

2. சோரியாசிஸ் என்றால் என்ன?

2. சோரியாசிஸ் என்றால் என்ன?

சோரியாசிஸ் என்பதை வறண்ட சருமம் போல் வெளிப்புற காரணிகளால் ஏற்படுவது அல்ல. சோரியாசிஸ் என்னும் சொரி சிரங்கு, உடலில் நீண்ட நாட்களாக வளரும் நோய் தொற்று. நீரிழிவு, கீழ்வாதம், மன அழுத்தம் போன்ற காரணிகளால் ஏற்படுவது தான் சோரியாசிஸ். உடம்பின் எதிர்ப்பு சக்தி, தேவையற்ற இடங்களில் அதிக சருமச் செல்களை உருவாக்கக்கூறி தவறுதலாக மூளைக்கு தகவல் அனுப்புவதன் மூலம் ஏற்படுகிறது. மேலும் மூன்றில் ஒரு பங்கு சோரியாசிஸால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுக்காரர்களுக்கும் சோரியாசிஸ் இருப்பதாகவும் அதனால் இவர்களுக்கும் வந்துள்ளதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன

தோல் வெடிப்புகளை பற்றி பேசும் போது, பாதங்களில் ஏற்படும் வெடிப்பை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் சோரியாசிஸ் என்பது கொப்பளம் போல் புண்களாக இருக்குமென கோல்டன்பெர்க் தெரிவிக்கிறார். அதிக அளவு தோல் உற்பத்தி ஆவதால் இவ்வாறு வருகிறதாம். இதனால் பிலாக்ஸ் எனப்படும் சிரங்கு ஏற்படுகிறது. இது உடம்பில் எந்த இடத்திலும் உருவாகலாம். உச்சந்தலை, கை, கால் முட்டிகள், பாதங்களில் தான் வருவதாக கூறப்படுகிறது. 80 முதல் 90 சதவிகித சோரியாசிஸ் நோயாளிகளுக்கு படர், சிரங்கு ஏற்படுகிறது. வரண்ட சருமமும் சோரியாசிஸும் ஒன்று போலவே முதலில் தோன்றினாலும், சோரியாசிஸ் என்பது அதிகப்படியான அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும்.

3. வறண்ட சருமத்தை குணப்படுத்துவது எப்படி...?

3. வறண்ட சருமத்தை குணப்படுத்துவது எப்படி...?

வறண்ட சருமத்தை குணப்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளும் சிரத்தை, அது வராமல் தடுக்கவும் எடுத்துக் கொள்வது அவசியம். கொழுப்புச்சத்து, சேரமைன் எனப்படும் மூலப்பொருள் உள்ள சரும பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தோல் தனக்கு தேவையான நீர்ச்சத்தை அதுவே பாதுகாத்துக்கொள்ளும். குளித்து முடித்து ஈரமாக இருக்கும் போது இதனை பயன்படுத்துவது ஈரத்தை தக்க வைக்க பெரும் உதவியாக இருக்கும். மிதமான சூட்டில் குளிக்க பழகிக்கொள்ள வேண்டும். அதிகப்படியான கெமிக்கல் பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள் மற்றும் சோப்புகள் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை அதிக அளவு சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை குறைத்து விடலாம். வீட்டின் படுக்கை அறையில் humidifier என அழைக்கப்படும் ஈரமூட்டிகளை பயன்படுத்துவது சரும பாதுகாப்பிற்கு பெரும் உதவியாக இருக்கும்.

4. சோரியாசிஸுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது...?

4. சோரியாசிஸுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது...?

சோரியாசிஸுக்கு இன்னும் நிரந்தர தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் போதிய அளவு குறைக்க வழிமுறைகள் உள்ளதாக கோல்டன்பெர்க் தெரிவிக்கிறார். படராக வளராமல் தடுக்க சோரியாசிஸை நாம் கட்டுக்குள் வைக்க வேண்டும் என கோல்டன்பெர்க் தெரிவிக்கிறார். மருத்துவரை அனுகி நம் உடல்வாகிற்கு ஏற்ற சரும பாதுகாப்பு கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். மேலும் தீவிர சிரங்கு, படர் ஏற்பட்டவர்கள் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் போட்டுக்கொள்ளவும் நேரிடலாம். எனவே மருத்துவரை அனுகி ஆலோசனை பெறுவது அவசியம். சோரியாசிஸ் உள்ளவர்கள் பெரும்பாலும் உணவு பழக்கத்திலேயே அவற்றை கட்டுப்படுத்தலாம். ஒமேகா 3 அமிலங்கள் இருக்கும் கொட்டை வகைகள், விதைகள், மீன் ஆகியவை உண்பது மிகவும் நல்லது. வைட்டமின் டி அதிகம் இருக்கும் செறிவூட்டப்பட்ட பால், ஆரஞ்சு பழச்சாறு, முட்டைக்கரு, தயிர் பெருமளவு சோரியாசிஸை கட்டுப்படுத்த்த தேவையான சத்துக்களை உடம்பிற்க்கு அளிப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Have Psoriasis Or Just Really Dry Skin?

when temperatures really raise can start to fizzle. Especially indoors. Take a look at our picks for keeping comfortable at home
Story first published: Monday, March 19, 2018, 13:00 [IST]